இந்த மசாலாவை சேர்த்து நூடுல்ஸை ஒரு முறை இப்படி செய்து தான் பாருங்களேன், இனி உங்க வீட்டு குழந்தைகள் நூடுல்ஸ் வாங்க கடை பக்கம் போகவே மாட்டாங்க.

- Advertisement -

இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு தெரிந்த ஒரு விருப்பமான உணவு என்றால் அது நூடுல்ஸ் தான் என்பதில் சந்தேகமே இல்லை. எதை செய்து கொடுத்தாலும் வேண்டாம் என்று கூறும் பிள்ளைகள் கூட இந்த நூடுல்ஸ்யை செய்து கொடுத்தால் அடம்பிடிக்காமல் சாப்பிட்டு எழுந்து விடுகிறார்கள். இப்போது குழந்தைகளை விட பெரியவர்களும் இந்த நூடுல்ஸ்க்கு அடிமையாகி விட்டார்கள். ஏனெனில் இது சமைக்கும் நேரமும் குறைவு அதே நேரத்தில் சுவையும் நன்றாக இருக்கிறது. இந்த சுவை நன்றாக வர காரணம் அதில் சேர்க்கும் அந்த மசாலா தான். அப்படி என்ன தான் அந்த மசாலாவில் சேர்த்து அரைப்பார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? சரி இனியும் அதை பற்றி யோசிக்க வேண்டாம் அதில் சேர்த்திருக்கும் மசாலா பவுடரை நாம் வீட்டிலே மிக மிக எளிமையாக தயாரித்து விடலாம். இந்த மசாலா அரைப்பது எப்படி என்பதை பற்றிய பதிவு தான் இது

தேவையான பொருட்கள்: தனியா – 3 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், வெந்தயம் -1/4 டீஸ்பூன், ஏலக்காய் – 5, கிராம்பு – 8, பட்டை -1, மிளகு – 8, இஞ்சி பவுடர் – 1 டீஸ்பூன், பூண்டு பவுடர் – 1 டீஸ்பூன், மாங்கா பவுடர் – 1 டீஸ்பூன், வெங்காய பவுடர் – 1 டீஸ்பூன், சுகர் – 1 டீஸ்பூன், சோள மாவு – 1 டீஸ்பூன், காஷ்மீர் சில்லி பவுடர் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன், சர்க்கரை – 1டீஸ்பூன்.

- Advertisement -

முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொண்டு ஒரு அடி கனமான கடாயை அதில் வைத்து விடுங்கள். கடாய் சூடானதும் இதில் தனியா, சீரகம், சோம்பு, வெந்தயம், ஏலக்காய், கிராம்பு, பட்டை, மிளகு அனைத்தையும் சேர்த்து லேசாக வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். லேசாக வாசம் வந்தால் போதும் நன்றாக வறுக்க தேவையில்லை. வறுத்ததும் இதை தனியே எடுத்து ஆற வைத்து கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பூண்டு பவுடர், இஞ்சி பவுடர், மாங்கா பவுடர், வெங்காய பவுடர் (இந்த பவுடர் எல்லாம் இப்போது எல்லா டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது) சர்க்கரை, சோள மாவு, காஷ்மீர் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு இத்துடன் வறுத்து வைத்துள்ள அந்த மசாலாவையும் சேர்த்து ஒரு நல்ல நைசான பவுடர் பதத்துக்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஆற விட்டு அதன் பிறகு ஒரு டப்பாவில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் நூடுல்ஸ்யில் சேர்க்கும் அந்த மசாலாவை நாம் வீட்டில் தயார் செய்து விட்டோம்.

- Advertisement -

இந்த நூடுல்ஸை குழந்தைகள் விரும்பி உண்பதற்கு காரணம் அதில் சேர்க்கும் இந்த மசாலா தான். இது ஒருவித இனிப்பு, புளிப்பு, காரம் என்று அனைத்தும் சேர்ந்த ஒரு சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மாதிரி இருக்கிறது. இப்போது நாம் அரைத்து இருக்கும் இந்த மசாலா பவுடர் கூட அதே சுவையுடன் தான் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: காரசாரமா எதுவுமே சாப்பிடாம நாக்கு மூக்கு செத்துப் போய் இருக்கா? புளிச்சக்கீரையை புடிச்ச மாதிரி இப்படி செஞ்சு சாப்பிடுங்க.

இதை இவ்வளவு எளிமையாக வீட்டிலே இத்தனை ஆரோக்கியமாக செய்ய முடியும் என்பது இதுவரை நமக்கு தெரியாமல் கடைகளில் வாங்கி கொடுத்து வந்திருக்கலாம். இப்போது இது தெரிந்த பிறகு இந்த மசாலாவை வைத்து நீங்கள் வீட்டிலேயே நூடுல்ஸ் செய்து கொடுங்கள். இது குழந்தைகளின் உடலுக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

- Advertisement -