நீண்ட கால திருமண தடை, குழந்தைப்பேறின்மை தீர இங்கு சென்று வழிபடுங்கள்

laksmi

பணம் மகாலட்சுமியின் அம்சம் என்று கூறுவார்கள். அதே போன்று பெண்ணும் மகாலட்சுமி தன்மை நிறைந்தவள். எனவே பெண்கள் எங்கு சிறப்பாக வாழ்கிறார்களோ அங்கே லட்சுமி தேவி வாசம் செய்கிறாள். தன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க அவர்களின் இருக்கும் இடத்திற்கே செல்கிறாள். அப்படி தன்னை வழிடும் மக்களுக்காக வந்திறங்கிய பள்ளிபுரம் அருள்மிகு மலையாள மகாலட்சுமி கோயில் சிறப்புகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

mahalakshmi

அருள்மிகு மலையாள மகாலட்சுமி கோயில் வரலாறு

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாக இருக்கிறது இந்த மலையாள மகாலட்சுமி கோயில். இக்கோயிலின் பிரதான தெய்வமாக மகாலட்சுமி தாயார் இருக்கிறார். தாயாரை கடவில் மகாலட்சுமி என்றழைக்கின்றனர்.

தல புராணங்கள் படி பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக காஞ்சிபுரத்தில் நெசவு தொழில் செய்து வந்த மக்கள் தங்கள் பிழைப்பிற்காக இந்த சேத்தலா பகுதிக்கு வந்தனர். இந்த மக்கள் காஞ்சிபுரத்தில் இருந்த போது அங்கு மாகாலட்சுமிக்கென்று தனியாக ஒரு கோயில் கட்டி வழிபாடு செய்து வந்திருக்கின்றனர். அதே போன்று இங்கு வந்த பிறகும் மகாலட்சுமிக்கு தனி கோயில் கட்ட விரும்பிய போது, காஞ்சிபுரத்தில் இருந்து முதலை மீது பயணித்து இக்கோயிலின் அருகே இருக்கும் ஏரி பகுதியில் மகாலட்சுமி தோன்றி அருள்பாலித்ததாகவும் கூறப்படுகிறது.

அருள்மிகு மலையாள மகாலட்சுமி கோயில் சிறப்புகள்

அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கொடுக்கும் மகாலட்சுமி இவள் என புராணங்கள் கூறுகின்றன. அதற்கு சான்றாக முன்கைகளில் நெற்கதிர், கிளி ஆகியவையும் பின்கரங்களில் சங்கு, சக்கரம் ஆகியவற்றை ஏந்தியிருக்கிறாள். கேரளாவில் மகாலட்சுமிக்கென்று அமைந்திருக்கும் தனி கோயில் இது தான். லட்சுமி தாயார் இங்கு கிழக்கு திசையை நோக்கி சூரிய நாராயணனை பார்த்தவாறு நின்றிருக்கிறாள். கோயில் சுற்று பிரகாரங்களில் கணபதி, ஐயப்பன், சிவன், கொடுங்காளி, ஷேத்திர பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள்.

- Advertisement -

mahalakshmi

மகாலட்சுமி இங்கு வந்திறங்கியதாக கருதப்படும் இடம் எரிக்கருகில் உள்ளது. இன்றும் அந்த இடம் நன்கு பராமரிக்க பட்டு வருகிறது. இந்த ஏரியின் நீர் உப்புத்தன்மை நிறைந்ததாக இருக்கிறது. ஆனால் மகாலட்சுமி வந்து இறங்கியதாக கருதப்படும் பகுதியில் மட்டும் சுவையான நீர் இருக்கிறது. முற்காலத்தில் இந்த ஏரியில் மகாலட்சமியை தாங்கி வந்ததாக கருதப்படும் முதலை இருந்ததாகவும், அதற்கு பக்தர்கள் உணவு கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பிற்காலத்தில் கல்லால் ஆன முதலையின் சிலையை கோயில்கருவறைக்கு அருகில் வைத்து விட்டார்கள்.

vishnu

சூரிய உதயத்தின் போது மகலாட்சுமி வந்திறங்கியதாக கருதப்படும் பகுதியில் இருக்கும் நீரை அருந்தி விட்டு, முகம், கை கால்களை கழுவிக்கொண்டு மகாலட்சுமியை நாராயணனுடன் தரிசித்த பலன் கிடைத்து நீண்ட நாட்களாக திருமண தடை, தாமதங்கள் ஏற்பட்டவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு உண்டாகும்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு மலையாள மகாலட்சுமி கோயில் கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் பள்ளிபுரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு

அதிகாலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு மலையாள மகாலட்சுமி கோயில்
பள்ளிபுரம்
ஆலப்புழை மாவட்டம்
கேரளா – 688541

இதையும் படிக்கலாமே:
தேர்வுகளில் வெற்றி பெற இங்கு சென்று வழிபடுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pallipuram mahalakshmi temple details in Tamil. It is also called as Kadavil mahalakshmi temple in Tamil or Malayala mahalakshmi temple in Tamil or Kerala temples in Tamil or Malayala mahalakshmi in Tamil.