பணப்புழக்கம் அதிகரிக்க வெற்றிலையை இப்படி மடித்து வீடு, தொழில் ஸ்தானங்களில் வைத்தால் போதுமே!

பணம் என்பது வாழ்வில் அத்தியாவசியமாக இருக்கும் ஒரு விஷயமாகும். பணத்தைக் கொடுத்து தான் ஒவ்வொரு விஷயத்தையும் வாங்க வேண்டியது இருக்கிறது. நாம் சம்பாதிக்க நினைக்கும் பணமானது நம்மிடம் வந்து விட்டாலும், அதனை தக்க வைத்துக் கொள்வதில் இருக்கும் சூட்சமம் தான் யாருக்கும் தெரிவதில்லை. பணத்தை பணத்தால் தான் ஈர்க்க முடியும். கைகளில் பணம் புழங்கி கொண்டே இருக்க வேண்டும்? என்றால் இந்த சூட்சும பரிகாரத்தை செய்து நீங்களும் பார்க்கலாம்.

money

வாழ்க்கையில் எப்படியாவது பணத்தை சம்பாதித்து பெரிய ஆளாக வேண்டும் என்று நினைப்பவர்கள் பணத்தை சம்பாதிப்பது மட்டும் பெரிய விஷயம் அல்ல அதனை தக்க வைத்துக் கொள்வது என்பது தான் மிகவும் முக்கியமானது என்பதை உணர வேண்டும். பணம் தடை இல்லாமல் சீராக வருவதற்கு நீங்கள் தொழில் செய்யும் இடங்களில் இருக்கும் கல்லா பெட்டி போன்ற பணம் வைக்கும் இடத்தில் பச்சை நிற பேனாவை வைத்து கொள்ளலாம்.

பச்சை என்பது புதனுக்கு அதிபதி என்பதால் தொழில் விருத்தி, வியாபார விருத்தி, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்வு போன்ற நல்ல விஷயங்கள் நடைபெறும். புத பகவானுக்கு உகந்த பச்சை நிற பேனாவை நீங்கள் பயன்படுத்தா விட்டாலும் பரவாயில்லை அதில் வெறுமனே போட்டு வைத்தால் போதும்.

green pen

அது போல பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் கொண்டு செய்யப்படும் இந்த பரிகாரம் பணப் புழக்கத்தை அதிகரிக்க செய்யும் தாந்திரீக பரிகாரமாக இருந்து வருகிறது. இதனை வீடு, தொழில் போன்ற இடங்களில் எங்கு வேண்டுமானாலும் நாம் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை புதன் கிழமை அன்று செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

புதன் கிழமை அன்று மதியம் 1 மணியிலிருந்து இரண்டு மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்வது நல்லது. முதலில் ஐந்து பெரிய வெற்றிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வெற்றிலைகளை ஒவ்வொன்றாக பிரித்து வைத்துக் கொண்டு அதில் லேசாக சுத்தமான பசு நெய்யை தடவி கொள்ள வேண்டும். பச்சை நிற பட்டு துணி ஒன்றை சிறிய அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த நெய் தடவிய வெற்றிலைகளை வைத்து நன்கு முடிந்து கொள்ள வேண்டும்.

vetrilai-kodi

பின்னர் இதனை உங்கள் வீட்டின் பூஜை அறை, வியாபார தலத்தில் இருக்கும் பணம் வைக்கும் இடம் போன்றவற்றில் வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது தொழில், வியாபாரம் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் மீண்டும் தலைதூக்க ஆரம்பிக்கும். வருமானக் குறைவு, வியாபாரம் மந்தம், தொழில் விருத்தி இன்மை போன்ற பிரச்சினைகள் நீங்க இந்த பரிகாரத்தை எல்லோரும் செய்து பார்க்கலாம்.

puthan

ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். கடைசியாக வைத்த வெற்றிலைகளை எடுத்து கால் படாத இடங்களில் போட்டு விட வேண்டும். உங்களுக்கு அருகில் நீர் நிலைகள் இருந்தால் அந்த வெற்றிலைகளை அதில் போட்டு விடலாம். மீண்டும் புதிய வெற்றிலைகளை இதே மாதிரி செய்து அதே பட்டுத் துணியில் வைத்து முடிந்து திரும்பவும் வைத்து விடலாம். மிகவும் சக்தி வாய்ந்த இந்த எளிய தாந்த்ரீக பரிகாரம் செய்து பார்த்தால் பணம் உங்களிடமும் சாதாரணமாக புரள ஆரம்பிக்கும்.