வெங்காய சட்னியின், சுவையைக் கூட்ட இந்த ஒரு பொருளை சேர்த்தாலே போதும்! சுவையான, சுலபமான வெங்காய சட்னி செய்முறை.

onion-chutney2

பொதுவாகவே நம் வீட்டில் செய்யும் வெங்காய சட்னியை விட, அடுத்தவர்கள் வீட்டில் இருந்து நமக்கு சுவைப்பதற்காக கொடும் சட்னியின் சுவை அதிகமாக தான் இருக்கும். பொதுவாகவே, இது எல்லோருக்கும் இருப்பது தான். நாம் சமைப்பதை சாப்பிடுவதைவிட, அடுத்தவர்கள் கொடுக்கும் பொருளை சாப்பிடும் போது நமக்கு சுவை கொஞ்சம் கூடுதலாகத் தெரிவது இயற்கைதான். ஆனால், இந்த வெங்காய சட்னியை, சிலர் அரைத்தால் மட்டும், அதன் சுவை கூடுதலாக இருக்கும். அதனுடைய ரகசியம் என்ன? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க!

onion-chutney0

சின்ன வெங்காய சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு – 2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து, வர மிளகாய் – 5, சின்ன வெங்காயம் – 20, தக்காளி – 1 பெரியது பழுத்தது, தேவையான அளவு உப்பு, தேங்காய் 4 பல். (புளிப்பு சுவை உங்களுக்குப் பிடிக்கும் என்றால் ஒரு பின்ச் அளவு புளி சேர்த்துக் கொள்ளலாம்.)

இதையும் படிக்கலாமே
இட்லி, தோசை, சப்பாத்தி, ஆப்பத்திற்கு இதைவிட, தொட்டுக்க சூப்பரான வேற குழம்பு இருக்கவே முடியாது! மணக்க மணக்க, காரசாரமா ‘நம்ம வீட்டு வடகறி’ எப்படி செய்வது?

முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் நன்றாக வதங்கிய, வெங்காய சட்னி சுவையாக இருக்கும். சின்ன வெங்காயத்தை முழுதாகப் போட்டு வதக்கலாம். ஆனால், அதன் உள் பக்கத்தில் நன்றாக வதங்காது. இதற்காக சின்ன வெங்காயத்தை இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். இது ஒரு சின்ன டிப்ஸ் இதோடு சேர்த்து தக்காளியையும் நான்கு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

கடாயில் 2 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, முதலில் கடுகு போட்டு பொரிய வேண்டும். இந்த கடுகு சட்னியோடு சேர்ந்து அரைபடும் போது, சட்னியின் சுவையில் வித்தியாசம் தெரியும். சக்தியின் சுவையை அதிகரித்துக் தரும். அடுத்ததாக கடலை பருப்பு சேர்க்க வேண்டும், அடுத்ததாக வரமிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும். கடலைப்பருப்பும், மிளகாயும் பொன் நிறத்தில் வறுபட வேண்டும்(உங்கள் வீட்டு காலத்திற்கு ஏற்ப வெங்காயத்தை கூட்டிக் குறைத்து வைத்துக் கொள்ளலாம்.). அதன் பின்பாக 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து மொறுமொறுவென்று வறுக்க வேண்டும். (மொறுமொறு கருவேப்பிலையை சட்னியோடு சேர்த்து அரைக்கும்போது சுவை அதிகரிக்கும்.)

- Advertisement -

மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களும் வறுபட்ட பின்பு,  சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் பாதியளவு வதங்கியதும், தக்காளியை சேர்த்து, இரண்டையும் கைவிடாமல் வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். (இந்த இடத்தில் தேவைப்பட்டால் தக்காளியோடு, புளி சேர்த்துக்கொள்ளலாம்.) தக்காளி முழுதாக தெரியாமல், குழைந்து வதங்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதக்கவேண்டும். இதை இரண்டையும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தேங்காய்த் துருவலையும் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி விட்டீர்கள் என்றால், சட்னி சீக்கிரம் கெட்டுப் போகாது.

onion

இந்த விழுதை, அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற வைத்து விட்டு, மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து விடுங்கள். இதில் நாம் சேர்த்திருக்கும் கடுகும், கறிவேப்பிலையும் அரைத்தவுடன், வெங்காய சட்னி மனம் தூக்களாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, சிறிய தாளிப்பு போட வேண்டும்.

onion-chutney1

ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், உளுத்தம்பருப்பு, கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம், தாளித்து, சட்னியில் ஊற்றி விட்டீர்கள் என்றால், கமகம வெங்காய சட்னி ரெடி. இட்லி எத்தனை வேண்டுமென்றாலும் சாப்பிடலாம். எத்தனை தோசை வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். காரசாரம் நாட்டில் ஒட்டிக் கொள்ளும். ஒரு முறை முயற்சி செய்து தான் பாருங்களேன்!

இதையும் படிக்கலாமே
10 நிமிசத்தில் உளுந்து சேர்க்காமல் ‘இன்ஸ்டண்ட் மெதுவடை’ இப்படி செஞ்சி பாருங்க!

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Small onion chutney recipe in Tamil. Small onion chutney recipe. Small onion chutney in Tamil. Chinna vengaya chutney. Chinna vengaya chutney seimurai.