இந்தப் பொருட்கள் உங்கள் படுக்கை அறையில் இருந்தால், குடும்ப தலைவருக்கு மீண்டும் மீண்டும் தீராத கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும்.

couple-fight-bedroom
- Advertisement -

வீடு என்பது நாம் சகல சௌபாக்கியத்துடன் சந்தோஷமாக வாழ்வதற்கு தான். அப்படி இல்லாமல் போனால், வீட்டில் நிம்மதியே இருக்காது. இதற்கு என்ன காரணம் என்று நாம் பலவிதமாக சிந்தித்துக் கொண்டு இருப்போம். ஆனால் நாம் செய்திருக்கும் சிறு, சிறு தவறுகள் தான் இவ்வளவு பெரிய பிரச்சனைகளுக்கு காரணம் என்று நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் வீட்டில் கணவன் மனைவிக்குள் அன்னோனியம் இல்லை, குழந்தைகள் உங்கள் சொல் பேச்சைக் கேட்பதில்லை, வீட்டில் இருப்பவர்களுக்கு உடல்நல கோளாறு, இதுபோன்று ஏதேனும் பிரச்சினைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால், முதலில் இந்தத் தவறுகளை நீங்கள் செய்திருக்கிறீர்களா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு வீட்டில் பூஜையறை, சமையலறை, எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் படுக்கையறை. இறைவனை வணங்கி, நன்றாக உண்டால் மட்டும் வாழ்க்கை முழுமை அடைந்து விட்டாது. கணவன் மனைவிக்குள் அன்னோனியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதற்கு படுக்கை அறையில் நீங்கள் வைக்கும் சில பொருட்கள் தடையாக இருந்தால், உங்களின் இல்லற வாழ்க்கை கெடுவதோடு, மேலே சொன்ன பிரச்சனைகளும் உங்கள் வீட்டை சூழ்ந்து கொள்ளும். அது என்னென்ன பொருட்கள் தெரிந்து கொள்ளலாம் .

- Advertisement -

முதலில் வாடகை வீடுடோ சொந்த வீடுடோ, படுக்கையறை ஆனது தென்மேற்கு திசையில் தான் இருக்க வேண்டும். இதை நீங்கள் சொந்தமாக வீடு கட்டினாலும் சரி, வாடகைக்கு சென்றாலும் சரி இந்த திசையில் தான் படுக்கையறை உள்ளதா என்பதை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

முதலில் படுக்கை அறையில் இருக்கவே கூடாது ஒரு முக்கியமான பொருள் கண்ணாடி. இந்த கண்ணாடி படுக்கையறையில் இருக்கும் போது நமக்கு எப்போதுமே மூன்றாவது ஒரு நபர், நமக்கு இடையில் இருப்பதைப் போன்று இருக்கும் இது அவ்வளவு நல்லதல்ல.

- Advertisement -

இரண்டாவது கடிகாரம். இதுவும் படுக்கை அறையில் இருக்கக் கூடாது. கடிகாரம் மட்டுமல்ல நாம் கைகளில் கட்டும் கை கடிகாரம் கூட இந்த படுக்கை அறையில் கழற்றி வைப்பதை தடுத்தால் நல்லது.

அடுத்து மீன் தொட்டிகள் ஏப்போதும் படுக்கையறையில் வைக்கக்கூடாது. இதை முடிந்த அளவிற்கு உங்கள் வரவேற்பறையில் வைத்து விடுங்கள். ஏன் என்றால் இதை அனைவரும் பார்க்கும் இடத்தில்தான் வைக்க இருக்க வேண்டும். உங்கள் படுக்கையறை அப்படி அல்ல.

- Advertisement -

அதே போன்று கணினி, டிவி இவை இரண்டும் உங்கள் படுக்கை அறையில் இருந்தால், இதனிலிருந்து வெளிவரும் ஒளி காற்றானது, அந்த படுக்கை அறையில் உள்ள நேர்மறை ஆற்றலை முற்றிலும் குறைத்து விடும்.

அடுத்து தையல் மெஷின். பொதுவாக இரும்பு சார்ந்த எந்த பொருளையும், படுக்கை அறையில் வைக்கக்கூடாது. சில பெண்கள் படுக்கையறையில் தையல் மெஷின் வைத்திருப்பது தங்களுக்கு வசதி ஆக இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு, இரும்பு எதிர்மறை ஆற்றலை கொடுத்து கொண்டிருக்கும் எனவே அதையும் படுக்கையறையில் இருப்பதை தவிர்த்து விடுங்கள்.

அதே போல படுக்கையறையில் தெய்வங்களின் படங்களோ, இறந்தவர்களின் படங்களோ, அல்லது ஒற்றைப் பெண்ணின் ஓவியம், இது போன்றவைகள் எதுவும் உங்கள் படுக்கை அறையில் கண்டிப்பாக இருக்கக் கூடாது.

இதை எல்லாம் சற்று கவனமாக பார்த்து, மேலே குறிப்பிட்டவைகளில் எது உங்கள் படுக்கை அறையில் இருந்தால் அதை கட்டாயமாக வேறு இடங்களில் மாற்றி வைத்து விடுங்கள். இதனால் வீட்டின் தலைவருக்கு பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

- Advertisement -