- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநியாயமான வேண்டுதல் நிறைவேற

நியாயமான வேண்டுதல் நிறைவேற

- Advertisement -

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளும், அதற்குரிய வேண்டுதல்களும் கடவுளிடம் இருக்கும். வேதத்தின் படி ஒருவருடைய நியாயமான வேண்டுதல்கள் மட்டுமே பலிக்கும். நம் இஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும் கடவுளிடம் வேண்டிக் கொள்ள முடியாது. பிரார்த்தனையில் நியாயமும், சுத்தமான பக்தியும் இருக்க வேண்டுமாம். இப்படி நம் நியாயமான வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கு நாராயணர் சொல்லும் எளிய பரிகாரம் பற்றிய ஆன்மீகம் சார்ந்த பக்தி தகவல்களை தொடர்ந்து அறிவோம் வாருங்கள்.

கோவிலுக்கு செல்லும் பொழுது ஏதாவது ஒரு வேண்டுதலை மனதில் நினைத்துக் கொண்டு தான் செல்கிறோம். ஆனால் சிலர் மட்டுமே அந்த வேண்டுதல்களை கடவுளை பார்க்கும் பொழுது சொல்ல முடியும். மற்றவர்கள் கடவுளை பார்த்ததும் புல்லரித்து போய் அப்படியே ஒரு விதமான ஏக்கத்துடனும், கண்ணீருடனும் இறைவனை தரிசித்துவிட்டு வந்து விடுவார்கள். இது தான் உண்மையான பக்தியும் ஆகும்.

- Advertisement -

உண்மையான பக்தி மனதில் இருப்பவர்களுக்கு மட்டுமே கடவுளை பார்க்கும் பொழுது எதுவும் வேண்டத் தோன்றாது. மற்ற நேரங்களில் எப்பொழுதும் நம் பிரார்த்தனைகள் மனதிற்குள்ளேயே கடவுளிடம் வைத்துக் கொண்டே இருப்போம். இப்படி நம் நியாயமான வேண்டுதல்கள் நிறைவேற புது மண் அகல் விளக்கு ஒன்றை வாங்கி வையுங்கள். கோவிலுக்கு செல்லும் பொழுது இதை கொண்டு செல்லுங்கள். இறைவனை பார்க்கும் முன்னரே மனதில் இருக்கும் பிரார்த்தனையை முன்வைத்து இரு உள்ளங்கைக்கு நடுவே அகல் விளக்கை ஏந்தி கொண்டு கடவுளை தரிசிக்க செல்லுங்கள்.

கோவிலில் கடவுளை பார்க்கும் பொழுது எந்த வேண்டுதல்களும் இல்லாமல், எந்த விதமான கவலைகளும் இல்லாமல் பக்தியுடன் முழுமையாக கண்டு களியுங்கள். பின்னர் அந்த அகல் விளக்கை வீட்டுக்கு கொண்டு வந்து விடுங்கள். வீட்டுக்கு கொண்டு வந்த அந்த அகல் விளக்கை ஒரு மஞ்சள் துணியில் வைத்து அதனுடன் கொஞ்சம் துளசி இலைகளையும், சில்லறை நாணயங்களையும் போட்டு வையுங்கள். அப்படியே அதை முடிச்சாக கட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

உங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அந்த அகல் விளக்கை கொண்டு சென்று ஸ்ரீமன் நாராயணருடைய கோவிலில் சுத்தமான நெய் ஊற்றி பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்றி வையுங்கள். இப்படி நாராயணரிடம் பிரார்த்தனை செய்பவர்களுக்கு அந்தப் பிரார்த்தனைகள் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை. அடுத்த முறை செல்லும் பொழுது புதிய அகல் விளக்கை கொண்டு சென்று புதிய பிரார்த்தனையை முன்வையுங்கள்.

இதையும் படிக்கலாமே:
தூங்கும் போது சொல்ல வேண்டிய பெருமாள் மந்திரம்

எப்பொழுதும் கோவிலில் தீபம் ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்வது வழக்கம். ஆனால் இந்த பரிகாரத்தில் விளக்கை வாங்கி வைத்து பிரார்த்தனை செய்த பின்பு அந்த பிரார்த்தனை நிறைவேறியதும் தான் கோவிலில் சென்று விளக்கேற்றுகின்றோம். ரொம்பவும் எளிதான இந்த பரிகாரம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய திருக்கோஷ்டியூர் கோவிலில் வித்யாசமாக செய்யப்படுவது உண்டு. “ஓம் நமோ நாராயணாய” என்னும் சக்தி வாய்ந்த எட்டெழுத்து மந்திரத்தை தினமும் 108 முறை மனதிற்குள்ளேயே உச்சரிக்க வேண்டும். மந்திர அலைகள் நம் மனதை தூய்மைப்படுத்துகிறது. சஞ்சலங்கள் ஏற்படாமல் நம் மனதை செழுமைப்படுத்தி, நம் எண்ணங்களையும் சுத்தப்படுத்துகிறது. இதனால் நம் நியாயமான வேண்டுதல்களும் இறைவனிடம் உடனே பலிக்கும்.

சற்று முன்