கைநீட்டி கடன் வாங்குவதால் மட்டும் ஒரு மனிதனுக்கு பணப் பிரச்சனை வராது. பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என்றால் எத்தனையோ விதமான பிரச்சனைகள் இருக்கிறது. தொழில் பணத்தைப் போட்டு சிக்கியிருப்பார்கள், யாருக்காவது கடனாக பணத்தை கொடுத்து சிக்கி இருப்பார்கள், சொந்த பந்தங்களை நம்மை பணம் விஷயத்தில் சொத்து விஷயத்தில் ஏமாற்றி இருப்பார்கள்.
நமக்கு வரவேண்டிய பணம் வராமல், கோர்ட்டுக்கு கேஸ் வழக்குகளில் சிக்கி இருக்கும். அல்லது நமக்கு கடன் மூலமாக பணப்பிரச்சனை இருக்கிறது, வருமானம் இல்லை, நல்ல வேலை இல்லை, தொழிலில் லாபம் இல்லை, என்று பலதரப்பட்ட பணப் பிரச்சனைகள் இருக்கிறது, இப்போது மேலே சொன்ன விஷயங்கள் ஒரு சில விஷயங்கள் தான், இதையும் தாண்டி நீங்கள் ஏதாவது பணச்சிக்கலில் சிக்கியிருந்தால் கூட இந்த புரட்டாசி மாதத்தில் இந்த எளிமையான பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயமாக உங்களுக்கு இருக்கும் அந்த குறிப்பிட்ட பணப் பிரச்சனை நீங்கிவிடும்.
இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாள் வழிபாடு சிறப்பு என்று சொல்லுவார்கள் அதே அளவுக்கு அம்பான் வழிபாடும் சிறப்பு தான். எல்லா சக்தி ரூபமும் அம்பாள் தான் இதை நீங்கள் எந்த அம்பாள் கோவிலில் செய்தாலும் தவறு இல்லை. பெருமாள் கோவிலில் தாயார் இருப்பார்கள் அவர்களுக்கு இந்த வழிபாட்டை மேற்கொண்டாலும் தவறு இல்லை. சிவன் கோவிலில் அம்மன் இருப்பாங்க அவர்களுக்கு இந்த வழிபாட்டை செய்யலாம் அல்லது உங்கள் வீட்டு பக்கம் ஏதாவது தனி அம்மன் கோவில் இருக்கும். அந்த அம்மனுக்கு இந்த வேண்டுதலை வைத்து பரிகாரம் செய்தாலும் தவறு கிடையாது.
நெல்லிக்காய் மாலை கட்டி அம்பாளுக்கு போட வேண்டும். எத்தனை நெல்லிக்காய் 11 நெல்லிக்காய், 21 நெல்லிக்காய், 27 நெல்லிக்காய், 51 நெல்லிக்காய் உங்கள் வசதிக்கு ஏற்ப நெல்லிக்காய் வாங்கி அதை கோர்த்து அம்மனுக்கு மாலையாக போட்டு மனமுருகி வேண்டிக் கொள்ளுங்கள். எனக்கு இருக்கக்கூடிய பண பிரச்சனை தீர வேண்டும் என்று இதை புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு.
நெல்லிக்காய் மாலையை அம்மனுக்கு போட்டுவிட்டு அந்த அர்ச்சகரிடம் சொல்லி விடுங்கள். அந்த நெல்லிக்காயை ஒவ்வொன்றாக எடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுத்து விடலாம் என்று. அதை அர்ச்சகரே செய்தாலும் சரி அல்லது நீங்கள் போட்ட மாலையை மீண்டும் நீங்களே திரும்பவும் வாங்கி ஒவ்வொரு நெல்லிக்காயாக எடுத்து உங்கள் கையால் பக்தர்களுக்கு தானம் கொடுத்தாலும் சரி ஒரே ஒரு நெல்லிக்காய் மட்டும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
வீட்டிற்கு கொண்டுவந்து அதை நீங்கள் பிரசாதமாக சாப்பிட்டுக் கொள்ளலாம். இந்த நெல்லிக்காயை புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு சாத்தி அதை கோவிலிலேயே அடுத்தவர்களுக்கு தானம் செய்யும் போது உங்களுடைய பணப் பிரச்சனை நீங்கும் என்பது நம்பிக்கை. தீராத பண சிக்கலில் நீண்ட நாட்களாக சிக்கி இருக்கிறீர்கள் வரும் வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்துதான் பாருங்கள். உங்களுக்கு நடக்கும் நல்லதை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்புடன் வாழ சனிக்கிழமை வழிபாடு
பிறகு இந்த பரிகாரத்தை நீங்கள் நாலு பேருக்கு செய்ய சொல்லுவீர்கள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த பரிகாரம் இது. எனக்கு இவ்வளவு நெல்லிக்காய் வாங்க முடியாது. மாலை கோர்க்க முடியாது என்றாலும் மூன்று நெல்லிக்காய் வாங்கி அம்பாள் பாதத்தில் எடுத்து வைத்து மூன்று பேறுக்காவது தானம் கொடுத்து பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.