தோஷங்கள் போக்க எண்ணெய் குளியலை முறையாக செய்வது எப்படி? எண்ணெய் குளியலின் போது செய்யக்கூடாத தவறு என்ன?

oil-murugan

சகல தோஷங்களும் நம் உடலில் இருந்து நீங்குவதற்கு எண்ணெய் குளியலை வாரம் ஒருமுறை செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நம் முன்னோர்கள் சொல்லி சென்ற ஒவ்வொரு விடயத்திற்கு பின்னாலும் ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் நமக்கு நிறைய பலன்களை கொடுக்கும் வகையாக பலன்கள் இருக்கும். அவ்வகையில் இந்த எண்ணெய் குளியல் என்னென்ன நன்மைகளை நமக்கு செய்யும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

oil-bath

வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எந்த நேரத்தில் எப்பொழுது எடுத்துக் கொள்ள வேண்டும்? யார் செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? எதற்காக செய்ய வேண்டும்? என்கிற நிறைய கேள்விகள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும். தீபாவளி அன்று மட்டும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முறை அல்ல! ஒவ்வொரு வாரமும் எண்ணெயை உடலில் தேய்த்து குளிப்பதால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா? என்று ஒவ்வொருவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு அதன் பலன்கள் இருக்கும். ஆனால் அதை யாரும் முறையாகப் பின்பற்றுவதில்லை.

இதனால் இன்று பெரும்பாலானோருக்கு கிருமித் தொற்று, வியாதிகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. குழந்தையின்மை பிரச்சினைக்கு நல்ல தீர்வை கொடுக்கும் எண்ணெய் குளியல் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை. ஆண்களாக இருந்தால் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். பெண்களாக இருந்தால் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் குளியல் செய்வது முறையாகும்.

bathing

உடலில் இருக்கும் அதிகப்படியான உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சி அடைய செய்து, உடலில் இருக்கும் பல்வேறு உறுப்புகளை சரியாக செயல்பட வைக்கும் எண்ணெய் குளியல் சகல தோஷங்களையும் போக்க வல்லது. கங்கையில் நீராடிய பலன் எண்ணெய் குளியலின் பொழுது நமக்கு கிடைக்கும். சுத்தமான செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் மட்டுமே எண்ணை குளியலுக்கு உகந்த எண்ணெய் ஆகும். மற்ற எண்ணெய்களை அறவே தவிர்ப்பது நல்லது. இதற்காக செக்கு எண்ணெய் தனியாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அதனை லேசாக அடுப்பில் வைத்து சூடேற்றி அதில் ஒன்றிரண்டு மிளகு மற்றும் சீரகம், ஒன்றிரண்டு பூண்டை நசுக்கி போடுங்கள். பின்னர் வடிகட்டி அந்த எண்ணெயை உடல் முழுவதும் பூசி அரை மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். அரை மணி நேரம் கழித்து மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் எண்ணை குளியலை முடித்து கொள்ள வேண்டும். நீங்கள் குளிக்கும் தண்ணீரில் நொச்சி இலை, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை போட்டு ஊற வைப்பது இன்னும் கூடுதல் பலன்களை கொடுக்கும். உடல் வலியைப் போக்கும்! தோஷத்தை நீக்கும்! மனதை புத்துணர்வு அடைய செய்யும்.

oil bath

எண்ணெய் குளியல் செய்யும் பொழுது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் கணவன் மனைவி உறவில் தீட்டு படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அசைவம் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு தான் எண்ணெய் குளியல் செய்கிறோம் எனவே அந்நேரத்தில் இவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. எண்ணெய் குளியலின் பொழுது முருகன் மந்திரங்களை உச்சரிப்பது, சிவ மந்திரங்களை உச்சரிப்பது விசேஷமானது. ஸ்ரீ ரங்கநாத பெருமாள், ஆஞ்சநேயர் ஆகியோரின் துதிகளை பாடுவதும் நற்பலன்களை அள்ளித் தரும். இவற்றில் ஏதேனும் ஒரு தெய்வத்தின் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே குளிக்க வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை ஆண்களும், பெண்களும் செய்து வர உங்கள் உடலில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் விலகி, ஆரோக்கியமும், ஆன்ம பலமும் அதிகரிக்கும்.