செட்டிநாடு பச்சை மிளகாய் புளித்தொக்கு சாப்பிட்டதுண்டா? நாவூரும் சுவையில் பச்சை மிளகாய் புளித்தொக்கு ரெசிபி இதோ

pacha-milagai-thokku_tamil
- Advertisement -

செட்டிநாடு ஸ்பெஷல் இந்த கழனி பச்சை மிளகாய் புளித்தொக்கு ஊறுகாயை மிஞ்சிய சுவையில் சூப்பராக இருக்கும். குறைவான பொருட்களை வைத்து அசத்தலான சுவையில் கொஞ்சம் கூட காரம் தெரியாமல் பச்சை மிளகாய் வைத்து செய்யக்கூடிய இந்த பாரம்பரிய ரெசிபி! இப்படி மட்டும் நீங்க செஞ்சு பாருங்க, செமையா இருக்குன்னு நீங்களே சொல்லுவீங்க. பச்சை மிளகாய் புளி தொக்கு செய்வது எப்படி? என்பதை இனி தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

பச்சை மிளகாய் புளித்தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 20, பச்சை மிளகாய் – 20, புளி கரைசல் – ஒரு கப், உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு பின்ச், அரிசி களைந்த தண்ணீர் – ஒரு கப்.

- Advertisement -

பச்சை மிளகாய் புளித்தொக்கு செய்முறை விளக்கம்:
பச்சை மிளகாய் புளி தொக்கு செய்ய 20 பச்சை மிளகாய்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான எல்லா பொருட்களும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 20 சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுதாக அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கப் அதாவது 300ml அளவிற்கு புளியை கரைத்து வடிகட்டி கரைசலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிய விடுங்கள். இவை நன்கு பொன்னிறமாக வறுபட்டதும் தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை முழுதாக அப்படியே சேர்த்து வதக்குங்கள். எண்ணெயிலேயே இரண்டு நிமிடம் நன்கு வதங்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள பச்சை மிளகாய்களை காம்பு நீக்காமல் அப்படியே முழுதாக சேர்த்து வதக்குங்கள்.

- Advertisement -

ஓரளவுக்கு பச்சை மிளகாய் சுருள வதங்கி வந்த பின்பு நீங்கள் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். புளி கரைசலை முழுவதுமாக பச்சை மிளகாயும், வெங்காயமும் ஈர்த்துக் கொள்ள வேண்டும். கொதித்து பாதி அளவிற்கு சுண்டியதும் ஒரு கப் அளவிற்கு அரிசி களைந்த தண்ணீரை சேர்க்க வேண்டும். அரிசி ஊற வைக்கும் போது முதல்முறை தண்ணீர் ஊற்றி கழுவும் போது அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட வேண்டும். இரண்டாவது முறை நல்ல தண்ணீரை ஊற்றி நன்கு கழுவி அந்த தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் கழனி என்று கூறுவார்கள். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

இதையும் படிக்கலாமே:
ஹோட்டல் சுவையில் சுவையான தேங்காய் சட்னிக்கு இந்த பொருளை மட்டும் சேர்த்து அரைச்சா போதும். ரொம்ப டேஸ்ட்டான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி ரெடி

இப்போது இந்த டிஷ்க்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு கொதிக்க வைத்து சுண்ட விடுங்கள். ரெண்டு நிமிடம் கொதித்து வந்ததும், ஒரு பின்ச் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட்டு கொள்ளுங்கள். இப்போது தண்ணீர் எல்லாம் வற்றி நன்கு சுண்டி வரும் பொழுது அடுப்பை அணைத்து அப்படியே விட்டு விடுங்கள். இதை பழைய சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். கொஞ்சம் கூட பச்சை மிளகாயின் காரமே தெரியாத அளவிற்கு ரொம்பவே டேஸ்ட்டியாக இருக்கக்கூடிய இந்த பாரம்பரிய பச்சை மிளகாய் புளி தொக்கு இதே மாதிரி நீங்களும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க, உங்களுக்கும் இது ரொம்பவே பிடிச்சு போயிடும்.

- Advertisement -