எண்ணெய் ஊற்றி வைத்திருக்கும் ஆயில் கேன், ஆயில் கண்டைனர்களை சுத்தம் செய்ய இவ்வளவு ஈஸியான டிப்ஸா? சொன்னா நீங்க நிச்சயம் நம்பவே மாட்டீங்க!

oil-can

நம்முடைய சமையலறையில் சுத்தம் செய்ய முடியாத பொருள் என்றால் அது எண்ணெய் ஊற்றி வைத்திருக்கும் பாத்திரங்கள் தான். அதை சுத்தம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். நல்லெண்ணெய், கடலெண்ணெய் பயன்படுத்துபவர்கள் வீட்டில் எண்ணெய் பாத்திரங்கள் அவ்வளவாக பிசுபிசுப்பு தன்மை அடையாது. ஆனால் ரீஃபைண்ட் ஆயிலில் பயன்படுத்துபவர்கள் வீட்டில் எண்ணெய் பிசுக்கு அதிகமாக இருக்கும். பாத்திரங்களில் மட்டும் பிசுபிசுப்பு இல்லாமல், சமைக்கும் கேஸ் ஸ்டவ், சமையல் மேடை, சமையல் மேடையின் அருகில் ஒட்டி வைத்திருக்கும் டைல்ஸ், எக்ஸாஸ் ஃபேன் இப்படி எல்லா இடங்களிலும் அந்த பிசுபிசுப்பு தன்மை அதிகமாக தான் இருக்கும்.

oil-can1

முடிந்தவரை ரீஃபைண்ட் ஆயில் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு நல்லெண்ணெய் கடலெண்ணெய் பயன்படுத்தி பாருங்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லதாக சொல்லப்பட்டுள்ளது. சரி, இப்போது சுத்தத்திற்கு வருவோம். உங்களுடைய வீட்டில் எண்ணெய் பாத்திரங்கள், சமையல் மேடை, ஸ்டவ் இப்படியாக எந்த இடத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு படிந்து இருந்தாலும் அதை சுலபமாக சுத்தம் செய்ய ஒரே ஒரு பொருள் மட்டுமே போதும்.

நாம் சமைப்பதற்கு பயன்படுத்தும் அரிசிமாவு தான் அந்த ஒரு பொருள்.  அரிசி மாவை பிசுபிசுப்பு படிந்த, எண்ணெய் பாத்திரங்களின் உள் பக்கமும், மேல் பக்கமும் தூவி விட வேண்டும். எண்ணெய் பிசுபிசுப்பில் அரிசி மாவு அப்படியே ஒட்டிக்கொள்ளும். எண்ணெய் பாத்திரங்களுக்கு உள்பக்கமாக கொஞ்சமாக அரிசி மாவை கொட்டி விட்டு, மூடி போட்டு நன்றாக குலுக்கி விட்டு விடுங்கள். (ஆயில் கேன் களையும் இந்த மெத்தட் யூஸ் பண்ணி உள்ளே, நீளமான பிரஷ் போட்டு தேய்த்தாள் சுலபமாக சுத்தம் செய்துவிடலாம்.) அதாவது ஆயில் கேன்களுக்கு உள்பக்கம் அரிசி மாவை தூவி, கேன்களுக்கு ஓரங்களில் படும்படி குளிக்கிவிட வேண்டும். அவ்வளவு தான்.

oil-can2

5 நிமிடம் அந்த பாத்திரத்தில் அரிசி மாவு அப்படியே ஊறட்டும். அதன் பின்பு ஒரு நாரை வைத்து லேசாக தேய்த்து எடுத்தால் பிசுபிசுப்பு முக்கால் வாசி நீங்கி விடும். மீதமிருக்கும் பிசுபிசுப்பை லிக்விட் வைத்து சுத்தம் செய்து கொள்ளலாம். பாத்திரம் தேய்க்கும் சோப்பை விட, லிக்விட் பயன்படுத்தும்போது எண்ணெய் பிசுபிசுப்பு சுத்தமாக நீங்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

இதேபோல தான் சமையல் மேடை, கேஸ் ஸ்டவ், டைல்ஸ், எண்ணெய் படித்த இடங்களில் கொஞ்சமாக அரிசி மாவு தூவி 5 நிமிடங்கள் ஊற வைத்து விட்டு, அதன்பின் ஸ்கரப் போட்டு தேய்த்து எடுத்தால், பிசுபிசுப்பு முழுமையாக நீங்கிவிடும். அரிசி மாவை மொத்தமாக ஒரு பேப்பரிலோ, முறம் கொண்டோ வாரிவிட்டு, அதன்பின்பு லிக்விட் ஊற்றி, நார் போட்டு தேய்த்து கழுவி விட வேண்டும்.

arisimavu

இப்போதெல்லாம் ரேஷன் கடைகளில் பச்சரிசி நிறையவே கிடைக்கின்றது. அந்த அரிசியை வாங்கி அரைத்து கூட இப்படி சுத்தம் செய்வதற்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். எப்போதுமே எண்ணெய் பாத்திரங்களை சுத்தமாக கழுவி விட்டு, முடிந்தால் ஒரு துணியை போட்டு அந்த எண்ணெய் பாத்திரங்களை துடைத் தெடுத்து, வெயிலில் வைத்து உலர வைத்து விடுங்கள்.

plant-in-kitchen

எண்ணெய் பாத்திரம் பிசுபிசுப்பு தன்மை நீங்கி எப்போதும் புதுசு போல பள பளனு இருக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் எண்ணெய் படிந்த இடங்களை எண்ணெய், படிந்த பாத்திரங்களை ஒருமுறை இப்படி சுத்தம் செய்து பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் மாதத்திற்கு ஒரு முறை இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணி சுத்தம் பண்ணிக்கோங்க.

இதையும் படிக்கலாமே
சட்னி அரைக்க இனி தேங்காய் வேண்டாம். தேங்காய் இல்லாமல் 10 நிமிடத்தில் வித்தியாசமான புதிய 2 சட்னி ரெசிபி உங்களுக்காக!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.