பற்களில் மஞ்சள் கறை படிவதற்கு காரணம் மது, புகையிலை போன்ற பழக்கங்கள் தான் என்று இதுவரை நாம் நினைத்திருந்தோம் ஆனால் இது முற்றிலும் தவறு. இப்படி போதைப் பொருட்களை உபயோகிப்பவர்களுக்கு மட்டும் இந்த கரைகள் ஏற்படுவதில்லை. உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகளாலும், அஜீரண குறைபாடு இருந்தாலும், வாய்வு தொல்லை இருந்தாலும், இந்த பற்களில் மஞ்சள் கறை படியும் பிரச்சனை வரக்கூடும். அது மட்டும் இன்றி குழந்தைகளுக்கு பெருமளவில் இந்த மஞ்சள் கறை பற்கள் இருக்கிறது அதற்கு முக்கியமான காரணம் அவர்கள் சரியான முறையில் பல் தேய்க்காதது தான். இப்படி எந்த சூழ்நிலையில் உங்கள் பற்களில் மஞ்சள் கறை படிந்து இருந்தாலும், இந்த முறையை ஒரே ஒரு முறை பயன்படுத்தினாலே போதும் உங்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் காணாமல் போய் விடும்.
மஞ்சள் கறை படி இந்த பற்களை ஒரே நாளில் மாற்றக்கூடிய அந்த குறிப்பை தெரிந்து கொள்ளவே இந்த பதிவு. வாருங்கள் பதிவுக்குள் சென்று குறிப்பை தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு முதலில் ஒரு ஐந்து பல் பூண்டை தோலுரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டை இடி உரலில் சேர்த்து நன்றாக இடித்து பேஸ்ட் போல செய்து இடித்த பூண்டு பேஸ்ட்டை ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு அரை தக்காளி பழத்தின் சாரை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் நீங்கள் உபயோகிக்கும் எந்த ஒரு டூத் பேஸ்ட் ஆக இருந்தாலும் போதும். அதில் ஒரு கால் ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் சமையல் சோடா எனப்படும் ஆப்ப சோடா மாவை ஒரே ஒரு சிட்டிகைக்கும் குறைவாக இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை சேர்க்கும்போது கவனமாக சேருங்கள் ஒரே ஒரு சிட்டிகைக்கும் குறைவாக தான் சேர்க்க வேண்டும். எந்த காரணத்திற்கு கொண்டும் இதன் அளவு மட்டும் கூடி விடக்கூடாது கவனம். இப்போது அனைத்தையும் சேர்த்து நல்ல ஒரு பேஸ்ட் பதத்திற்கு அடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த பேஸ்ட்டை உங்கள் பிரஷ்ஷில் வைத்து இரண்டு நிமிடம் வரை தேய்க்க வேண்டும். அதற்கு மேல் தேய்க்க கூடாது அது பற்களுக்கு நல்லதல்ல. பிரஷ்சை காட்டிலும் உங்கள் ஆள்காட்டி விரலில் இந்த பேஸ்ட்டை எடுத்து தேய்க்கும் போது கறை மறைவதோடு மட்டுமில்லாமல் உங்கள் பற்கள், தாடைகளுக்கு எல்லாம் நன்றாக ஒரு மசாஜ் செய்தது போலவும் இருக்கும். எனவே முடிந்த அளவுக்கு ஆட்காட்டி விரலில் இந்த பேஸ்ட்டை எடுத்து தேய்க்க பாருங்கள்.
முதல் முறை தேய்த்த உடனே உங்களுக்கு நல்ல மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். இருந்தாலும் இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தேய்க்க வேண்டும். ஆனால் இதை முன்கூட்டியே செய்து எடுத்து வைக்கக்கூடாது பேஸ்டை தயாரித்து உடனே தேய்க்க வேண்டும். அப்போது தான் நல்ல பலனைத் தரும். ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து தேய்க்கும் போது இதில் சேர்த்து இருக்கும் பொருட்களின் மருத்துவ தன்மைகளும், கறையை நீக்கும் தன்மைகளும் மாறி விடும். எனவே தேய்ப்பதற்கு சற்று முன்னதாக இதை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வாரத்துக்கு இரண்டு முறை இதை வீட்டில் உள்ள அனைவருமே தேய்க்கலாம்.
இதையும் படிக்கலாமே: வெறும் 2 ரூபாய் செலவில் இப்படி ஒரு பளபளக்கும் சருமத்தை பெற முடியுமா. தினமும் 1 டம்ளர் இந்த ஜூஸ் குடிச்சு பாருங்க. கண்ணாடிய பார்த்த நீங்க அசந்து போவிங்க.
இது பல் சொத்தை, வாய் துர்நாற்றம் போன்ற வாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு நல்ல தீர்வை தரும். இதை பற்களில் மஞ்சள் நிறம் படிந்தவர்கள் மட்டும் தான் தேய்க்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. அனைவருமே இந்த முறையை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.