ரேஷன் பச்சரிசியிலேயே அருமையான சுவையோடு பாயாசம் தயாரிப்பது எப்படி? ஆடி மாசம் கிராமப்புறங்களில் இந்த பாயாசம் ஃபேமஸ் தெரியுமா?

pacharisi-payasam_tamil
- Advertisement -

ரேஷன் பச்சரிசி இருந்தால் கூட ரொம்ப சுவையான இந்த பாயாசத்தை எளிதான முறையில் தயார் செய்துவிடலாம். ஆடி மாசம் வந்துவிட்டாலே அம்மனுக்கு ஏதாவது ஒன்றை நைவேத்தியம் படைக்க யோசித்துக் கொண்டிருப்போம். இது போல கிராமப்புறங்களில் பாயாசம் செய்து படைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாமும் பச்சரிசியில் சூப்பரான இந்த பாயாசம் எப்படி தயாரிப்பது? என்று இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – ஒரு கப், பொடித்த வெல்லம் – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், ஏலக்காய் – 3, உலர் திராட்சை – தேவையான அளவிற்கு, முந்திரி பருப்பு – 10, நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

 செய்முறை

பச்சரிசி பாயாசம் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ரேஷன் பச்சரிசி அல்லது நீங்கள் கடையில் வாங்கிய பச்சரிசி எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ரேஷன் பச்சரிசியாக இருந்தால் முதலில் அதில் இருக்கக்கூடிய நெல், குருணை, பூச்சி, புழுக்களை சுத்தம் நன்கு அலசிக் கொள்ளுங்கள்.

நான்கைந்து முறை நன்கு சுத்தம் செய்ததும் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு 10 லிருந்து 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு மிக்சர் ஜாரில் அரிசியை சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி முதலில் அரிசியை நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் துருவிய தேங்காய் அரை கப் அளவிற்கு சேர்த்து தேவையான அளவிற்கு வாசனைக்கு ஏற்ப ஏலக்காய்களையும் சேர்த்து மீண்டும் நைசாக அரைக்க வேண்டும். நைசாக அரைத்து வைத்த இந்த கலவையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கரைய விடுங்கள். வெல்லம் கரைந்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். வெல்ல பாகு ஆறிய பின்பு சுத்தமாக வடிகட்டியில் சேர்த்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்பு அதே பாத்திரத்தில் அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்ததும் நீங்கள் மிக்சர் ஜாரில் அரைத்த அரிசி கலவையை சேர்க்க வேண்டும். அரிசி கலவையை சேர்த்த பின்பு இடைவிடாமல் கிண்டி கொண்டே இருக்க வேண்டும், இல்லையேல் கட்டி தட்ட ஆரம்பித்து விடும். அதேபோல அரிசி கலவையை சேர்த்த பின்பு அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் நன்கு இடைவிடாமல் கிண்டி விட்டு கொதிக்க ஆரம்பித்ததும் கரைத்து வைத்துள்ள வெல்லப்பாகையும் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
சப்பாத்திக்கு தொட்டுக்க எக் கீமா செய்ய தெரியுமா உங்களுக்கு? இது ரொம்ப ரொம்ப ஈஸிங்க, ரொம்ப ரொம்ப டேஸ்டியும் கூட. முட்டை பிரியர்களுக்காக இந்த ரெசிபி.

பின்பு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய விடுங்கள். நெய் காய்ந்ததும் பொடித்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சை ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து பாயாசத்துடன் சேர்த்து நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான், ரொம்பவே எளிதாக செய்யக்கூடிய இந்த பச்சரிசி பாயாசம் ஆடி மாதத்தில் கிராமப்புறங்களில் அம்மனுக்கு நைவேத்தியம் படைக்கவும் பயன்படுத்துகின்றனர். நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர்.

- Advertisement -