இந்த தவறை மட்டும் உங்க வீட்டில் தெரியாமல் கூட செய்ய அனுமதிக்க வேண்டாம்! லக்ஷ்மி கடாட்சம் போய்விடும்.

lakshmi-door-vasal
- Advertisement -

எல்லோருடைய வீட்டிலும் இந்த தவறை செய்ய கடவது கிடையாது. ஆனால் இன்று இருக்கும் கால சூழ்நிலைக்கு ஏற்ப இவ்வாறு பலரும் மாற வாய்ப்புகள் பெருகி வருகிறது. இந்த தவறை வீட்டில் செய்தால் குடும்பத்தில் பிரிவுகளும், சண்டை, சச்சரவுகளும் அதிகரிக்க கூடும். அது மட்டும் அல்லாமல் லட்சுமி கடாட்சம் குறையும் என்கிறது ஆன்மீகம்! அப்படியான தவறு என்ன? அதை ஏன் செய்யக்கூடாது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அலச இருக்கிறோம்.

ஒருவருடைய வீட்டில் எவ்வளவு பேர் இருந்தாலும், ஒரே சமையல் அறை மட்டுமே இருக்கும். இது தான் ஆரோக்கியமான குடும்பமும் கூட! எல்லோருடைய மகிழ்ச்சியும் உண்ணும் உணவிலும், கூட்டாக இருக்கும் குடும்பத்திலும் தான் முதன்மையாக கிடைக்கிறது. எவ்வளவு பேர் நம்முடைய வாழ்க்கையில் வந்து சென்றாலும் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளும், குடும்பமும் மட்டுமே இறுதி வரை நம்முடன் இருக்க முடியும்.

- Advertisement -

குடும்பம் என்னும் ஒரு பிடிமானம் இல்லாமல், மற்ற உறவுகளை வழிநடத்தி செல்வது என்பது மனதளவில் கடுமையாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, குடும்பத்தை கட்டி காக்க முயற்சிப்பது போன்றவையும் லட்சுமி கடாட்சம் தான்! இவர்களிடத்தில் லட்சுமி அருள் எப்போதும் இருக்கும். இவர்களை சுற்றி எப்பொழுதும் நேர்மறை ஆற்றல்கள் சுற்றிக் கொண்டே இருக்கும்.

ஒரு குடும்பத்தை கட்டி காக்கும் பெண்கள் எப்பொழுதும் வீட்டில் அழக்கூடாது. இவர்கள் அழுகை சத்தம் வீட்டில் கேட்டால் அந்த வீட்டில் செல்வ சேர்க்கை குறையும் என்கிற விதியும் உண்டு. எனவே ஆண்கள் பெண்களை எப்பொழுதும் அழ விடாமல் பத்திரமாக அவர்களுக்கு என்ன பிரச்சனை? என்பதை கேட்டு அறிந்து, அவ்வபொழுது அவர்களுடைய சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதுவே ஒரு ஆணின் உடைய குடும்ப வெற்றிக்கு பாதையாக இருக்கும்.

- Advertisement -

இப்படி ஒன்றுபட்ட குடும்பத்தில் இரண்டு அடுப்பு எறிந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் குறைகிறது. இதனால் செல்வ வளம் தடைபடுகிறது. வருமானம் ஈட்டுவதில் பிரச்சனைகள் உண்டாகிறது. கூட்டு குடும்பமாக இருந்து திடீரென சண்டை போட்டுக் கொண்டு சிலர் தனி தனியாக சமைக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படி ஒரே வீட்டில் இருந்து கொண்டு ரெண்டு அடுப்பை பற்ற வைத்தால் எந்த குடும்பமும், பிரச்சனையுடன் பயணிக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கிறது ஆன்மீகம்.

அது மட்டும் அல்லாமல் பல்வேறு காரணங்களால் இது போல ரெண்டு அடுப்பு வைத்து சமைப்பது உண்டு. மாமியார் மருமகளுக்குள் சண்டை என்று தனியாக சமைத்துக் கொள்வார்கள் அல்லது சகோதர, சகோதரிகளுக்குள் சண்டை என்று தனியாக சமைத்துக் கொள்வது உண்டு. இதுபோல ஒரே வீட்டில் தனித்தனி சமையல் செய்வது என்பது குடும்பத்தில் லட்சுமி கடாட்சத்தை குறைக்கும் செயலாகும். மேலும் முதல் முதலில் அடுப்பை காலையில் எழுந்து பற்ற வைப்பது பெண்களாக இருக்க வேண்டும். பெண்களின் கையிலேயே அக்னி உள்ளது என்று ஆன்மீகம் குறிக்கிறது எனவே ஆண்கள் அடுப்பை பற்ற வைப்பதை விட, பெண்கள் அடுப்பை பற்ற வைத்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். இதனால் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும், செல்வ செழிப்பும் ஏற்படும்.

- Advertisement -