இன்றைய தினம் முருகப் பெருமானுக்கு உரிய செவ்வாய்க்கிழமை. இந்த நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடு நம்முடைய கடன் பிரச்சனையை தீர்த்து, வருமானத்தை பெருக்கி கொடுக்கும். இன்று இரவுக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடிக்க வேண்டும். நமக்கு கடன் சுமை வருவதற்கு காரணமாக இருப்பதும் இந்த செவ்வாய் பகவான் தான்.
செல்வ வளத்தை உயர்த்தி கொடுப்பதற்கு காரணமாக இருப்பவரும் இந்த செவ்வாய் பகவான் தான். செவ்வாய் பகவானின் அதி தேவதை தான் முருகப்பெருமான். ஆக இன்று முருகனை வேண்டி நாம் செய்யக்கூடிய பரிகாரம் நிச்சயம் நமக்கு வெற்றியை கொடுக்கும்.
பணப்பிரச்சனையை தீர்க்கும் ஏலக்காய் பரிகாரம்
செவ்வாய்க்கிழமை அதாவது, இன்று இரவு 12 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணியில் இருந்து 9:00 மணி வரை செவ்வாய் ஹோரை இருக்கிறது. முடிந்தவர்கள் இந்த செவ்வாய் ஹோலையில் இந்த பரிகாரத்தை செய்வது இரட்டிப்பு பலனை கொண்டு வந்து சேர்க்கும். இதற்கு பச்சை நிறத்தில் ஒரு ஏலக்காய் தேவை. சிவப்பு நிற ஸ்கெட்ச் பேனா தேவை.
முதலில் குலதெய்வத்தையும் முருகப்பெருமானையும் மனதார வேண்டி, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். தெய்வத்தை வணங்கி விட்டு ஏலக்காயை எடுத்து சிவப்பு நிற ஸ்கெட்ச் பேனாவில் அந்த ஏலக்காயில் ‘786’ என்ற நம்பரை எழுதி இந்த ஏலக்காயை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு ‘ஓம் சுப்பிரமணியாய நமஹ’ என்ற மந்திரத்தை 6 முறை சொல்லுங்கள். பிறகு உங்களுடைய பிரச்சனையை இந்த பிரபஞ்சத்திடம் சொல்லுங்கள்.
ஏதாவது ஒருபிரச்சனை சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை வைத்து, இந்த பரிகாரத்தை செய்யுங்கள். குறிப்பாக கடன் சுமை உங்களுக்கு இருக்கிறது. இந்த நபரிடம் இருந்து பணம் வர வேண்டும். இந்த நபருக்கு நான் இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும், இப்படி பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கும் அல்லவா.
அந்த குறிப்பிட்ட நபரின் பெயரைச் சொல்லி, அந்த தொகையை சொல்லி அந்த பண பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த ஏலக்காயை ஒரு சிவப்பு நிற துணியில் முடிந்து முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து, எடுத்து, அந்த முடிச்சை பீரோவில் வைத்து விடுங்கள். 48 நாள் அந்த ஏலக்காய் அப்படியே இருக்கட்டும்.
இது 48 நாட்களுக்குள் உங்களுக்கு இருக்கக்கூடிய பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள முடியுமோ, நீங்கள் அந்த முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதற்கான வெற்றியை கொடுக்கக்கூடிய வேலையை அந்த முருகப்பெருமான் பார்த்துக் கொள்வான். 48 நாட்களுக்குள் உங்கள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் நேரம் வந்துவிடும்.
இதையும் படிக்கலாமே: சித்தர் தரிசனம் பெற மந்திரம்
48 நாட்களுக்கு மேல் அந்த முடிச்சுக்கு சக்தி இருக்காது. ஆகவே அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இன்றைய தினம் இந்த பரிகாரம் பணக்கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.