படிகாரம் கல் உண்டாக்கும் மருத்துவ ரீதியிலான நன்மைகள் என்ன தெரியமா?

padikaram
- Advertisement -

பல வகையான பொருட்களை மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தியவர்கள் நமது நாட்டின் பண்டைய மருத்துவ முறைகளை ஏற்படுத்தியவர்களான சித்தர்கள். அதில் அவர்கள் பயன்படுத்திய ஒரு வகை மருத்துவ குணம் மிக்க உப்பு படிமம் தான் படிகாரம் என்படும் படிகாரக் கல். இந்தப் படிகாரம் என்பது அலுமினியத்தின் நீர்ரேற்றிய இரட்டை சல்பைட் உப்பு ஆகும். இந்த படிகாரக்கல் நமது சித்த மருத்துவக் குறிப்புகளில் சீனாக்காரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பன்னெடுங்காலமாகவே இந்த படிகார கல் கொண்டு பல்வேறு வகையான உடல்நல பாதிப்புகளை போக்கியுள்ளனர் நமது முன்னோர்கள். அந்த படிகார கல் கொண்டு நமக்கு உண்டாகும் எத்தகைய உடல்நல பிரச்சனைகள் மற்றும் குறைபாடுகளை போக்கிக் கொள்ளலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

padikaram

படிகாரம் பயன்கள்

எதிர்மறை சக்திகள் நீங்க
படிகார கல்லுக்கு எதிர்மறையான சக்திகள் மற்றும் அதிர்வுகளை ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் அதிகம் இருப்பதாக தாந்திரீகர்கள் கூறுகின்றனர். எனவே தான் பழங்காலம் முதலே நமது முன்னோர்கள் ஒரு படிகார கல்லை எடுத்து கருப்பு நிற கயிற்றில் கட்டி, வீட்டிற்கு முன்பாக தொங்கவிடும் வழக்கத்தை மேற்கொண்டனர். இவ்வாறு செய்வதால் வீட்டை நோக்கி வருகின்ற தீமையான எதிர்மறை அதிர்வுகளை அப்படியே ஈர்த்துக்கொண்டு நமது வீட்டை பாதுகாப்பதாக தாந்திரீகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

தேவையற்ற முடிகளை நீக்க

பெண்களுக்கு முகம் மற்றும் கைகளில் வளருகின்ற தேவையற்ற ரோமங்களை நீக்குவதற்கு படிகாரம் மிகப் பழங்காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அரை டேபிள்ஸ்பூன் படிகார கல் பொடியும் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீரையும் ஒன்றாக சேர்த்து, நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். முகங்கள் மற்றும் கைகளில் வளர்ந்திருக்கும் முடிகளை சவரம் செய்த பின்பு, படிகார கல் பொடி, பன்னீர் கலந்த கலவையை முகம் மற்றும் கைகளில் நன்றாக பூசிக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் கண்களுக்குள்ளாக இந்த படிகார கல் பொடி கலவை சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் வரை அப்படியே இருக்க வேண்டும். பிறகு பூசப்பட்ட கலவை ஈரத் தன்மை குறையும் போது. அதன் மீது பன்னீர் துளிகளை தெளித்துக்கொள்ளவேண்டும். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கலவை பூசப்பட்ட இடங்களை தண்ணீர் கொண்டு நன்கு கழுவ வேண்டும். கழுவிய பின் அந்த இடங்களில் துண்டைக் கொண்டு மெதுவாக தொட்டு ஈரத்தை துடைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் தேவையற்ற முடி வளர்வதை முற்றிலும் நிறுத்த முடியும்.

- Advertisement -

padikaram

பாத புண்கள் குணமாக

அத்லீட்ஸ் புட் எனப்படுவது நீண்ட நேரம் காற்று புகாத வகையில் கால்களில் ஷூ அணிந்திருப்பவர்களுக்கு கால் விரல்களின் இடுக்குகளில் வியர்வை அதிகம் சேர்ந்து, கிருமித் தொற்று உண்டாகி ஏற்படும் புண்கள் ஆகும். இத்தகைய பாத விரல் புண்களுக்கு படிகார கல் சிறந்த நிவாரணம் தருகிறது. ஒரு அகலமான பாத்திரத்தில் சூடான நீரை எடுத்துக் கொண்டு, அதில் 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் படிகாரப் பொடியை போட்டு நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கால் விரல் புண்கள், ஏற்பட்டவர்கள் அந்த பாத்திரத்திற்குள்ளாக தங்களின் பாதங்களை வைத்து பாத்திரத்தில் இருக்கும் நீரின் வெப்பம் குறையும் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நாட்களுக்கு செய்து வர கால் விரல் இடுக்குகளில் ஏற்படும் புண்கள் நீங்கும். இந்த சிகிச்சை முறையை மேற்கொள்ளும்போது சிறிது நாட்களுக்கு காற்று புகாத வண்ணம் இருக்கும் ஷூக்கள், செருப்புகள் அணியக்கூடாது.

- Advertisement -

அக்குள் பகுதி

தரமற்ற வாசனை திரவியங்களை தங்களின் அக்குள் பகுதிகளில் பூசி கொள்பவர்களுக்கு, அக்குள் பகுதியில் கருமை நிறம் ஏற்பட்டு விடுகிறது. இப்படி அக்குள் பகுதி கருமை நிறம் படிந்தவர்கள். தினமும் படிகக் கல்லை எடுத்து அப்பகுதியில் சிறிது தடவிக் கொள்வதால் சில தினங்களிலேயே அக்குள் பகுதியில் படிந்திருக்கும் கருப்பு நிறம் மாறி, அங்கிருக்கும் தோல் பழைய நிறத்திற்கு திரும்பி விடும். மேலும் அக்குள் பகுதிகளில் வியர்வையால் உண்டாகும் கெட்ட கிருமிகளின் வளர்ச்சியையும் அழித்து, உடல் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.

padikaram

கோல்டு சோர் புண்கள்

பிற நபர்களுடன் கட்டிப்பிடிப்பது மற்றும் முத்தமிடுவது போன்றவற்றால் அந்த நபர்களின் உடல் தோலில் தங்கியிருக்கின்ற கிருமிகள் நமக்கு தொற்றுவதால் உண்டாக்கும் புண்களையே ஆங்கிலத்தில் கோல்ட் சேல்ஸ் என்கின்றனர். இத்தகைய புண்கள் ஏற்பட்டவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாவார்கள். இந்த பிரச்சனைக்கு அற்புதமான இயற்கை வழிமுறை சிகிச்சையாக படிகார கல் பொடி இருக்கிறது. சிறிதளவு படிகார கல் பொடியில், சிறிது நீர் விட்டு நன்கு குழைத்து கொண்டு. கோல்டு சோர் எனப்படும் புண்களின் மீது தடவி 30 நொடிகள் வரை வைத்திருந்து, பிறகு அப்புண்களை நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் 3 முறை செய்து வந்தால் விரைவிலேயே கோல்டு சோர் புண்கள் எல்லாம் நீங்கப் பெற்று நிம்மதி அறியலாம்.

பொடுகு தொல்லை நீங்க

கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகளவு தொடர்ந்து உண்பது மற்றும் முறையான உடல் சுகாதாரத்தை பேணாதது போன்ற காரணங்களால் பலருக்கும் தலையில் பொடுகு தொல்லை ஏற்படுகிறது. பொடுகுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் ரசாயன மருந்துகளை பயன்படுவதை காட்டிலும் தலைக்கு குளிக்கும் சமயத்தில் சீயக்காய் அல்லது ஷாம்பூ உடன் சிறிதளவு படிகாரப் பொடியை சேர்த்து கலந்து, தலைக்கு போட்டு நன்றாக தேய்த்து குளித்து வந்தால் தலையில் இருக்கின்ற பொடுகுகள் முற்றிலும் நீங்கும். அடிக்கடி தலையில் அரிப்பு ஏற்படாமலும் தடுக்கும். எனினும் தலைக்கு குளிக்கும் போது தேவைக்கு அதிகமான அளவில் படிகாரப் பொடியை சாம்பூவில் கலக்கக்கூடாது.

padikaram

முகம் அழகு பெற

முகம் அழகு பெறுவதற்கு படிகார கல் மிகவும் உதவியாக இருக்கிறது. முகத்தில் ஏற்படும் தழும்புகள் நீங்கவும் முகப்பருக்கள் மற்றும் முகப்பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகள் ஆகியவற்றை நீக்கி, முகப் பளபளப்பு பெற படிகார கல் உதவுகிறது. சிறிதளவு படிகார கல் பொடியை எடுத்து, அதில் தண்ணீரை விட்டு நன்கு குழைத்து முகத்தில் கண்களை தவிர மற்ற இடங்களில் நன்கு பூசிக் கொள்ள வேண்டும். ஒரு இருபது நிமிடம் அக்கலவையை முகத்தில் காய வைத்து விட்டு, பிறகு முகத்தை கழுவி வந்தால் முகப்பருக்கள் ஏற்படாமல் தடுக்கும். ஏற்கனவே இருக்கின்ற முகப் பருக்களை நீக்கி, கரும்புள்ளிகள் ஏற்படாமல் காக்கும். தளர்ந்துபோன முக தசைகள் மற்றும் தோலை வலுப்பெறச்செய்யும். தண்ணீருக்கு பதிலாக படிகார கல் பொடியில் முட்டையின் வெள்ளை கருவை கலந்து முகத்தில் தடவி வந்தாலும் மேற்கூறிய பலன்கள் கிடைக்கப்பெறும்.

தண்ணீரை சுத்திகரிக்க

உலகம் பெருமளவு தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும், தற்போது இருக்கின்ற மக்கள் தொகையை ஒப்பிடும் போது வெறும் 5% அளவிற்கு தூய்மையான தண்ணீர் உலகில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. அதிலும் பல இடங்களில் மாசடைந்த குடிநீரையே மக்கள் பயன்படுத்துகின்றனர். இத்தகைய மாசுக்கள் நிறைந்த குடிநீரில் இருக்கும் நுண்கிருமிகள் மற்றும் நச்சுக்களை போக்க படிகார கல் உதவுகிறது. பழங்காலம் முதலே படிகாரம் இயற்கை நீர் சுத்திகரிப்பு வடிகட்டியாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. தண்ணீர் சுத்தம் செய்ய விரும்புவர்கள் ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் அளவு படிகாரக்கல் பொடியை நீரில் சேர்த்து சிறிது நேரம் காத்திருந்து நீரை கவனிக்க வேண்டும். அப்படி அந்த நீர் தூய்மையாகாத பட்சத்தில் சிறிது, சிறிதாக படிகார கல் பொடியை தண்ணீரில் சேர்க்கலாம். அதிக அளவில் எக்காரணம் கொண்டும் படிகார கல் பொடி நீரில் சேர்க்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது அந்நீரை அருந்துபவர்களுக்கு சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவையும் ஏற்படக்கூடும்.

padikaram

முகசவர காயங்கள்

முகச்சவரம் செய்யும் பல ஆண்களுக்கு அவ்வப்போது முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் சவரக் கத்தியால் சிறிய அளவிலான வெட்டுக்கள், சிராய்ப்புகள் போன்றவை ஏற்படுகின்றன. இதற்கு ஆப்டர் லோஷன் எனப்படும் ரசாயனம் நிறைந்த திரவங்களை அந்த வெட்டுக் காயங்கள், புண்கள் மீது தடவுவதை காட்டிலும் இயற்கை கிருமி நாசினியாக இருக்கும் படிகாரக்கல்லை கொண்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவுவதால் சவரக் கத்தியால் ஏற்பட்டிருக்கும் வெட்டு காயங்கள், சிராய்ப்புகளில் கிருமி தொற்று ஏற்படாமல் தடுத்து வெகு சீக்கிரத்தில் அப்புண்களை ஆற்றுகிறது.

கண்களின் கருவளையம் நீங்க

கண்களுக்கு கண்ணாடி அணிந்து கொள்பவர்கள் மற்றும் அதிக நேரம் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் ஆகியோர்களின் கண்களுக்குக் கீழே கருவளையம் ஏற்படும் சாத்தியங்கள் அதிகமாகின்றன. இப்படி கண்களுக்குக் கீழே கருவளையம் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள், சிறிது படிகாரப் பொடியை நீர் விட்டு நன்கு குழைத்து கண்களுக்குள்ளாக படாமல், கண்களுக்கு கீழே இறக்கும் கருவளையங்கள் மீது தடவி வருவதால் விரைவிலேயே கருவளையங்கள் நீங்கி, கண்கள் கீழிருக்கும் கருமை நிறம் மாறும், கண்களின் தோல் பகுதி இயல்பான நிறம் பெறும்.

இதையும் படிக்கலாமே:
வைட்டமின் ஏ பயன்கள்

இது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Padikaram payangal in Tamil. It is also called as Padikaram benefits in Tamil or Padikara kal in Tamil or Padikaram for face in Tamil or Padikaram maruthuva payangal in Tamil.

- Advertisement -