- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி போன்ற எப்படிப்பட்ட பெரிய கெட்ட சக்தியும் உங்களை நெருங்காமல் இருக்க,...

ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி போன்ற எப்படிப்பட்ட பெரிய கெட்ட சக்தியும் உங்களை நெருங்காமல் இருக்க, உங்களுக்கு நீங்களே பாதுகாப்பு கவசத்தை போட்டுக் கொள்வது எப்படி?

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை பார்த்து பொறாமைப்படுபவர்கள், அந்த முன்னேற்றத்தை தடுப்பதற்கு ஏவி விடக்கூடிய கெட்ட சக்திகள்தான் ஏவல் பில்லி சூனியம் என்று சொல்லப்படும் எதிர்மறை ஆற்றல்கள். மன உறுதி இல்லாமல், மன தைரியம் இல்லாமல் பலவீனமாக இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றலின் மூலம் நிச்சயமாக பாதிப்பு இருக்கும். மன உறுதியோடும் மன தைரியத்தோடும் வாழ்க்கையை நடத்திச் செல்பவர்களுக்கு, எந்த எதிர்மறை ஆற்றலினாலும் எந்த கண் திருஷ்டியினாலும் பிரச்சனைகள் வராது.

thirusti

முதலில் உங்களை நீங்களே தைரியப்படுத்தி பழகி வைத்துக்கொள்ளுங்கள். எதற்கும் அஞ்சா நெஞ்சத்தோடு வாழ வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றியடைய முடியும். அஞ்சா நெஞ்சம் படைத்த அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரை நினைத்துக் கொண்டால் வீரம் தானகவே வரும் என்று சொல்லுவார்கள்.‌ தோல்வியே இல்லாமல் வீரத்திற்கும் துணிச்சலுக்கும் பக்திக்கும் உதாரணமாக இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் கவசத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

உங்களை நீங்களே தைரியப்படுத்திக் கொள்ள, உங்களை சுற்றி ஒரு பாதுகாப்பு வட்டத்தைப் போட்டுக் கொள்ள, எந்த ஒரு எதிர்மறை ஆற்றலினாலும் உங்களுடைய முன்னேற்றம் தடைபடாமல் இருக்க வேண்டும் என்றால் இதை மட்டும் செய்தாலே போதும். முடிந்தால் வாரத்தில் இரண்டு நாட்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் சனிக்கிழமையில் மட்டுமாவது இதை செய்து கொள்ள வேண்டும்.

Thulasi

இந்த வழிபாட்டிற்கு ஒரு வெற்றிலை, கொஞ்சமாக வெண்ணை, இரண்டு துளசி இலைகள் தேவை. வெற்றிலையில் கொஞ்சம் வெண்ணையை தடவி விட்டு அதன் மேலே இரண்டு துளசி இலைகளை வைத்து, வெற்றிலையை மடித்து உங்கள் வலது உள்ளங்கைகளில் வைத்து, அந்த கையை அப்படியே உங்களுடைய உச்சந்தலையில் மேல் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கையை உச்சந் தலையில் வைத்தபடி இந்த அனுமன் கவசத்தை ஒரே ஒரு முறை உச்சரித்தாலே போதும். உங்களைச் சுற்றி கண்ணுக்கு தெரியாத பாதுகாப்பு கவசம் வந்துவிடும். உங்களுக்கான ஹனுமன் கவசம் இதோ!

vetrilai-malai-hanuman

ஸ்ரீ ராம தூதா அனுமந்தா
வர வர ம் சுவாகா

இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்களுடைய உடம்பில் இருக்கும் சக்கரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். எதிர்மறை ஆற்றலினால் உங்கள் உடலில் இருக்கும் சக்கரங்கள் பாதிக்கப்பட்டு செயல்படாமல் இருந்தாலும், அந்த சக்கரங்களில் ஏற்பட்டிருக்கும் கட்டு உடைக்கப்படும். உங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வட்டம் வந்துவிடும். எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் உங்களை தாக்காது. உங்களுடைய முன்னேற்றத்திற்கு தடையாக எந்த சக்தியும் செயல்படாது.

hanuman-heart

உங்களை சுற்றி இருக்கும் ஆரா வட்டத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் வாழ்நாள் முழுவதும் அனுமனை நினைத்து இந்த கவசத்தை நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்