புது வீட்டில் பால் காய்ச்சும் போது செய்யவே கூடாத 1 தவறு! இந்த தவறை செய்தால் வீட்டில் தொடர் கஷ்டங்கள் வந்துகொண்டே தான் இருக்கும்.

house
- Advertisement -

புது வீடு கட்டி பால் காய்ச்சினாலும் சரி, அப்படி இல்லை என்றால் வாடகை வீட்டிற்கு செல்லும்போது பால் காய்ச்சும் போதும் சரி, நாம் இந்த ஒரு தவறை செய்யாமல் இருந்தால் மிகவும் நல்லது. அது எந்த தவறு என்பதைப் பற்றியும், புது வீட்டிற்கு சென்றால் முறையாக எப்படி பால் காய்ச்ச வேண்டும் என்பதை பற்றியும் தான், இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே, ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு மாரி செல்வது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதாவது வேலைப்பளு அதிகம் என்பது ஒரு பக்கம் இருக்க, நாம் ஏற்கனவே வசித்து வந்திருந்த வீட்டினுடைய ராசி நம்முடைய அதிர்ஷ்டம் இவை அனைத்திலும் கட்டாயமாக மாறுதல்கள் ஏற்படும்.

milk3

வீடு குடி போகும் போது நாம் சில விஷயங்களை கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் முதலாவது, முக்கியத்துவமானது பால் காய்ச்சுவது. மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பசுமாட்டினுடைய பாலைத்தான் ஒரு வீட்டில் முதல் முதலாக காய்ச்ச வேண்டும். இது அந்த வீட்டில் இருக்கக் கூடிய தோஷங்களை முழுமையாக நீக்கிவிடும். புது வீடு குடி போகும் போது முன்னுரிமை கொடுக்கப்படும் இந்த பால் காய்ச்சுவதில் தான் நாம் அந்த தவறையே செய்கின்றோம்.

- Advertisement -

வாடகை வீட்டில் பால் காய்ச்சுவது ஆக இருந்தாலும், சொந்த வீட்டில் பால் காய்ச்சுவது ஆக இருந்தாலும் சில பேர் கேஸ் ஸ்டவ்விலேயே, சில்வர் பாத்திரத்தையே வைத்து பாலை காய்ச்சி விடுகிறார்கள். இது வீட்டிற்கு அவ்வளவு பெரிய சுபிட்சத்தை தேடித் தராது. சொல்லப்போனால் வீட்டில் பல கஷ்டங்கள் வருவதற்கு எந்த தவறும் ஒரு காரணம் தான்.

milk

மண்ணால் செய்யப்பட்ட அடுப்பில், விரகு வைத்து, பித்தளை, வெண்கலம், செம்பு, போன்ற உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரத்தில் புதுவீட்டில் பாலை முதன்முதலாக காய்ச்சலாம். முடிந்தவரை மண் அடுப்பில் பாலைக் காய்ச்ச பாருங்கள். இதற்காகவே தனியாக ஒரு மண் அடுப்பை வாங்கி வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

- Advertisement -

மண் அடுப்பை வைத்து பால் காய்ச்ச முடியவில்லை என்றால் கூட 4 செங்கல்களை அடுக்கி, அதில் சமித்து குச்சி, நவகிரக குச்சி அல்லது விறகு குச்சி இதில் ஏதாவது ஒன்றை போட்டு பால் காய்ச்சுவது அந்த இல்லத்திற்கு இனிமையை சேர்க்கும். இதை நாம் தினமும் செய்யப்போவது கிடையாது. சொந்த வீடு குடி போவதாக இருந்தால், ஒருமுறைதான் இதை நாம் செய்வோம்.

milk2

வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் சில வருடங்களுக்கு ஒருமுறை, வீடு மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்றால், அவர்களும் இதை பின்பற்றுவது பல நல்ல பலன்களை கொடுக்கும். இவ்வாறாக உங்களுடைய வீட்டில் முதன் முதலாக பால் காய்ச்சிய அந்த பாத்திரத்தையும், அந்த அடுப்பையும் உங்கள் வீட்டில் தான் வைத்துக் கொள்ள வேண்டுமே. தவிர எக்காரணத்தை கொண்டும் அந்த இரண்டு பொருட்களையும் அடுத்தவர்களுக்கு கொடுத்துவிடக் கூடாது. முயற்சி செய்து பாருங்கள். சில நல்ல மாற்றங்கள் நம்முடைய வாழ்க்கைக்கு நல்ல முன்னேற்றத்தைத் தரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -