- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பலாக்கொட்டை மசால் வடை செய்முறை

பலாக்கொட்டை மசால் வடை செய்முறை

- Advertisement -

முக்கனிகளில் மிகவும் இனிப்பு சுவை மிகுந்ததாக திகழக்கூடியது தான் பலா பழம். இது வெயில் காலத்தில் அதிக அளவில் கிடைக்கக்கூடிய ஒரு பழமாக திகழ்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பழத்தை விரும்பாத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இனிப்பு சுவை மிகுந்த பழமாக இந்த பழம் திகழ்கிறது. இந்த பழத்திற்குள் இருக்கக்கூடிய கொட்டையை நாம் சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியாமல் அதை பயன்படுத்தி வடை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்க போகிறோம்.

வீணாக தூக்கி எறியும் ஒவ்வொரு பொருட்களையும் நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அந்த வகையில் பலாக்கொட்டையை வைத்து பலரும் பொறியியல், அவியல், கூட்டு என்று செய்வார்கள் இப்படி செய்யும் பொழுது அதை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்களா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்னாக்ஸை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:
பலாக்கொட்டை – ஒரு கப்
பூண்டு – 10 பல்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
கடலை மாவு – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
கருவேப்பிலை – ஒரு கொத்து
வெங்காயம் – ஒன்று கொத்தமல்லி
புதினா நறுக்கியது – ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் – பொறிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:
முதலில் பலாக்கொட்டையை சுத்தம் செய்து ஒன்று இரண்டாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அதில் பூண்டு, சோம்பு இரண்டையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்கக் கூடாது. அரைத்த இந்த பலாக்கொட்டையை ஒரு மிக்சிங் பவுலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதனுடன் கடலை மாவு, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி புதினா இவற்றையும் சேர்த்து முதலில் தண்ணீர் விடாமல் நன்றாக பிணைந்து கொள்ளுங்கள்.

வடை மாவு பதத்திற்கு வந்துவிட்டது என்றால் அப்படியே விட்டு விடலாம். உதிரி உதிரியாக இருக்கிறது என்னும் பட்சத்தில் லேசாக தண்ணீர் தெளித்து பிணைய வேண்டும். தண்ணீரை ஊற்றி பிணைய கூடாது. இப்பொழுது வடை மாவு தயாராகிவிட்டது.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மசாலாவடை தட்டுவது போல் இந்த மாவை எடுத்து தட்டி அப்படியே எண்ணெயில் போட வேண்டும். மிதமான தீயில் வைத்து வடையை இரண்டு புறமும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.

மிகவும் சுவையான பலாக்கொட்டை மசாலாவடை தயாராகி விட்டது. கடலை மாவு இல்லாத பட்சத்தில் கடலை மாவிற்கு பதிலாக பொட்டுக்கடலையை அரைத்தும் சேர்த்துக் கொள்ளலாம். அதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பச்சை பயறு தோசை செய்முறை

வேண்டாம் என்று தூக்கிப் போடும் பலாக்கொட்டையை இப்படி ஸ்னாக்ஸ் ஆக செய்து கொடுத்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் சாப்பிட வைக்கலாம்.

சற்று முன்