இந்தச் சட்னியை செய்ய அடுப்பை பற்ற வைக்கணும், வதக்கணும், கஷ்டப்படனும் என்ற அவசியமே கிடையாது. சட்டுனு 2 நிமிடத்தில் சட்னி ரெசிபி உங்களுக்காக!

chutney2

அடுப்பில் கடாயை வைத்து, அடுப்பை பற்றவைத்து, வெங்காயம் தக்காளியை வதக்கி, ஆற வைக்க வேண்டும் என்ற அவசியம் கூட உங்களுக்கு கிடையாது. நேராக சமையலறைக்குப் போறிங்க. மிக்ஸி எடுக்குறீங்க. பின் சொல்லப்படும் பொருட்களை சேர்த்து சட்னி அரைக்க போறீங்க. இட்லி தோசைக்கு சட்னி ரெடி பண்றீங்க! அவ்வளவு சுலபமான சட்னி ரெசிபி உங்களுக்காக. இந்த லாக் டவுன் சமயத்தில் இது உங்களுக்கு கைகொடுக்கும் என்பதற்காக சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்.

ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த சட்னி அரைக்க தேவையான பொருட்கள். மீடியம் சைஸ் வெங்காயம் – 2 இஷ்டம்போல நறுக்கிக் கொள்ளுங்கள். காஷ்மீர் மிளகாய் – 5, தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன், பெரிய நெல்லிக்காய் அளவு – புளி, வெல்லம் – 1 டேபிள்ஸ்பூன், தேவையான அளவு உப்பு, இந்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும்.

சில பேர் வீடுகளில் காஷ்மீர் மிளகாய் இருக்காது. உங்களுடைய வீட்டில் சாதாரண வர மிளகாய் இருந்தால், அந்த மிளகாயை உடைத்து உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துவிட்டு, வெறும் மிளகாயை சேர்த்துக் கொண்டால் காரம் குறைவாக, கலர் அதிகமாக கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

vellam

மிக்ஸி ஜாரில் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மொழுமொழுவென அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றி அப்படியே பரிமாறலாம். சிலருக்கு தாளிப்பு இல்லாமல் சட்னி சாப்பிட கஷ்டமாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு சிறிய பாத்திரத்தில் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்து தாளித்து இந்த சட்னியில் கொட்டி பரிமாறிக் கொள்ளுங்கள். அது உங்களுடைய இஷ்டம்.

- Advertisement -

சரி, சட்டென்று சட்னி செய்துவிட்டோம். வீட்டில் இட்லி தோசை மாவு இல்லை. வெறும் கோதுமை மாவு தான் உள்ளது. சட்டென தோசை எப்படி செய்வது. இந்த தோசை செய்ய ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

chutney4

அதில் கோதுமை மாவு 1 கப், அரிசி மாவு – 1/4 கப், ரவை – 2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, உங்களுக்கு தேவைப்பட்டால் 2 சிட்டிகை ஆப்ப சோடா மாவு சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை கட்டி படாமல்  தோசை பதத்திற்கு கரைத்து, இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஊற வைத்து தோசைக்கல்லில் மெல்லிசாக வார்த்து, இந்த சட்னிக்கு தோதாக பரிமாறுங்கள்.

crispy-dosa

சமைப்பதற்கு எதுவுமே இல்லை என்றாலும், சட்டென பத்தே நிமிடத்தில் சுவையான ஒரு டிபன். அதற்கு தோதாக ஒரு சட்னி. நிச்சயமாக இந்த லாக் டவுன் சமயத்தில் எல்லோருக்கும் இது உபயோகமானதாக இருக்கும். உங்களுடைய வீட்டில் நாளைக்கு கூட இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கலாம்.