பூஜை அறையில் தினமும் 2 ஏலக்காய்களை இப்படி வையுங்கள்! பலநாள் பணக் கஷ்டமும் படிப்படியாக குறைந்து, ஒரு நாள் காணாமலே போய்விடும்.

mahalashmi

பலநாள் பண கஷ்டத்திற்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அது நிச்சயமாக சாத்தியமில்லை. ஆனால் பல நாள் பணக் கஷ்டத்தை படிப்படியாக குறைப்பதற்கு ஆன்மீக ரீதியாக நிறையவே வழிபாட்டு முறைகள் உள்ளது. அந்த வரிசையில் மிக மிக சுலபமான, அதே சமயத்தில் சக்திவாய்ந்த ஒரு பரிகார வழிபாட்டு முறையைப் பற்றித் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்திற்க்கு தினமும் கட்டாயம் 2 ஏலக்காய்கள் தேவை. அந்த இரண்டு ஏலக்காய்களை பரிகாரத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Elakkai

தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு இரண்டு ஏலக்காய்களை எடுத்துக் கொண்டு பூஜை அறைக்கு செல்லுங்கள். அங்கு மகாலட்சுமியின் பாதங்களில் ஒரு ஏலக்காய், பெருமாளின் பாதங்களில் ஒரு ஏலக்காய் வைத்துவிட்டு, ஒரு தீபம் ஏற்றி வையுங்கள். பணப்பிரச்சனை தீர வேண்டும். கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

அதன் பின்பு ஐந்து நிமிடங்கள் பூஜை அறையிலேயே அமர்ந்து கண்களை மூடி பண கஷ்டம் நீங்க தியானம் செய்ய வேண்டும். மனதை ஒருநிலைப் படுத்தி கொள்ளுங்கள். முழு நம்பிக்கையோடு பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்ளுங்கள். அதன்பின்பு தீப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இந்த பூஜையை காலை 9 மணிக்கு முன்பாக எப்போது வேண்டுமென்றாலும் செய்யலாம்.

mahalashmi3

ஆனால் இந்த பூஜையை செய்து முடித்துவிட்டு அந்த இரண்டு ஏலக்காய்களை எடுத்து உங்களுடைய வாயில் போட்டுக்கொள்ள வேண்டும். நன்றாக மென்று அப்படியே சாப்பிட்டு விட்டால் பரவாயில்லை. தோலை விழுங்க முடியாதவர்கள் நன்றாக மென்று அதில் வரும் உமிழ்நீரை மட்டும் விழுங்கிவிட்டு, மீதமிருக்கும் தோலை வெளியே துப்பி விட்டாலும் தவறொன்றும் கிடையாது. அப்படி இல்லையென்றால் வெதுவெதுப்பான பாலில் ஏலக்காய்களை இடுத்து போட்டு அந்த பாலை குடித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

காலையில் எழுந்து, வெறும் வயிற்றில் இந்த பூஜையை செய்தால் வெகுசீக்கிரமே நல்ல பலனை பெற முடியும். பணகஷ்டம் நிச்சயமாக படிப்படியாக குறையும். உங்களை அறியாமலேயே உங்களுக்குள் வரக்கூடிய உத்வேகம் உங்களை நிறைய பணம் சம்பாதிக்க தூண்டும். உங்களைத் தேடி நிறைய சந்தர்ப்பங்கள் வரும் பணம் சேர்ப்பதற்கு. வீண் விரையங்கள் தானாக குறைக்கப்படும்.

perumal

கடன் பிரச்சினைகள் இருந்தால் அது படிப்படியாக குறையத் தொடங்கும். நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். கட்டாயம் 2 ஏலக்காய் தேவை எனும் பட்சத்தில் கொஞ்சம் நிறைய ஏலக்காய்களை உங்களுடைய வீட்டில் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. ஏலக்காய் இல்லாமல் பூஜை தடை பட்டதாக இருக்க வேண்டாம்.

praying-god1

பெண்களாக இருந்தால் மாதவிடாய் நாட்கள் வரும் போது அந்த 5 நாட்களில் மட்டும் இந்த பூஜையை செய்ய வேண்டாம். ஆண்கள் தொடர்ந்து இந்த பூஜையை செய்து வரலாம். இத்தனை நாட்கள் தான் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. இதை நீங்கள் எத்தனை நாட்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறீர்களோ, அவ்வளவு சுபிட்சம் உங்கள் வீட்டில் நிலைத்திருக்கும். முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.