ஒரே ஒரு முறை இந்த 1 பொருளை வைத்து உங்களுடைய எண்ணெய் பாத்திரங்களை சுத்தம் செய்து பாருங்களேன். எண்ணெய் பிசுபிசுப்பு இருந்த இடம் தெரியாமல் சட்டென காணாமல் போகும்.

oil-can
- Advertisement -

சமையலறையில் இந்த பாத்திரம் தேய்ப்பது என்ற ஒரு வேலையே மிக மிக கஷ்டமான வேலை தான். அந்த வேலையை சுத்தமாக செய்து விட்டாலே வேலையில் பாதி முடிந்தது. அதிலும் குறிப்பாக எண்ணெய் ஊற்றி வைத்திருக்கும் பாத்திரங்களை மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யாவிட்டால், பிசுபிசுவென மாறிவிடும். குறிப்பாக ரீபைண்ட் ஆயில் பயன் படுத்துபவர்களுடைய எண்ணெய் பாத்திரங்கள் மிக மிக மோசமாக இருக்கும். சரி எண்ணெய் பிசுக்கு படிந்த, எண்ணெய் ஊற்றி வைத்திருக்கும் பாத்திரங்களை சுலபமாக சுத்தம் செய்ய எந்த பொருளை பயன்படுத்தலாம். தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

hand-wash

இப்போது நம் எல்லார் வீட்டிலும் இருக்கக் கூடிய ஒரு பொருள். கடைகளில் அதிகமாக விற்கக்கூடிய ஒரு பொருள். இந்தப் பொருளை எண்ணெய் பாத்திரங்கள் சுத்தம் செய்ய ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள். அதுதாங்க ஹேண்ட் வாஷ். உங்களுடைய வீட்டில் கை கழுவுவதற்கு எந்த பிராண்ட் ஹேண்ட் வாஷ் வைத்திருந்தாலும் சரி, அந்த ஹாட்லிக்விட்டில் இருந்து கொஞ்சமாக எடுத்து சாதாரண பாத்திரம் தேய்க்கும் நாரை தொட்டு, எண்ணெய் பாத்திரத்திற்கு மேல் வைத்து கொஞ்சம் லேசாக அழுத்தம் கொடுத்து சுத்தம் செய்து பாருங்கள்.

- Advertisement -

ஸ்டில் நாரை பயன்படுத்தியும் நீங்கள் இந்த முறையில் எண்ணெய் பாத்திரங்களை சுத்தம் செய்யலாம். அது உங்களுடைய இஷ்டம். எண்ணெய் ஊற்றி வைத்திருக்கும் கண்ணாடி பாட்டில், எவர்சில்வர் பாத்திரம், பிளாஸ்டிக் கேன், எதுவாக இருந்தாலும் அதில் இருக்கும் பிசுபிசுப்பு உடனடியாக நீங்கிவிடும்.

oil-can2

கை உள்ளே போகாத அளவிற்கு இருக்கக்கூடிய ஆயில் கேனில் கூட கொஞ்சமாக இந்த ஹேண்ட் வாஷ் லிக்விட் ஊற்றிவிட்டு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்றாகக் குலுக்கி ஊற வைத்துவிடுங்கள். அதன்பின்பு சாதாரண தண்ணீரை ஊற்றி கழுவி சுத்தம் செய்தாலே உள்பக்கம் நன்றாக சுத்தமாக இருக்கும்.

- Advertisement -

சில எண்ணெய் கேன்களில் அடியில் திட்டு சேர்ந்திருக்கும். அதை நீக்க ஒரு ஸ்பூன் கல் உப்பை அந்த கேன் இன் உள்ளே போட்டு இரண்டு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, நன்றாக அடியில் குலுக்கி விடுங்கள். லிக்விடில் கேன் ஊறிய பின்பு இதை செய்தால், அடி திட்டு சுத்தமாக வெளியேறிவிடும். எல்லா எண்ணெய் பாத்திரங்களையும் தேய்த்து கழுவி முடித்துவிட்டு சுத்தமான ஒரு துணியில் துடைத்து வெயிலில் உலர வைத்து விட்டால், எண்ணெய் பாத்திரங்கள் அனைத்தும் புதுசு போல பளபளப்பாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

oil-cane

முடிந்தவரை ரீபைண்ட் ஆயிலை பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். அது உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல. நல்லெண்ணெய் கடலெண்ணெய் கொஞ்சம் விலை உயர்வாக இருந்தாலும் அந்த எண்ணெயை நம்முடைய சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. உங்களுக்கு மனதிற்கு சரி என்று பட்டால் மட்டும் எண்ணெயை மாற்றிப் பாருங்கள். சமையலறையில் இருக்கும் பொருட்களில் பிசுபிசுப்பு ஓட்டுவதிலும் வித்தியாசம் தெரியும். உடல் ஆரோக்கியத்திலும் வித்தியாசம் தெரியும்.

- Advertisement -