தீர்க்கவே முடியாது என்ற நோய் கூட இந்த மந்திரத்தை 48 நாட்கள் தொடர்ந்து உச்சரித்தால் தீரும். காஞ்சிப் பெரியவர் அருளியது.

mantra kanji-periyavar

நம் கையில் பணம் இல்லை என்றால் கூட கஷ்டப்பட்டு உழைத்து, சம்பாதித்து, மூன்று வேளை உணவு சாப்பிட முடியவில்லை என்றாலும், இரண்டு வேலை சாப்பிட்டாவது உயிர் வாழ்ந்து விடலாம். ஆனால் ‘ஆரோக்கியம்’ என்ற ஒரு வரம் நமக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருந்துவிட்டால் எந்த ஒரு சூழ்நிலையையும் சுலபமாக சமாளித்து விடலாம். கோடி ரூபாய் கையில் வைத்திருந்தும் தீர்க்க முடியாத நோய்களும், உடல் உபாதைகளும் வந்துகொண்டே இருந்தால் என்னதான் செய்வது? வாழ்க்கை வெறுத்துப் போகும். காஞ்சி பெரியவரின் ஆசிரமத்திற்கு வருகை தந்த, ஒரு தம்பதியரின் உண்மை கதை தான் இது.

kanji-periyava

ஒரு முறை கணவன் மனைவி இருவரும் மனம் நொந்த நிலையில், மன அமைதியை தேடித்தான் காஞ்சி பெரியவரின் ஆசிரமத்திற்கு வருகை தந்துள்ளார்கள். மனைவிக்கு தீர்க்கவே முடியாத பிரச்சனை உள்ளது. அந்த நோயைத் தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கூட அவர்கள் ஆசிரமத்திற்கு வருகை தரவில்லை என்று தான் கூற வேண்டும். பெரியவரைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டால் மனகஷ்டம் தீரும், மனக்கஷ்டம் குறையும் என்ற எண்ணத்தோடு வந்துள்ளார்கள் என்று தான் கட்டாயம் கூறவேண்டும். இந்த தம்பதியர் இருவரும் மகா பெரியவரை சந்தித்து பணிவோடு வணங்கினர். அவ்வளவுதான். இந்த தம்பதியர்களும் வாயைத் திறந்து தங்களது பிரச்சினையை மகா பெரியவரிடம் கூறவில்லை. மகா பெரியவரும் என்ன பிரச்சினை என்று கேட்கவில்லை.

மகா பெரியவர் தன் சீடரை அழைத்து ஏதோ ஒரு கட்டளையிட்டார். சீடரும் உள்ளே சென்று ஒரு காகிதத்தை எடுத்து, அதில் ஏதோ ஒன்றை எழுதிக் கொண்டு வந்து மகா பெரியவரிடம் கொடுத்து விட்டார். அதை வாங்கி படித்து பார்த்த மகா பெரியவர், தங்களை நாடி வந்த தம்பதியரிடம் அந்த காகிதத்தை கொடுத்து, ‘இதில் உள்ள மந்திரத்தை 48 நாட்கள் தொடர்ந்து 108 முறை படித்து வந்தால் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்’ என்று கூறினார்.. இது என்ன அதிசயம்! குறைகள் என்னவென்று கேட்கவில்லை. அதற்கான தீர்வை மட்டும் மகாபெரியவரால் எப்படி கொடுக்க முடிந்தது. இதுதான் இறைவனின் அருளா! தம்பதியர்களும் அந்த மந்திரத்தை வாங்கிக்கொண்டு ஒருவித மன நிம்மதியோடு வீடு திரும்பினார்கள்.

kanji-periyava

ஐந்து மாதங்கள் கழித்து அந்த தம்பதியினர், மகா பெரியவரை காண மறுபடியும் ஆசிரமத்திற்கு வருகை தந்தனர். எதற்காக என்று தெரியுமா? பிரச்சினை என்று வந்த தம்பதியரின் குறைகள் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது என்பதை கூறுவதற்காக, சந்தோஷத்தில் வருகை தந்துள்ளார்கள். ‘தன்னுடைய மனைவிக்கு மார்பகப்புற்று நோய் இருந்ததாகவும், அதை தீர்க்கவே முடியாது என்று எல்லா மருத்துவர்களும் கைவிட்ட நிலையில்தான், ஐந்து மாதங்களுக்கு முன்பு மனநிம்மதியை இழந்து, தங்களிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக வந்திருந்தோம்.’ ஆனால் இன்று என் மனைவிக்கு அந்த நோயானது படிப்படியாக குணமாகி வருகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கு காரணம் நீங்கள் கொடுத்த அந்த மந்திரம் தான். 48 நாட்களும் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து மனதார வேண்டிக் கொண்டதால் தான் இந்த அதிசயம் நிகழ்ந்தது என்பதை எங்களால் உணர முடிகிறது. என்று கூறி கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்து சென்றனர் அந்த தம்பதியினர்.

- Advertisement -

kanji periyavar

அந்த தம்பதியரிடம் மகாபெரியவர் கூறியதாவது. ‘என் கையில் எதுவும் இல்லை. நீங்கள் மகாவிஷ்ணுவை நினைத்து நம்பிக்கையோடு அந்த மந்திரத்தை உச்சரித்து வேண்டிக் கொண்டதால் தான் உங்களுடைய பிரச்சனை தீர்ந்து இருக்கின்றது. உங்களுடைய பக்திக்கு கிடைத்த வெற்றிதான் இது. உங்களுடைய பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து. நலமோடு வாழவேண்டும்.’ என்று ஆசிர்வாதம் செய்திருக்கின்றார். அற்புதமான நிகழ்வு தானே!

மகா பெரியவா கூறிய அந்த மந்திரம் என்னவென்று நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்களுக்கான மந்திரம் இதோ!

mantra sign

அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே
த்வமிதமுத்தபித பத்மயோனிஹி
அனந்த பூம மம ரோக ராஷிம்
நிருந்தி வாதலய வாச விஷ்ணோ!

பரமாத்மாவான குருவாயூரப்பனே! அளவற்ற மகிமைகளை கொண்ட தாங்கள், என் உடல், மனம் சார்ந்த எல்லாவகையான பிரச்சினைகளையும், நோய்களையும் நீக்கி அருள் புரிய வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கையை தர வேண்டும். என்பதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். கேன்சர் போன்ற பெரிய நோய்களுக்கு மட்டுமல்ல, உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் ஏதேனும் தீர்க்க முடியாத உடல் உபாதைகள் இருந்தால் கூட இந்த மந்திரத்தை நீங்கள் 48 நாட்கள் 108 முறை உச்சரித்தால் நல்ல பலன் உண்டு. நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்! வெற்றி நிச்சயம்.

இதையும் படிக்கலாமே
தோல்வியும் வெற்றியாக மாற வேண்டுமா? சூரிய பகவானை இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டு பாருங்கள்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Noi theerkum manthiram in Tamil. Noi neekum valipadu Tamil. Noi neekum manthirangal Tamil. Noigal neenga manthiram Tamil. Noigal theera manthiram Tamil.