வீட்டில் பல்லி எந்த திசையில் சத்தமிட்டால் அதிஷ்டம் வரும் தெரியுமா?

lizard

நம் வீடுகளில் சுற்றி திரியும் பல்லிகள் அவ்வவ்போது ஒருவிதமான சத்தமிடுவது வழக்கம். அத்தகைய சத்தங்களை பல்லிகள் எந்த திசையில் இருந்து எழுப்புகிறதோ அதற்கு ஏற்றாற்போல் பலன்கள் உண்டு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் எந்த திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.

lizard

நன்மை தரும் திசைகள்:

ஒரு வீட்டின் தெற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிஷ்டம் வந்தடையும், விரைவில் சுப காரியம் ஏற்படும் என்பதை குறிப்பதாகும்.

ஒரு வீட்டின் தென்மேற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நண்பர்களாலோ அல்லது உறவினர்களாலோ எதிர்பாராத நன்மை ஏற்படும் என்பதை குறிப்பதாகும்.

lizard

- Advertisement -

ஒரு வீட்டின் வடக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் அந்த வீட்டிற்கு விரைவில் சுபச்செய்தி வரும் என்று அர்த்தம்.

இதையும் படிக்கலாமே:

பல்லி விழும் பலன்

தீமை தரும் திசைகள்:
ஒரு வீட்டின் தென்கிழக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் அந்த வீட்டில் விரைவில் கலகம் ஏற்படும் என்பதை குறிப்பதாக அர்த்தம். அதோடு ஒரு வாரத்திற்குள் அந்த வீட்டிற்கு ஏதவது ஒரு அசுப செய்தி வந்தடையும் என்பதை குறிப்பதாகும்.

வீட்டின் கிழக்கு கிழக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு தேவை இல்லாத பயம் ஏற்படும் என்பதை குறிப்பதாக அர்த்தம்.

lizard in house

பக்கத்துக்கு மனையிலோ அல்லது பக்கத்து வீட்டிலோ உள்ள பல்லி கிழக்கு திசையில் சத்தமிட்டால் அது மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. வீட்டில் யாருக்காவது உடல்நல குறைவு இருந்தால் அது மேலும் அதிகரிக்கும் என்பதை குறிப்பதாக அர்த்தம்.

பக்கத்துக்கு மனையிலோ அல்லது பக்கத்து வீட்டிலோ உள்ள பல்லி தெற்கு திசையில் சத்தமிட்டால் அது நம் வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத தோல்வி உண்டாகும் என்பதை குறிப்பதாகும். அதோடு தேவை இல்லாத விரய செலவு, நஷ்டம் போன்றவை ஏற்படும் என்பதை குறிப்பதாகும்.