Surgical Strike : சர்ப்ரைஸ் தாகுத்துதலுக்கு தயாராக இருங்கள். இந்தியாவை மிரட்டிய பாக் ராணுவ மேஜர் ஆசிப் காபர் – வீடியோ

Pak-Major
- Advertisement -

இந்தியா நேற்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி அவர்களை தாக்கியது. இந்த தாக்குதலில் பால்கோட் பகுதி முழுவதும் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. மேலும், இந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து பாகிஸ்தான் எந்த நேரத்திலும் இந்தியாவை தாக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் முதற்கட்டமாக பாகிஸ்தான் ராணுவ மேஜர் இந்தியாவிற்கு எதிராக சர்ப்ரைஸ் தாக்குதல் நடத்தப்போவதாக கூறியுள்ளார்.

- Advertisement -

நேற்று மாலையில் இருந்து ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்தியா பாதுகாப்பினை தீவிரப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவ மேஜரின் மிரட்டலை அடுத்து எந்த நேரத்திலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உச்சகட்ட பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிராக நேரடியாக மிரட்டலை வீட்டுக்கு அவர்களை இந்திய ராணுவம் முற்றிலும் அழிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அடுத்தடுத்து எல்லையில் பதற்றம் நீடிப்பதால் இன்று அல்லது நாளைக்குள் தாக்குதல் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -