நோய்கள் தீர செய்ய வேண்டிய தானம்.

kaikari thanam
- Advertisement -

உடலை ஆரோக்கியமாக பேணி காப்பவரால் தான் அவருடைய வாழ்க்கையை முழுமையாக வாழ முடியும். அப்படி வாழ்க்கையை முழுமையாக வாழவும் நோய்களிலிருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக இருப்பதற்கும் சில காய்கறிகளை தானமாக தர வேண்டும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எந்த காய்கறிகளை தானமாக தந்தால் உடலில் இருக்கக்கூடிய எந்த நோய்கள் நீங்கும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

ஒருவருக்கு உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்றால் அந்த உறுப்பு சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் சென்று தக்க ஆலோசனை பெற்று மருந்துகளை உட்கொள்வோம். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த உடல் உறுப்பில் இருக்கக்கூடிய பிரச்சனை நீங்கும். இதே போல் தான் எந்த உறுப்பில் பிரச்சினை இருக்கிறதோ அதற்கேற்ற தானத்தை நாம் செய்வதன் மூலம் அந்த பிரச்சனைகள் நீங்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

- Advertisement -

இன்றைய காலத்தில் சிறு வயது முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை கை கால் வலி ஏற்படுகிறது. அப்படிப்பட்ட கை, கால் வலியை நீக்குவதற்கு நாம் முருங்கைக் காயை தானம் செய்ய வேண்டும். கோயில்களில் அன்னதானம் நடக்கும் பொழுது முருங்கை காயை வாங்கி தானமாக தருவதன் மூலம் கை கால் வலி என்பது முற்றிலும் நீங்கிவிடும்.

தலைவலி, தலை சம்பந்தப்பட்ட நோய்கள், மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற அனைத்தையும் நீக்குவதற்கு மட்டை தேங்காயை தானமாக தர வேண்டும். இவ்வாறு மட்டை தேங்காயை தானமாக தரும் பொழுது ஒன்று மட்டும் தராமல் மூன்று தேங்காய்களை தானம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் தலை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

- Advertisement -

ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்குவதற்கும், இடுப்பு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்குவதற்கும் வாழை காயை தானமாக தர வேண்டும். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதற்கு வாழை இலையை தானமாக தர வேண்டும். வெறும் வாழை இலையை தானமாக தருவதற்கு பதிலாக தங்களால் இயன்ற ஏதாவது ஒரு உணவை செய்து வாழை இலையில் வைத்து தானம் செய்தால் அதன் பலன் இன்னும் அதிகமாக கிடைக்கும். உணவு செய்து கொடுக்க இயலாதவர்கள் கோவில்களில் பிரசாதம் தரும் பொழுது வாழை இலைகளில் வாங்கி வந்து அதில் வைத்து கொடுப்பதன் மூலமும் இதன் பலனை அவர்களால் அடைய முடியும்.

ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் அதாவது சிலருக்கு ரத்த சோகை ஏற்பட்டிருக்கும். சிலருக்கு ரத்தத்தில் இரும்பு சத்துத்தின் அளவு குறைவாக இருக்கும். சிலருக்கு வெள்ளை அணுக்கள் குறைவாக இருக்கும். இப்படி இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவாக இருந்தாலும் அந்த நோய்கள் நீங்குவதற்கு மிளகையும், கருப்பு உளுந்தையும் தானமாக தர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: செங்காலி மாலை பலன்கள்

நம்முடைய சமையலில் பயன்படுத்தக் கூடிய இந்த பொருட்களை தானமாக கொடுத்து அதற்குரிய பலனை முழுமையாக அடைந்து ஆரோக்கியமாக வாழ்வோம்.

- Advertisement -