இத மட்டும் ஸ்ப்ரே பண்ணுங்க போதும் கிச்சனில் தொல்லை தரும் பல்லிகள் ஒன்னு கூட இனிமே வராது! பல்லியை கொல்லாமல் விரட்டலாமா?

lizard-onion-puthina
- Advertisement -

பல்லியை சிலர் வீட்டில் பார்த்தாலே கொன்று வெளியில் வீசி விடுவார்கள். ஆனால் சிலர் அதை தெய்வமாகவும் கும்பிடுவார்கள். பல்லி எப்படி இருந்தாலும் சமையல் அறையில் இருப்பது என்பது ரொம்பவும் ஆபத்தான விஷயம் தான். ஒருமுறை பல்லி சமையல் கட்டில் படையெடுக்க ஆரம்பித்து விட்டால், அது முட்டையிட்டு குஞ்சு பொரிக்க ஆரம்பித்து விடும். அதனால் குட்டி குட்டி பல்லிகள் அங்கும் இங்குமாக ஓட துவங்கிவிடும் இப்படி பல்லியின் அட்டகாசம் சமையல் கட்டில் இருந்தால் நாம் சமைக்கும் பொருட்களை பாதுகாப்பாக வைப்பது என்பது கடினம் ஆகிவிடும். சமையல் கட்டில் இருக்கும் பல்லியை கொல்லாமல் எப்படி ஓட ஓட விரட்டுவது? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

பல்லியை விரட்டுவது என்பது அவ்வளவு கஷ்டமான விஷயம் அல்ல! பல்லிக்கு சில பொருட்கள் கொஞ்சம் கூட ஓவ்வாது. அத்தகைய பொருட்களை ஒன்றாக கலந்து ஆங்காங்கே வைத்து விட்டால் போதும், ஒரு பல்லி கூட அந்த பக்கம் எட்டி பார்க்காது. 15 நாட்களுக்கு ஒரு முறை இவ்வாறு செய்ய பல்லிகள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்து விடலாம். இதனால் சமையல் கட்டில் பல்லியின் எச்சங்கள் மற்றும் பல்லியினால் வரக்கூடிய பிரச்சனைகள் இல்லாமல் சுத்தமாக இருக்கும்.

- Advertisement -

பெரிய பல்லிகளை விட சிறிய பல்லிகளால் நிறையவே ஆபத்து உண்டு. அதற்கு எங்கு? எப்படி? ஓட வேண்டும் என்று தெரியாமல் தாறுமாறாக ஓட ஆரம்பிக்கும். இதனால் சமையல் பொருட்களில் விழுந்து விடுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. அதுமட்டுமல்லாமல் சமையல் பாத்திரங்களை கழுவி வைத்தாலும் பயன்படுத்தும் முன்பு ஒரு முறை கழுவ வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஏனெனில் அதில் பல்லிகளில் நடமாட்டம் அல்லது இரவு நேரங்களில் பூச்சிகளின் நடமாட்டம் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சிகள், பல்லிகள் தொந்தரவு அதிகம் இருந்தால் கண்டிப்பாக பயன்படுத்துவதற்கு முன்னர் ஒரு முறை தண்ணீரில் எந்த பாத்திரமாக இருந்தாலும் கழுவி விட்டு பின்னர் பயன்படுத்துங்கள். பல்லி, கரப்பான் பூச்சி போன்றவை பாத்திரங்களில் உட்கார்ந்து விட்டு அதில் கண்ணுக்கு தெரியாத எச்சங்களை இட்டு விட்டு சென்று விடும். அதை கவனிக்காமல் நாம் சமைப்பதால் நமக்கு தேவையில்லாத உடல் நல கோளாறுகள் ஏற்படுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

சரி, இப்பொழுது பல்லியை எப்படி விரட்டுவது? என்று பார்ப்போம். முதலில் ஒரு சிறிய பிளாஸ்டிக் பௌல் ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு மூடி டெட்டாயில் ஊற்றிக் கொள்ளுங்கள். அதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளுங்கள். இஞ்சி இடிக்கும் உரலில் நான்கு பூண்டு, பாதி அளவிற்கு வெங்காயத்தை நன்கு இடித்து எடுத்து ஒரு துணியில் சுற்றி நன்கு ஒரு ஸ்பூன் அல்லது ரெண்டு ஸ்பூன் அளவுக்கு சாறு வர பிழிந்து கொள்ளுங்கள். இதனுடன் உங்களிடம் இருந்தால் நான்கைந்து புதினா இலைகளையும் சேர்க்கலாம்.

பின்னர் இந்த கலவையில் ஒரு பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பரை நனைத்து உருண்டையாக சுற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு சிறிய தட்டுகளில் வைத்து எங்கெல்லாம் பல்லி நடமாட்டம் இருக்கிறதோ, அங்கே எல்லாம் வைத்து விடலாம் அல்லது வடிகட்டி ஸ்பிரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டால் பல்லிகள் இருக்கும் இடங்களில் ஸ்பிரே செய்தால் போதும் ஒரு பல்லி கூட இந்த வாசத்திற்கு அந்த பக்கம் வராது.

- Advertisement -