இந்த தீபத்தை வீட்டில் ஒருமுறை ஏற்றினால் கூட போதும். வீட்டில் இருக்கும் தரித்திரம் அடித்து வெளியே துரத்தப்படும். வீடு செல்வ செழிப்பாக மாறிவிடும்.

vilakku-deepam

வீடு என்றால் சுபிட்சம் நிறைந்து இருக்க வேண்டும். லட்சுமி கடாட்சம் இல்லாமல் எந்த ஒரு வீட்டில் வறட்சித் தன்மை நிலவுகின்றதோ, அந்த வீட்டில் நிச்சயமாக தரித்திரம் தலைவிரித்து ஆட தான் செய்யும். தரித்திரத்தை துரத்தியடிக்க எத்தனையோ வழிபாட்டு முறைகள் ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இந்த ஒரு தீபத்தையும் ஒரு முறை ஏற்றி பாருங்கள். வீட்டில் வறட்சித் தன்மை நீங்கி செல்வ செழிப்போடு வாழலாம் என்று சொல்கிறது சாஸ்திரம். வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக்கூடிய ஐஸ்வர்யத்தை தரக்கூடிய அந்த தீபம் எது, அதை எப்படி நம்முடைய வீட்டில் ஏற்ற வேண்டும் என்பதை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

deepam

சிலருக்கு வீட்டில் மளிகை பொருட்களை கூட வாங்குவதற்கு வழி இல்லாமல் இருக்கும். கோவிலுக்கு செல்லவேண்டும் என்றாலும் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு வழி இல்லை. கையில் சுத்தமாக பணம் இல்லை. கடன் தொல்லை, இப்படியாக நிறைய வீடுகளில் இன்றளவும் கஷ்டம் இருந்து கொண்டுதான் வருகிறது. இப்படிப்பட்ட பிரச்சனையில் வாடி கொண்டிருப்பவர்கள் இந்த தீபத்தை ஏற்றினால் மூன்றே வாரங்களில் நல்ல பலனை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

சரி, விஷயத்திற்கு வருவோம். நம்முடைய வீட்டில் இருக்கும் வறட்சியை நீக்கி, வீட்டை குளிர வைக்க கூடிய தன்மை ஊமத்தங்காய்க்கு உள்ளது. குளிர்ச்சி நிறைந்த இந்த ஊமத்தங்காயை தோட்டத்திலிருந்து உங்களால் பறித்து வர முடிந்தால் படித்து வரலாம். அப்படி இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிக் கொள்ளலாம்.

umathangai

இரண்டு ஊமத்தங்காய்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் காம்புகளை நீக்கி விட்டு சிறிய துளை போட்டுக் கொண்டு அதன் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விட வேண்டும். அதன் பின்பு, ஒரு சிறிய மண் அகல் விளக்கின் மேல் அந்த உமத்தங்காய்களை வைத்து அதன் உள்ளே பசு நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றிவைத்துவிட்டு அம்மனை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். கொஞ்சம் உக்கிர ரூபத்தில் இருக்கும் துர்க்கை அம்மன் காளியம்மன் வராகியம்மன் இப்படி எந்த அம்மனை நினைத்து வேண்டிக் கொண்டாலும் சரிதான். அந்த நிமிடமே உங்கள் வீட்டில் இருக்கும் வறட்சி தன்மையானது நீங்க தொடங்கிவிடும்.

- Advertisement -

ஊமத்தங்காய்களின் நிற்க வைக்க அடியில் மண் அகல் தீபங்களை வைக்கிறீர்கள் அல்லவா, அந்த மண் அகல் தீபத்திற்கு பதிலாக கொஞ்சம் பசும் சாணத்தை கொண்டு வந்து, அதன் மேல் இந்த ஊமத்தங்காய் தீபத்தை ஏற்றுவது நம்முடைய வீட்டிற்கு மேலும் நல்லதை கொடுக்கும். முடிந்தவர்கள் பசுஞ்சாணத்தில் மேலும் இந்த தீபத்தை ஏற்றலாம்.

vilakku-poojai

இந்த தீபத்தை குறிப்பாக எந்த கிழமையில் எந்த நேரத்தில் ஏற்றுவது? ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால் உங்களுடைய கஷ்டங்கள் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல் உங்கள் வீட்டை பிடித்திருக்கும் திருஷ்டி எதிர்மறை ஆற்றலையும் விரட்டி அடிக்க கூடிய சக்தி இந்த தீபத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

pray

தொடர்ந்து மூன்று வாரம் ஞாயிற்றுக்கிழமை இந்த தீபத்தை ஏற்றி விடுங்கள். அதன் பின்பு உங்களுக்கு மனரீதியாக உங்களுடைய வீட்டில் மாறுதல்கள் ஏற்படுவதாக உணர்ந்தால், தொடர்ந்து அடுத்து வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த தீபத்தை ஏற்றுவதால் தவறொன்றும் கிடையாது. வீட்டை பிடித்த பீடை நீங்கி, வீட்டில் சுபிட்சம் நிலவ இது ஒரு சுலபமான ஆன்மீக ரீதியான வழிபாடு என்பது குறிப்பிடத்தக்கது.