பால்வாடியில் இலவசமாக கிடைக்கும் சத்து மாவை வைத்து அருமையான ஒரு கேக். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஓவன் இல்லாமல் சுலபமாக செய்யலாம்.

cake
- Advertisement -

அங்கன்வாடியில் சத்து மாவு கிடைக்கும். அந்த மாவில் சத்து மாவு கஞ்சி, சத்து மாவு புட்டு, சத்துமாவு உருண்டை, இப்படி பல வகைகளில் செய்து நாம் சாப்பிடலாம். ஆனால் குழந்தைகள் இந்த சத்து மாவை எப்படிதான் செய்து கொடுத்தாலும் அவ்வளவு விருப்பமாக சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் உங்களுடைய வீட்டிலேயே இந்த சத்து மாவை வைத்து இப்படி ஒரு முறை கேக் செய்து கொடுத்துப் பாருங்கள். அவர்கள் விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். சூப்பரான அங்கன்வாடி சத்து மாவு கேக் எப்படி செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் அங்கன்வாடி சத்து மாவு – 2 கப், சர்க்கரை – 1/4 கப், ஏலக்காய் – 3, இந்த பொருட்களை எல்லாம் போட்டு முதலில் ஒரு ஓட்டு ஓட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பின்பு அரைத்த மாவுடன் முட்டை – 2, சன் பிளவர் ஆயில் – 3 டேபிள்ஸ்பூன், ஆப்பசோடா – 3/4 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு பால் ஊற்றி அரைக்க போகின்றோம்.

- Advertisement -

1 கப் அளவு பாலை எடுத்துக்கொண்டு, இந்த மாவோடு கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஒவ்வொருமுறையும் மிக்ஸி ஜாரை, மிக்ஸியில் வைத்து ஒவ்வொரு ஓட்டு ஓட்ட வேண்டும். ஓட்டி எடுத்து பாருங்கள். இந்த மாவு தோசை மாவு பக்குவத்திற்கு வர வேண்டும். அதாவது ரொம்பவும் கட்டியாக இருக்கக் கூடாது. ரொம்பவும் திக்காக இருக்க கூடாது. ஒரு ஸ்பூனில் மாவை எடுத்து, மாவை மேலே இருந்து கீழே வார்த்தால் அப்படியே திக்காக விழும் அளவிற்கு, மாவின் பக்குவம் இருக்க வேண்டும். இப்போது கேக் செய்வதற்கு தேவையான மாவு தயார். (குறிப்பிட்டு சொல்லப்போனால், 2 கப் அளவு சத்து மாவு எடுத்து இருக்கிறீர்கள் அல்லவா. 3/4 கப் அளவு பால் சரியாக இருக்கும்.)

ஒரு அகலமான சில்வர் பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே எண்ணெய் தடவி விட்டு அந்த எண்ணெயின் மேலே கோதுமை மாவு அல்லது மைதா மாவைத் தூவி, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மாவை தயார் செய்து வைத்திருக்கும் கிண்ணத்தில் ஊற்ற வேண்டும். கிண்ணத்தில் பாதி அளவு தான் ஊற்ற வேண்டும். கேக் வெந்து வரும்போது உப்பி மேலே பொங்கி வரும்.

- Advertisement -

இந்த மாவை கிண்ணத்தில் ஊற்றி செட் செய்வதற்கு முன்பாகவே அடிகனமான ஒரு கடாயை அடுப்பில் வைத்து நன்றாக 10 நிமிடம் சூடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த கடாய்க்கு மேலே ஒரு கலவடையை வைத்து விடவேண்டும். தயார் செய்த கேக் கிண்ணத்தை கலவடையின் மேல் வைத்து, கடையை மூட சரியான அளவு தட்டை போட்டுங்க. தட்டுக்கு மேலே ஒரு வெயிட்டான ஏதாவது ஒரு பொருளை வைத்துவிடுங்கள். தட்டு கேப்பில் லிருந்து ஆவி வெளியே போகக் கூடாது அதற்காக.

அவ்வளவுதான். 15 நிமிடங்கள் இந்த கேக் முதலில் வேகட்டும். அதன் பின்பு தட்டை திறந்து பாருங்கள். ஓரளவுக்கு கேக் வெந்து வந்திருக்கும். இப்போது இதன் மேலே பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, திராட்சை பழங்களை நம் விருப்பம் போல தூவி அலங்கரித்து கொள்ளலாம். மீண்டும் தட்டை போட்டு கடாயை மூடி வையுங்கள். கேக் வெந்து வர இன்னும் 45 நிமிடங்கள் எடுக்கும். மொத்தமாக 1 மணி நேரம் கேக் வேக நேரம் எடுத்துக்கொள்ளும்.

- Advertisement -

பத்து நிமிடங்கள் கடாயை நன்றாக சூடு செய்த பின்புதான் கேக்கு கிண்ணத்தை எடுத்து கடைக்கு உள்ளே வைத்திருக்கின்றோம் அல்லவா. கடாய்க்கு உள்ளே கேக் போன பின்பு அடுப்பை உடனடியாக சிம்மில் வைத்து விட வேண்டும். 2 மணி நேரமும், கேக் சிம்மில் வேக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

ஒரு மணி நேரம் ஒரு கத்தியை வைத்து கேக்கை குத்தி பாருங்கள். கத்தியில் கேக் ஒட்டாமல் வந்தால், கேக் ரெடி. கேக்கை பத்திரமாகக் கிண்ணத்தோடு வெளியே எடுத்து நன்றாக ஆறவிட்டு, அந்தக் கிண்ணத்தின் ஓரத்தில் கத்தியை வைத்து கேக்கை நீக்கிவிட்டு ஒரு அகலமான தட்டில் இந்த கேக் பாத்திரத்தை அப்படியே கவிழ்த்து வையுங்கள்.

கிண்ணத்திலிருந்து கேக் அப்படியே சூப்பராக வெளியே வந்துவிடும். அவ்வளவு தான் ஒரு கத்தியை வைத்து வெட்டி டேஸ்ட் பண்ணி பாருங்க. சும்மா அட்டகாசமா பஞ்சு மாதிரி சாக்லேட் கேக்கை விட செமையா இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு இந்த கேக் செய்யறது பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -