நம் ஒவ்வொருவரும் நம்முடைய அடிப்படை தேவைகள் பூர்த்தியடைய வேண்டும் என்பதற்காகத்தான் உழைத்து சம்பாதிக்கிறோம். பலருக்கும் எவ்வளவு உழைத்தாலும் சம்பாத்தியம் என்பது இருக்காது. அதையும் மீறி சம்பாதித்தாலும் வீண் விரயங்கள் ஏற்பட்டு அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத ஒரு நிலை உண்டாகும். இந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்றால் நம்முடைய தேவைக்கேற்ற பணவரவு ஏற்பட வேண்டும். இந்த பணவரவை தரக்கூடிய தெய்வமாக திகழ்பவர்கள் தான் பெருமாள் மற்றும் மகாலட்சுமி. இவர்கள் இருவரையும் நாம் எந்த நேரத்தில் வழிபட்டால் பண பற்றாக்குறையே இருக்காது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பண பற்றாக்குறை நீக்க மந்திரம்
வாரத்தில் ஏழு நாட்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான கிரகங்கள் அதிபதியாக திகழ்கின்றன. ஆனால் கிரகங்கள் மொத்தம் ஒன்பது. அப்படி என்றால் மீதம் இருக்கக்கூடிய இரண்டு கிரகங்களுக்கு கிழமைகள் இல்லை அல்லவா? அந்த இரண்டு கிரகங்கள் தான் ராகு மற்றும் கேது. இவர்கள் சாயா கிரகங்கள் என்பதால் இவர்களுக்கு தனியாக கிழமைகள் கிடையாது. ஆனால் இவர்கள் இருவருக்கும் தினமும் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. ராகுவிற்குரிய அந்த நேரம் தான் ராகு காலமாகவும் கேதுவுக்குரிய நேரமாக எமகண்ட நேரமும் திகழ்கிறது. இந்த நேரங்களில் நாம் செய்யக்கூடிய சில சூட்சமமான வழிபாடு நம் வாழ்க்கையை மாற்றும்.
ராகு மற்றும் கேதுவால் தான் நமக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். இவர்கள் ஒரு சில நேரங்களில் மட்டுமே நன்மைகளை செய்வார்களே தவிர்த்து மற்ற நேரங்களில் நமக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினைகளை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதனால் தான் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அதேசமயம் எமகண்ட நேரத்தில் பொதுவாக பலரும் எந்த விதமான சுப காரியங்களையும், வழிபாட்டியும் செய்ய மாட்டார்கள்.
எமகண்ட நேரம் என்பது கேதுவின் நேரம் இந்த நேரத்தில் நாம் பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய பண பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. தினமும் வரக்கூடிய எமகண்ட நேரத்தில் முதலில் பெருமாளை நினைத்து பெருமாளுக்கு உரிய பின்வரும் திருநாமத்தை 108 முறை கூறவேண்டும். அடுத்ததாக பெருமாளின் துணையாக இருக்கக்கூடிய மகாலட்சுமியின் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இப்படி தினமும் வரக்கூடிய எமகண்ட நேரத்தில் எந்த இடத்தில் இருந்தால் தொடர்ச்சியாக கூறும்பொழுது கேதுவால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் பண பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. செல்வ செழிப்புடன் வாழ முடியும்.
மந்திரம்
“ஸ்ரீனிவாசா கோவிந்தா ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா
ஓம் க்ரீம் பத்மாவதியே வசட்”
இதையும் படிக்கலாமே: குடும்பத்தலைவி செய்ய வேண்டியது
ஒருவருடைய ஜாதகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் அந்த ஜாதகத்தில் நவகிரகங்களின் அமைப்பு என்பது சரியாக இருக்க வேண்டும். ஒரு கிரகம் நன்றாக இருந்து மற்றொரு கிரகம் சரியில்லை என்றாலும் அவருக்கு பிரச்சனைகள் வரும். அந்த வகையில் கேதுவால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தீர்வும் பண பிரச்சினைகள் முற்றிலும் விலகவும் முழு மனதோடு இந்த நேரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.