ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ள பலாக்காய் உருளைக்கிழங்கு குருமா இப்படி செய்து பாருங்கள் இனி கிடைக்கும் போதெல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

palaakkaai-kuruma2
- Advertisement -

பலா சீசன்களில் பலாப்பழத்தை வாங்கி சுவைக்கும் நாம் அதன் பலக்காயை மறந்து போய் விடுவது உண்டு. இன்னும் சிலர் அதனை குழம்பு வைத்து சாப்பிடுவார்கள் அல்லது பொரியல் செய்து சாப்பிடுவார்கள். அந்த வகையில் பலாக்காய் வைத்து செய்யக்கூடிய இந்த அற்புதமான குருமா குழம்பு நிச்சயம் அனைவருக்கும் மிகவும் இஷ்டமானதாக இருக்கும். பலாக்காய் மற்றும் உருளைக்கிழங்கு வைத்து செய்யக் கூடிய இந்த குழம்பு உங்களுக்கு வித்தியாசமான சுவையைக் கொடுக்க இருக்கிறது. நீங்களும் அதனை சுவைக்க இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.

palaakkaai

பலாக்காய் உருளைக்கிழங்கு குருமா செய்ய தேவையான பொருட்கள்:
பலாக்காய் – 100 கிராம், உருளைக்கிழங்கு – 200 கிராம், வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 2, பட்டை, ஏலக்காய், கிராம்பு – தலா ஒன்று, தனியாத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு, தயிர் – 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு பேஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 4 டீஸ்பூன், மல்லித்தழை, புதினா இலை – கொஞ்சம், தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 4.

- Advertisement -

பலாக்காய் உருளைக்கிழங்கு குருமா செய்முறை விளக்கம்:
முதலில் பலாக்காயை தோல் நீங்கி சுத்தம் செய்து துண்டு துண்டாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் மற்றும் தக்காளியை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் குக்கர் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு நெய் விட்டுக் கொள்ளுங்கள். நெய் பிடிக்காதவர்கள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம் தவறில்லை. நெய் காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைப் போட்டு தாளிப்பு செய்ய வேண்டும்.

palaakkaai-kuruma

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். அதனுடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலைகள், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி சேர்த்து நன்கு மைய வதக்க வேண்டும். அனைத்தும் நன்கு மசிய வதங்கியதும், வேக வைத்த உருளைக் கிழங்குகளை மசித்து சேர்த்து மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் ஆகிய மசாலா வகைகளையும் சேர்த்து வதக்க வேண்டும்

- Advertisement -

பின்னர் தேவையான அளவிற்கு தயிர் மற்றும் உப்பு சேர்த்து குறைந்த தீயில் நன்கு வேக விடுங்கள். பின்னர் காய்கறிகள் அனைத்தும் வெந்து வந்ததும் தேங்காய் மற்றும் முந்திரி பருப்புகளை சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கலவையை இதில் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். மசாலா வாசம் போக, காய்கறிகள் வேக நல்ல மணம் வீசத் தொடங்கும். அவ்வளவு தாங்க ரொம்ப ரொம்ப சுலபமாக பத்து நிமிஷத்தில் பலாக்காய் உருளைக்கிழங்கு குருமா செய்து அசத்தி விடலாம்.

palaakkaai-kuruma1

பலாக்காய் உடலில் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் போல செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் இதனிடம் உண்டு எனவே பலாக்காயை சீசன்களில் இனியும் மறக்காமல் வாங்கி இப்படி ஏதாவது ஒரு முறையில் சமையல் செய்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை நல்கும். பலாக்காயில் 60 சதவீதம் அளவிற்கு கரையாத நார்ச்சத்துக்கள் உண்டு எனவே இது ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைத்து உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவும். உணவே மருந்து என்பதால் உண்ணும் உணவில் நல்ல சத்துள்ள வகைகளை அனுதினமும் சேர்த்துக் கொள்வது மிகவும் நன்று.

- Advertisement -