வாழைக்காய் இல்லாமலே வாழைக்காய் பஜ்ஜி செய்யலாம் தெரியுமா?. அப்படியே பஜ்ஜி கொஞ்சம் கூட எண்ணெய்யே குடிக்காம நாள் முழுதும் நல்ல புசுபுசுன்னு இருக்க என்ன செய்யணும்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

- Advertisement -

பஜ்ஜி என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று தான். வீட்டிற்கு யாராவது விருந்தினர் வந்து விட்டால் கூட உடனடியாக செய்வது இந்த பஜ்ஜியை தான். அப்படியான நேரத்தில் வீட்டில் வாழைக்காய் இல்லை என்றாலும் கூட சட்டுனு வாழைக்காய் இல்லாமையே அதே சுவையில் சூப்பரான ஒரு பஜ்ஜி எப்படி செய்வது என்பதைத் தான் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த பஜ்ஜி செய்ய முதலில் ஒரு பவுலில் ஒரு கப் கடலை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். எந்த கப்பில் கடலை மாவு எடுத்தீர்களோ அதே கப்பில் அரைக் கப் அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் கால் டீஸ்பூன் மிளகாய்த் தூள், கால் டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், கால் டீஸ்பூன் உப்பு, ஒரு பின்ச் சமையல் சோடா, கால் டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது இவையெல்லாம் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மாவை தயார் செய்யும் போது சமையல் சோடா அதிகமாகி விடக் கூடாது. அப்படியானால் எண்ணெய் அதிகம் குடித்து விடும். இன்னொன்று இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கும் போது பஜ்ஜின் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

அடுத்ததாக இந்த பஜ்ஜி மாவை பிசையும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான டிப்ஸ் இந்த மாவு அனைத்தையும் ஒன்றாக கலந்த பிறகு ஒரு குழி கரண்டி அளவிற்கு எண்ணெயை நன்றாக காய்ச்சி சூடாக இருக்கும் போதே பஜ்ஜி மாவில் ஊற்றி ஒரு ஸ்பூன் வைத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்படி செய்யும் போது நாள் முழுவதும் மொறு மொறு என்று இருப்பதுடன் எண்ணெய் குடிக்காது.

- Advertisement -

மாவில் எண்ணெய் ஊற்றி கலந்த பிறகு பஜ்ஜி மாவு பதத்திற்கு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். மாவு அதிக தண்ணீராகவும் இருக்கக் கூடாது அதிக கெட்டியாகவும் இருக்கக் கூடாது. நீங்கள் கரைத்த மாவில் விரல் விட்டு எடுக்கும் போது மாவு கீழே விழ வேண்டும். அதே நேரத்தில் லேசாக விரலிலும் ஒட்டி இருக்க வேண்டும் இது தான் பஜ்ஜி மாவு சரியான பதம்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் மூன்று முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அகலமான பேன் அல்லது தோசை கல்லை வைத்த பிறகு இந்த முட்டை கலவையை நல்ல அகலமான தோசை போல ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு லேசாக எண்ணெய் ஊற்றி ஒரு புறம் வெந்தவுடன் மறுப்புடன் திருப்பிப் போட்டு வெந்தவுடன் எடுத்து விடுங்கள்.

- Advertisement -

வேக வைத்த இந்த முட்டையை வாழைக்காய் துண்டு போல சின்ன சின்னதாக அழகாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு நீங்கள் நறுக்கி வைத்த முட்டை துண்டுகளில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: மாங்காய் சீசன் களை கட்ட துவங்கி விட்டது! ஒரு மாங்காய் எடுத்து துருவி இப்படி ஈசியாக ஊறுகாய் செஞ்சு பாருங்க சப்புக்கொட்டி சாப்பிட்டுகிட்டே இருக்கலாம்.

நல்ல சுவையாக வாழைக்காய் இல்லாமலே வாழைக்காய் பஜ்ஜி போல சூப்பரான அதே நேரத்தில் கொஞ்சம் கூட எண்ணெய்யே குடிக்காத மொரு மொரு பஜ்ஜி தயாராகி விட்டது. இந்த பஜ்ஜியை காலையில் சுட்டு வைத்து விட்டால் மாலை வரை கூட அப்படியே புசுபுசுவென்று இருக்கும். இந்த டிப்ஸை சரியாக பாலோ பண்ணி நீங்களும் செஞ்சு பாருங்க இதே மாதிரி பஜ்ஜியை நீங்களும் செய்யலாம்

- Advertisement -