நவம்பர் மாத ராசி பலன்கள் 2019

November matha rasi palan

மேஷம்

Mesham Rasi

நன்மைகளை அள்ளி தர கூடிய மாதம் இது. பண கஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் அது குருவின் பார்வையினால் சரியாகிவிடும். தொழில் தொடங்குவதாக இருந்தால் இந்த மாதத்தில் தொடங்க வேண்டாம். வீண் விரயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. கணவன் மனைவி இடையேயான உறவு வலிமை பெறும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.

ரிஷபம்

Rishabam Rasi

உங்களுக்கான நல்ல வாய்ப்புகள் தேடி வரும் மாதம் இது.  வேலை தேடி முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதனால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயர வாய்ப்பு உண்டு. சொந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தால் அதில் லாபம் அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும். உங்களின் நிம்மதி அதிகரிக்கும். குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கும் காலம் இது. உடல்நலம் சீராக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்

Mithunam Rasi

கொஞ்சம் இக்கட்டான மாதம் தான் இது. இருந்தாலும், உங்கள் திறமையால் அதை சமாளித்து விடுவீர்கள். உங்கள் குடும்பத்தின் பிரச்சனையை மூன்றாவது மனிதர்களிடம் கூறாதீர்கள். அது பிரச்சனை ஆகிவிடும். அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு லாபமும் நஷ்டமும் சேர்ந்துதான் வரும். வேலைக்கு செல்பவர்களாக உங்கள் திறமைக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

கடகம்

Kadagam Rasi

ஏமாற்றத்தை கொடுக்கும் மாதம் இது. உங்கள் பொறுப்புகளை யாரையும் நம்பி கொடுக்க வேண்டாம். அது உங்களுக்கு பிரச்சினையை தேடி தந்து விடும். அலுவலகத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும் வேலையை வேறு யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

சிம்மம்

simmam

உங்கள் உறவுகளை பற்றி தெரிந்து கொள்ளும் காலம் இது. உங்கள் மனைவியிடம் அன்பு கூடும். மனைவியின் அருமை பெருமைகளை நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்வீர்கள். சந்தோஷம் அதிகரிக்கும் மாதம் இது. கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. கோபத்தினால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.

கன்னி

Kanni Rasi

கடினமாக உழைக்க வேண்டிய காலம் இது. உங்கள் தொழில் சம்பந்தமாக நீங்கள் வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் உங்களுக்கு சிறிது சோர்வு ஏற்படும். இருந்தாலும் உங்கள் விடாமுயற்சியால் வெற்றி அடைவீர்கள். புதியதாக ஏதேனும் தொழில் தொடங்குவதாக இருந்தால் யோசித்து திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

துலாம்

Thulam Rasi

நிதானமாக செயல்பட வேண்டிய காலம் இது. அவசரம் வேண்டாம். நிதானமாக செயல்படும் பட்சத்தில் உங்களுக்கான வாய்ப்பினை நீங்கள் பெறலாம். சிறிய வாய்ப்புகள் கிடைத்தாலும் அது உங்களுக்கு படிப்படியான முன்னேற்றத்தை கொடுக்கும். தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கு கவனம் தேவை. கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உடல்நலம் சீராக இருக்கும்.

விருச்சிகம்

Virichigam Rasi

லாபமும் நஷ்டமும் சேர்ந்து வரக்கூடிய நேரம் இது. சின்ன சின்ன தோல்வி வந்தாலும் அதனை தகர்த்தெரிந்து முன்னேறி செல்வீர்கள். தொழிலில் பணத்தை முதலீடு செய்வதாக இருந்தால் யோசித்து செயல்பட வேண்டும். அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். கணவரின் ஆதரவு கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.

தனுசு

Dhanusu Rasi

யோகம் தரக்கூடிய மாதம் இது. உங்களுக்கு சாதகமாக பல விஷயங்கள் நடக்கும். வேண்டாத விவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் உங்கள் சந்தோஷம் நிலைத்து இருக்கும். அடுத்தவர்கள் பிரச்சினையில் தலையிட வேண்டாம். தேவையில்லாத மன அழுத்தம் காரணமாக உங்களின் கடமைகளை செய்ய தவறி விடுவீர்கள். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பு உண்டு. சிக்கனமாக செலவு செய்வது நல்லது.

மகரம்

Magaram rasi

அற்புதங்களை அள்ளித் தரக்கூடிய மாதம் இது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதியதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கணவன் மனைவி இருவரும் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசினால் உறவு பலம் பெறும். உங்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் கண்டுபிடித்து தீர்த்துக் கொள்ளுங்கள். பணவரவு சீராக இருக்கும் சிக்கனமாக செலவு செய்வது நல்லது. மாத இறுதியில் உடல் நலத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

கும்பம்

Kumbam Rasi

அதிக நன்மைகளை தேடித் தரும் மாதம் இது. வேலையில் முன்னேற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கும். உங்களுக்கு பண வரவு அதிகரித்துக் கொண்டே போகும். அதிர்ஷ்டம் உங்கள் வாசல் கதவை தட்ட போகிறது. உங்களுக்கான பொறுப்பிலிருந்து நீங்கள் தவற மாட்டீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். மாத இறுதியில் சில சட்ட சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

மீனம்

Meenam Rasi

தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும், செயல்பட வேண்டிய காலம் இது. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அதிகமான பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் உங்களின் எதிர்கொள்ளும் திறமையின் காரணமாக அதனை சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவி இருவருக்கும் இடையே வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் படிப்பதில் கவனம் தேவை. சிக்கனமாக செலவு செய்வது நல்லது.

மாத பலன்கள் முழுவதையும் தொடர்ந்து படிக்க எங்களோடு இணைந்திருங்கள்