தினமும் இம்மந்திரம் துதித்தால் எத்தனை நன்மைகள் ஏற்படும் தெரியுமா?

om-sakthi-amman

பெண் தான் எந்த ஒரு மனிதனுக்கும் உத்வேகம் அளிக்கும் சக்தியாக இருக்கிறாள். எனவே தான் அவளை பராசக்தியாக கருதி வழிபடும் வழக்கம் நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. பராசக்தியான அம்மனுக்கு பல்வேறு பெயர்கள் இருக்கின்றன. அதில் உச்சரித்தாலே சக்தி தரும் அம்மனின் ஒரு பெயராக ஓம் சக்தி இருக்கிறது. இந்த ஓம் சக்தி வடிவாக இருக்கும் அம்மனை போற்றி இயற்றப்பட்டது தான் ஓம் சக்தி போற்றித் துதி. இந்த ஓம் சக்தி போற்றி துதியை தினமும் துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

MathuraKaliamman

ஓம் சக்தி போற்றி

ஓம் ஓம்சக்தியே போற்றி
ஓம் ஓங்கார ஆனந்தியே போற்றி
ஓம் உலக நாயகியே போற்றி
ஓம் உறவுக்கும் உறவானவளே போற்றி
ஓம் உள்ளமலர் உவந்தவளே போற்றி
ஓம் ஓதரிய பெரும் பொருளே போற்றி
ஓம் உண்மைப் பரம் பொருளே போற்றி
ஓம் உயிராய் நின்றவளே போற்றி
ஓம் மருவத்தூர் அமர்ந்தாய் போற்றி
ஓம் மனமாசைத் துடைப்பாய் போற்றி
ஓம் கவலை தவிர்ப்பாய் போற்றி
ஓம் ககனவெளி ஆனாய் போற்றி
ஓம் புற்றாகி வந்தவளே போற்றி
ஓம் பாலாகி வடிந்தவளே போற்றி
ஓம் பாமரர் துயர் துடைப்பாய் போற்றி
ஓம் பண்ணாக இசைந்தாய் போற்றி
ஓம் பாமலர் உவந்தாய் போற்றி
ஓம் பாம்புரு ஆனாய் போற்றி
ஓம் சித்துரு அமைந்தாய் போற்றி
ஓம் செம்பொருள் நீயே போற்றி
ஓம் சக்தியே தாயே போற்றி
ஓம் சன்மார்க்க நெறியே போற்றி
ஓம் சமதர்ம விருந்தே போற்றி
ஓம் ஓங்கார உருவே போற்றி
ஓம் ஒருதவத்துக் குடையாய் போற்றி
ஓம் நீள்பசி தவிர்ப்பாய் போற்றி
ஓம் நின்மதி தருவாய் போற்றி
ஓம் அகிலமே ஆனாய் போற்றி
ஓம் அண்டமே விரிந்தாய் போற்றி
ஓம் ஆன்மீகச் செல்வமே போற்றி

ஓம் அனலாக ஆனாய் போற்றி
ஓம் நீராக நிறைந்தாய் போற்றி
ஓம் நிலனாகத் திணிந்தாய் போற்றி
ஓம் தூறாக வளர்ந்தாய் போற்றி
ஓம் துணிபொருள் நீயே போற்றி
ஓம் காராக வருவாய் போற்றி
ஓம் கனியான மனமே போற்றி
ஓம் மூலமே முதலே போற்றி
ஓம் முனைச்சுழி விழியே போற்றி
ஓம் வீணையே இசையே போற்றி
ஓம் விரைமலர் அணிந்தாய் போற்றி
ஓம் தத்துவங் கடந்தாய் போற்றி
ஓம் சகலமறைப் பொருளே போற்றி
ஓம் உத்தமி ஆனாய் போற்றி
ஓம் உயிர்மொழிக் குருவே போற்றி
ஓம் நெங்சம் நீ மலர்ந்தாய் போற்றி
ஓம் நீள் நிலத் தெய்வமே போற்றி
ஓம் துரிய நிலையே போற்றி
ஓம் துரிய தீத வைப்பே போற்றி
ஓம் ஆயிர இதழ் உறைவாய் போற்றி
ஓம் அகிலமெல்லாம் ஆட்டுவிப்பாய் போற்றி
ஓம் கருவான மூலம் போற்றி
ஓம் உருவான கோலம் போற்றி
ஓம் சாந்தமே உருவாய் போற்றி
ஓம் சரித்திரம் மறைத்தாய் போற்றி
ஓம் சின்முத்திரை தெரிப்பாய் போற்றி
ஓம் சினத்தை வேரறுப்பாய் போற்றி
ஓம் கையிரண்டு உடையாய் போற்றி
ஓம் கரைபுரண்ட கருணை போற்றி
ஓம் மொட்டுடைக் கரத்தாய் போற்றி

Amman

ஓம் மோனநல் தவத்தாய் போற்றி
ஓம் யோகநல் உருவே போற்றி
ஓம் ஒளியன ஆனாய் போற்றி
ஓம் எந்திரத் திருவே போற்றி
ஓம் மந்திரத் தாயே போற்றி
ஓம் பிணி தவிர்த்திடுவாய் போற்றி
ஓம் பிறவிநோய் அறுப்பாய் போற்றி
ஓம் மாயவன் தங்கையே போற்றி
ஓம் சேயவன் தாயே போற்றி
ஓம் திரிபுரத்தாளே போற்றி
ஓம் ஒருதவம் தெரிப்பாய் போற்றி
ஓம் வேம்பினை ஆள்வாய் போற்றி
ஓம் வினையெலாம் தீர்ப்பாய் போற்றி
ஓம் அஞ்சனம் அருள்வாய் போற்றி
ஓம் ஆருயிர் மருந்தே போற்றி
ஓம் கண்ணொளி காப்பாய் போற்றி
ஓம் கருத்தொளி தருவாய் போற்றி
ஓம் அருளொளி செய்வாய் போற்றி
ஓம் அன்பொளி கொடுப்பாய் போற்றி
ஓம் கனவிலே வருவாய் போற்றி
ஓம் கருத்திலே நுழைவாய் போற்றி
ஓம் மக்கலைக் காப்பாய் போற்றி
ஓம் மனநோயைத் தவிர்ப்பாய் போற்றி
ஓம் எத்திசையும் ஆனாய் போற்றி
ஓம் இதயமாம் வீணை போற்றி
ஓம் உருக்கமே ஒளியே போற்றி
ஓம் உள்ளுறை விருந்தே போற்றி
ஓம் மலப்பிணி தவிர்ப்பாய் போற்றி
ஓம் மனங்கனிந்து அருள்வாய் போற்றி
ஓம் நாதமே நலமே போற்றி

- Advertisement -

veyil ukandha amman

ஓம் நளின மலர் அமர்வாய் போற்றி
ஓம் ஒற்றுமை சொல்வாய் போற்றி
ஓம் உயர்நெறி தருவாய் போற்றி
ஓம் நித்தமும் காப்பாய் போற்றி
ஓம் நேரமும் ஆள்வாய் போற்றி
ஓம் பத்தினி பணிந்தோம் போற்றி
ஓம் பாரமே உனகே போற்றி
ஓம் வித்தையே விளக்கே போற்றி
ஓம் விந்தையே தாயே போற்றி
ஓம் ஏழையர் அன்னை போற்றி
ஓம் ஏங்குவோர் துணையே போற்றி
ஓம் காலனைப் பகைத்தாய் போற்றி
ஓம் கண்மணி ஆனாய் போற்றி
ஓம் சத்தியப் பொருளே போற்றி
ஓம் சங்கடந் தவிர்ப்பாய் போற்றி
ஓம் தத்துவச் சுரங்கமே போற்றி
ஓம் தாய்மையின் விளக்கமே போற்றி
ஓம் ஆறாதார நிலையே போற்றி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் ஓம் ஓம்

Amman

பிரபஞ்சம் எங்கும் நீக்கமற சக்தியாக நிறைந்து இருக்கிறாள் பார்வதி தேவி. அவளை சக்தியாக பாவித்து இயற்றப்பட்ட 108 ஓம் சக்தி போற்றி துதி இது. இந்தப் போற்றித் துதியை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், வீட்டின் பூஜை அறையில் அம்பாளின் படத்திற்கு தீபம் ஏற்றி, பூக்கள் சமர்ப்பித்து, இத்துதியை 108 முறை துதித்து ஜெபிப்பதால் உங்களின் ஆத்ம சக்தி பெருகும். உங்களிடம் இருக்கும் சோம்பல், தீய எண்ணங்கள் சிந்தனைகள் நீங்கும். வறுமை நிலை ஒழியும். எதிரிகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறப்படைந்து லாபங்கள் பெருகும். ஈடுபடும் புதிய முயற்சிகள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும்.

Amman

பிரபஞ்சமே சக்தி மயம் ஆனது என்பது ஞானிகளின் கருத்தாகும். விலங்குகள் முதல் மனிதர்கள் வரை அனைத்திலும் இருக்கும் உயிர் பராசக்தியான அம்பாளின் அம்சமாக இருக்கிறது. அதே சக்தியானது நன்மையானவற்றை உருவாக்குவதும், தீமையானவற்றை அழிப்பதும் என இரண்டு தன்மைகளை கொண்டதாக இருக்கிறது. ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் போதே உடலிலும், மனதிலும் மிகுதியான சக்தி உருவாவதை நாம் அனைவரும் உணரலாம். அந்த மந்திரத்தை சேர்த்து இயற்றப்பட்ட இந்த ஓம் சக்தி போற்றி துதியை தினமும் துதிப்பவர்களுக்கு சகல நன்மைகளும் வாழ்வில் நிச்சயம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
ராகு – கேது தோஷங்கள் நீங்க துதிக்க வேண்டிய மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Om sakthi potri in Tamil. It is also called as Om sakthi manthiram in Tamil or Amman manthirangal in Tamil or Ambal thuthi in Tamil or Sakthi manthiram in Tamil.