ஆவணி மாதத்தின் சிறப்புகளில் ஒன்றாக கருதப்படுவது விநாயகர் சதுர்த்தி. வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகர் அவதரித்தார் என்பதால் அன்றைய தினம் விநாயக சதுர்த்தியாக நாம் கொண்டாடுகிறோம். இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி என்பது செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் வீட்டில் விநாயகரை வாங்கி வந்து வைத்து விநாயகருக்கு பிடித்தமான பொருட்களை அவருக்கு நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்வோம். அப்படி வழிபாடு செய்யும்பொழுது எந்த பழத்தை வைத்து வழிபாடு செய்தால் நமக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் தீரும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணக்கஷ்டத்தை தீர்க்கும் பழம்
பொதுவாக நம்முடைய வீட்டில் யாருக்காவது பிறந்தநாள் என்பது வந்தால் அன்றைய தினம் அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி கொடுத்தோ, செய்து கொடுத்தோ அவர்களை மகிழ்விப்போம். அதுபோல தான் நாம் வணங்கக்கூடிய தெய்வத்திற்கும் அவர்களுடைய பிறந்தநாள் வரும் பொழுது அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வைத்து அவர்களை நாம் வழிபாடு செய்வோம். அந்த வகையில் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி சனிக்கிழமை விநாயகரின் பிறந்தநாள் வருகிறது.
அன்று புதிதாக விநாயகரை வீட்டிற்கு வாங்கி வந்து வைத்து விநாயகருக்கு பிடித்தமான பொருட்கள் அனைத்தையும் செய்து வைத்து வழிபாடு செய்வோம். அதிலும் குறிப்பாக விநாயகருக்கு பிடித்த லட்டு, அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை , சர்க்கரை பொங்கல், சுண்டல் போன்றவற்றை வைப்போம். அதேபோல் விநாயகப் பெருமானுக்கு பழங்களும் மிகவும் பிடிக்கும். நம்மால் இயன்ற அளவுக்கு ஐந்து, ஏழு, ஒன்பது என்று எண்ணிக்கையில் பழங்களை வாங்கி வந்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
இதோடு மட்டுமல்லாமல் 21 வகையான மலர்களை வாங்கி வந்து அந்த மலர்களால் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அதேபோல் 21 இலைகளும் இருக்கும். அந்த இலைகளையும் வாங்கி வந்து விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்தோம் என்றால் விநாயகப் பெருமான் மனம் மகிழ்ந்து வேண்டுதலை நிறைவேற்றி தருவார். இப்படி வைத்து வழிபாடு செய்யக்கூடிய பொருட்களில் ஒரு பொருளை நாம் கண்டிப்பாக வைத்து வழிபாடு செய்தால் நம்முடைய பணகஷ்டம் தீரும் என்று கூறப்படுகிறது.
அதுதான் விளாம்பழம். இந்த விளாம்பழம் எங்கு கிடைக்கிறது என்பதை தேடி கண்டுபிடித்து வாங்கி வந்து விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு இந்த விளாம்பழத்தை பிரசாதமாக வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிட்டு விட வேண்டும். இப்படி விளாம்பழத்தை வைத்து நாம் விநாயகப் பெருமானை வழிபாடு செய்தோம் என்றால் விநாயகப் பெருமானின் அருளால் நம் வாழ்க்கையில் இருக்க கூடிய பணம் தொடர்பான கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவது பணவருவை அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் நம்மை தேடி வரும் என்றும் சொல்லப்படுகிறது. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டோம் என்றால் கண்டிப்பாக முறையில் நமக்கு பணவரவு அதிகரிக்கும். அதனால் பணக்கஷ்டங்கள் தீரும்.
இதையும் படிக்கலாமே:கடன் மற்றும் பணப் பிரச்சனை தீர பரிகாரம்
சற்று சிரமப்பட்டாவது இந்த ஒரு பழத்தை வாங்கி வைத்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்து பணக்கஷ்டத்திலிருந்து வெளியில் வருவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.