வெள்ளி செவ்வாய் கிழமைகளில், மாலை நேரத்தில் பல்லி வீட்டில் சத்தம் எழுப்பும் போது, இதை மட்டும் செய்யுங்கள் போதும். உங்களுடைய வேண்டுதல் உடனே பலிக்கும்.

palli
- Advertisement -

வீட்டில் பல்லி சத்தம் எழுப்பும் போது சில சகுனங்களை அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் கணித்து வந்தார்கள். ஆனால் காலப்போக்கில் அந்த சகுனம் எல்லாம் மூட நம்பிக்கைகள் என்று மறைந்து விட்டது. ஆனால் நம்முடைய இந்து சாஸ்திரத்தின் படி பல்லியை நாம் கடவுளாக பாவித்து தான் வணங்குகின்றோம். நம்முடைய வீட்டில் குறிப்பிட்ட சில நாட்களில் பல்லி சத்தம் எழுப்பும்போது நாம் என்ன செய்தால், நம்முடைய வேண்டுதல் உடனே பலிக்கும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

palli

குறிப்பாக உங்களுடைய வீட்டில் வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை அமாவாசை பவுர்ணமி போன்ற நல்ல நாட்களில் பல்லி சத்தம் போட்டுக் கொண்டு இருக்கும் சமயத்தில், நீங்கள் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்களே எதிர்பாராத நன்மைகள் உங்களை தேடி வரும். இந்த வெள்ளி செவ்வாய் பவுர்ணமி அமாவாசை தினங்களில் பல்லி சத்தம் போட்டால் அது உங்களுடைய வீட்டிற்கு நல்லதுதான்.

- Advertisement -

பல்லி உங்கள் வீட்டு உள்பக்கம் வெளிப்பக்கம் எங்கிருந்து சத்தத்தை எழுப்பினாலும் சரி, அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை நிச்சயமாக கண்டுபிடித்துவிட முடியும். பல்லி சத்தம் எழுப்பும் போது அந்த பல்லி உங்களுடைய கண்களுக்கு தென்பட்டாலும் சரி, அல்லது கண்களுக்குப் புலபடவில்லை என்றாலும் சரி, அந்த இடத்திற்கு நேராக போய், அந்த திசையில் நின்று கொள்ள வேண்டும்.

lizard

கொஞ்சம் அட்சதையை கையோடு எடுத்துச் செல்லுங்கள். அந்த அட்சதையை பல்லி சத்தம் போடக் கூடிய இடத்திற்கு நேராக தூவிவிட்டு, உங்களுடைய மனதில் இருக்கும் வேண்டுதலை உங்களுடைய குலதெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும். வேண்டுதல் நிறைவேற மனதார பிரார்த்தனை செய்துகொண்டு பல்லி சத்தம் எழுப்பக் கூடிய இடத்தில் நமஸ்காரத்தை செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்தால் நீங்கள் வைத்த வேண்டுதல் ஒரு சில நாட்களிலேய பளிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. (பச்சரிசியில் கொஞ்சமாக நெய், மஞ்சளும் கலந்து தயார் செய்வதே அட்சதை ஆகும்.)

- Advertisement -

எப்படிப்பட்ட வேண்டுதலை வைக்கலாம். உங்களுடைய தொழிலில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும். கடன் பிரச்சனை தீர வேண்டும். வீட்டில் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும். குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும். வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க வேண்டும் என்று இப்படி என்ன வேண்டுமோ உங்களுடைய வாழ்க்கைக்கு தேவையான வரம், அதை வேண்டிக் கொள்ளலாம். உங்களுடைய வேண்டுதலுக்கு பதில் சொல்லும் வகையில் பல்லி மீண்டும் சட்டம் எழுப்பினாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுவும் இல்லை.

lizard

நம்முடைய வீட்டில் பல்லி வடிவத்தில் நடமாட கூடியது கட்டாயமாக நல்ல சக்தியாக தான் இருக்கும். நல்ல தேவதைகள் தான் பல்லியின் ரூபத்தில் வருமே தவிர கெடுதல் செய்யக் கூடிய எந்த சக்தியும் பல்லி ரூபத்தில் நம்முடைய வீட்டிற்குள் நுழைய முடியாது என்றும் நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

atchathai

இதேபோல் சில பேர் வீடுகளில் தினம்தோறும் பல்லி சத்தம் போட்டுக் கொண்டே இருக்கும். இப்படி இருந்தால் என்ன பலன். உங்களுடைய வீட்டில் ஏதாவது பிரச்சனை இருக்கின்றது, அல்லது ஏதாவது ஒரு பிரச்சனை வரப் போகின்றது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துவதற்காக கூட, உங்கள் குலதெய்வம் இஷ்ட தெய்வமே பல்லியின் ரூபத்தில் வந்து சொல்லலாம்.

இப்படி உங்களுடைய வீட்டில் பல்லி சத்தமிட்டுக் கொண்டே இருந்தால் அதற்காக பயப்படவும் வேண்டாம். குலதெய்வ கோவிலுக்கு சென்று உங்கள் குடும்பத்திற்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் குலதெய்வத்தை மனதார வீட்டிலிருந்தே பிரார்த்தனை செய்து கொண்டு வீட்டிற்கு எந்த கஷ்டமும் வராமல் இருக்கவேண்டும் என்று உங்கள் வீட்டு முறைப்படி வீட்டிலேயே குலதெய்வ பூஜை நடத்தலாம். இந்த பூஜையை செய்தபின்பு பல்லியின் சத்தத்தில் நிச்சயமாக வித்தியாசத்தை உணர்வீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -