உங்கள் வீட்டிற்குள் பணம் வரும்போது, அந்த மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி இதற்கு உண்டு. இதை மட்டும் சரி செய்தாலே, வீட்டிற்குள் கோடி கோடியாக பணம் கொட்டும்.

cash-question

நம் வீட்டிற்குள் வரக்கூடிய பணத்தை, நம் வீட்டிற்குள் வரக்கூடிய மகாலட்சுமி தேவியை தடுத்து நிறுத்துவதில் வீட்டின் வாஸ்துவிற்க்குத் தான் முதலிடம். வாஸ்து ரீதியாக எந்த திசையில், எப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்தால், வீட்டில் இருக்கக் கூடிய பண பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய வீட்டில் வாஸ்து சரியில்லை, வாஸ்து தான் பிரச்சனை என்றால், அந்த வாஸ்துவை சரி செய்யாமல், வேறு எந்த பரிகார பூஜைகளை செய்தாலும், அதன் மூலம் உங்களுக்கு முழுமையான பலன் கிடைக்காது.

vasthu-vastu

எப்படிப்பட்ட வாஸ்து ரீதியான தோஷத்தையும் சரிசெய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை இந்த பதிவின் இறுதியில் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதற்கு முன்பாக வீட்டில் எந்தெந்த திசைகளில், எந்தந்த மாற்றங்களை கொண்டு வந்தால், வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறையும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோமா?

முதலில் ஒரு வீட்டின் தென்மேற்கு பகுதி எப்போதுமே மூடியபடி இருக்கவேண்டும். அந்த இடத்தில் ஜன்னல் கதவுகள் இருந்து, அது திறந்தபடி இருந்தால், நம்முடைய வீட்டில் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். நம் வீட்டில் இருக்கும் செல்வவளம் தென்மேற்கு வழியாக வெளியே செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. எப்போதுமே தென்மேற்கு பகுதியில் ஜன்னல்கள் இருந்தால் அதை சுத்தம் செய்து, மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.

vastu-direction

இதேபோல் ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையை மொத்தமாக அடைத்து வைக்கக் கூடாது. வடகிழக்கில் ஒரு ஜன்னல் அமைத்து, அந்த ஜன்னல் பகுதி எப்போதுமே சுத்தம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அந்த ஜன்னலை நாம் திறந்தபடி வைப்பது தான் நம் வீட்டிற்கு ஐஸ்வர்யத்தை கொண்டு வந்து சேர்க்கும். நிலை வாசலுக்கு பூஜை செய்து மஞ்சள் குங்கும பொட்டு வைக்கும் போது, வட கிழக்கு பக்கத்தில் இருக்கும் உங்கள் வீட்டு ஜன்னலையும் துடைத்து, கட்டாயமாக மஞ்சள் குங்கும பொட்டு இட்டால் அந்த வீட்டில் வாஸ்து ரீதியான பிரச்சினைகளினால் எந்த ஒரு கஷ்டமும் வராது.

- Advertisement -

வீட்டில் இருக்கக் கூடிய தென்கிழக்கு பகுதியில் சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசி வைப்பது மிகவும் நல்லது. முடிந்தால் அந்த தென்கிழக்கு மூலையில் சூரியன் இளஞ்சிவப்பு நிறத்தில் உதிப்பது போல ஒரு படத்தை மாட்டி வைப்பது மேலும் சிறப்பானது. இந்த படத்தை தென்கிழக்குப் பகுதியில் கொஞ்சம் உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.

vastu

வீட்டின் தென்மேற்கு மூலையில் எப்போதுமே ஒரு மஞ்சள் கிழங்கை வைத்துவிடுங்கள். ஒரு சிறிய நூலில் கட்டி ஆணியில் தொங்க விட்டாலும் சரி, தென்மேற்கு மூலையில் இருக்கும் அலமாரியில் ஒரு சிறிய கிண்ணத்தில் திறந்தபடி இரண்டு மஞ்சள் கிழங்குகளை போட்டு வைத்தாலும் சரி, உங்களுடைய வீடு எப்போதுமே மங்களகரமாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சுபகாரியத் தடைகள் ஏற்படாது.

panjamuga anjaneyar

இறுதியாக உங்களுடைய வீட்டின் கிழக்குப் பக்கம் உள்ள சுவற்றில் மேற்கை பார்த்தவாறு, பஞ்சமுக ஆஞ்சநேயர் திருவுருவப்படத்தை வைத்தால் எவ்வளவு பெரிய வாஸ்து தோஷமாக இருந்தாலும், அதன் மூலம் உங்கள் வீட்டில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. பஞ்சமுக ஆஞ்சநேயரை கிழக்கு பக்கம் உள்ள சுவற்றில் வைத்து மேற்கு பார்த்தபடியும் வைக்கலாம்.

panjamuga-anjaneyar

அப்படி இல்லை என்றால் வடமேற்கு மூலையில் இடமிருந்தால் அங்கேயும் பஞ்சமுக ஆஞ்சநேயரின் திருவுருவப் படத்தை வைத்து மிகவும் நல்லது. எந்த மூலையில் எந்த வாஸ்து தோஷம் இருந்தாலும் அது நிவர்த்தியாகும். பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வாஸ்து தோஷத்தை நீக்கக் கூடிய சக்தி முழுமையாக நிறைந்துள்ளது. முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய வீட்டில் பண கஷ்டம், மனகஷ்டம் சுபகாரியத் தடை, வீண் விரையம் என்ற பேச்சுக்கு வாய்ப்பே வராது. நல்லதே நடக்கும், என்ற நம்பிக்கையோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.