நோய்களை எதிர்க்கக்கூடிய முத்திரைகள்! இரண்டு கைகள் போதும் எத்தகைய நோய்களையும் நம்மிடம் இருந்து விரட்டி அடித்து விடலாம் தெரியுமா?

mudra-thanvanthiri-virus

நம் இரண்டு கைகளில் இருக்கும் சக்தியானது முத்திரைகள் வழியாக தூண்டிவிட செய்து நம் உடலில் இயங்கும் அத்தனை செயல்பாடுகளையும் சரி செய்ய முடியும். உடலுக்குள் நடக்கும் ஏடாகூடமான வேலைகளைக் கூட முத்திரைகள் மூலம் சரி செய்து கொள்ள முடியும். அப்படி நம் உடலில் நோய்களை எதிர்க்கக் கூடிய முத்திரைகள் என்னென்ன? அதை எப்படி? எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்? என்கிற ரகசியங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

hand-mudra1

தாரண சக்தி முத்திரை:
தாரண சக்தி முத்திரை தியான நிலையில் அமர்ந்து இரண்டு கைகளிலும் கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரலை இணைத்து மற்ற மூன்று விரல்களையும் நீட்டி தினமும் மூச்சை அடக்கி 5 நிமிடம் செய்ய பிராண சக்தி அதிகரிக்கும், ரத்த ஓட்டம் சீராக செயல்படும், பிராண வாயு நுரையீரலுக்கு அதிகம் கிடைக்கும்.

திரிகோண முத்திரை:
திரிகோண முத்திரை மேலேயுள்ள படத்தில் காட்டியுள்ளபடி விரல்களை இணைத்து 15 நிமிடங்கள் தினமும் செய்ய தீராத மலச்சிக்கல் பிரச்சனை தீரும், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தீரும். மேலும் ஜீரண சக்தி அதிகரித்து சிறுகுடல் நோய்கள் நீங்க பெரும்.

hand-mudra2

முகுள முத்திரை:
ஐந்து விரல்களையும் இணைத்து கைகளை குவித்தபடி வைப்பது முகுள முத்திரை ஆகும். இம்முத்திரையை தினமும் 5 நிமிடம் செய்து வந்தால் உடலில் இருக்கும் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உங்கள் உடலில் எந்த இடங்களில் சக்தி வேண்டுமோ அந்த இடங்களுக்கு சக்தி போய் சேரும். மன உளைச்சல், மன அழுத்தம் நீங்கி நோய்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கிடைக்கும்.

- Advertisement -

தர்ம சக்கரம் முத்திரை:
மேலே உள்ள படத்தில் காட்டியபடி இரண்டு கைகளின் விரல்களையும் இணைத்து தினமும் 15 நிமிடங்கள் இந்த முத்திரையை தியான நிலையில் அமர்ந்து செய்யும் பொழுது மனம் எவ்வளவு குழப்பத்தில் அலை பாய்ந்து கொண்டு இருந்தாலும் ஒருமைப்படும். உங்களுடைய மனநிலையில் மாற்றத்தை உணர்வீர்கள், அமைதி கிடைக்கும். புதிதாக ஒரு நம்பிக்கை மனதில் பிறக்கும். இதை அனுபவ பூர்வமாக செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள்.

hand-mudra3

வாயு முத்திரை:
ஆள்காட்டி விரலை மடித்து அதன் மீது கட்டை விரலை அழுத்தி வைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களையும் நீட்டியபடி தியான நிலையில் அமர வேண்டும். தினமும் 15 நிமிடங்கள் இம்முத்திரையை கடைப்பிடித்தால் தூக்கம் வரவில்லை என்று இனி புலம்ப மாட்டீர்கள். காதில் இரைச்சல் குறைந்து நல்ல தூக்கம் வரும். பெருங்குடலில் வாயு சேர்வதைத் தடுக்கும். பக்கவாத நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்க செய்யும்.

வயிறு முத்திரை:
மேலே படத்தில் காட்டியுள்ளபடி ஐந்து விரல்களையும், பக்கவாட்டில் நீட்டி கட்டை விரலை மட்டும் இன்னொரு கையால் இருக்கமாக பிடித்துக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் தினமும் செய்து வந்தால் வயிற்றில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். இதயம் படபடப்பு போன்ற உணர்வு, நெஞ்செரிச்சல் பிரச்சனைகள் ஆகியவை நீங்கும். மேலும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவானது சீராக ஜீரணமாகும்.

hand-mudra4

வஜ்ர முத்திரை:
இந்த முத்திரையில் அனைத்து விரல்களையும் குவித்து ஒன்றாக்கி ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டிக் கொண்டு தியான நிலையில் அமர்ந்து 5 நிமிடங்கள் தினமும் செய்ய வேண்டும். இப்படி செய்யும் பொழுது புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து கூட விடுபடுவார்கள். மயக்கம், தலைசுற்றல், வயிற்றுக் கோளாறுகள் அத்தனையும் நீங்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது போல இன்னும் நிறைய முத்திரைகள் உடலில் நோய்களை எதிர்த்து போராடக்கூடிய அற்புத மருந்துகள் இருக்கின்றன. மகா சிரசு முத்திரை, மகர முத்திரை, காலேஸ்வர முத்திரை, சி முத்திரை, அக்னி சக்தி முத்திரை போன்ற முத்திரைகளும் இவ்வகையைச் சார்ந்தவை தான். இவற்றில் உங்களுக்கு விருப்பமான மற்றும் தேவைப்படுகின்ற முத்திரைகளை தினமும் தொடர்ந்து கடை பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு நலம் பெறலாம்.