பண வரவை அதிகரிக்கும் நொச்சி வேர் பரிகாரம்

mahalakshmi nochi
- Advertisement -

பணம் இல்லாமல் இந்த உலகத்தில் எதுவுமே நடக்காது. எதையுமே நம்மால் சாதிக்க முடியாது. அப்படிப்பட்ட பணத்தை சம்பாதிப்பது என்பதே மிகப்பெரிய விஷயமாக திகழ்கிறது. அப்படியே சம்பாதித்தாலும் அந்த பணத்தை நம்மால் சேர்த்து வைக்கவோ அல்லது அடுத்த கட்ட முன்னேற்ற நிலைக்கு செல்லவோ முடியாத சூழ்நிலை உண்டாகிறது. பணரீதியாக நமக்கு எப்பேற்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் கஷ்டங்கள் வந்தாலும் அவை அனைத்தும் நீங்கி பல மடங்கு பணவரவு அதிகரிப்பதற்கு நொச்சி வேரை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணம் வரவை அதிகரிக்க

பொதுவாக பணத்தை வசியம் செய்வதற்கு என்று பல வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றாக கருதப்படுவது தான் வேர் பரிகாரம். சில குறிப்பிட்ட செடிகளில் இருந்து வேரை எடுத்து வந்து அதை சுத்தம் செய்து பரிகாரம் செய்வதன் மூலம் பணவசியம் என்பது ஏற்படும். அப்படி பணவசியம் ஏற்பட்டு விட்டால் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நம் கையில் பணம் வந்து கொண்டே இருக்கும் நிலையும் உண்டாகும். அப்படிப்பட்ட வேர்களில் ஒன்றுதான் நொச்சி வேர்.

- Advertisement -

நொச்சி வேர் கிடைக்காத பட்சத்தில் வெண்குன்றின் வேரையும் இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்தலாம். இந்த இரண்டு பேர்களில் எந்த வேறு நமக்கு கிடைக்கிறதோ அந்த வேரை எடுத்து வந்து காய்ச்சாத பசும்பாலில் 10 நிமிடம் போட்டு ஊற வைக்க வேண்டும். பிறகு அதை சாதாரண தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு மறுபடியும் பத்து நிமிடம் பன்னீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து அந்த வேரை எடுத்து எலுமிச்சை பழ சாறில் போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து எடுக்க வேண்டும். இதுதான் சுத்தி செய்யும் முறை.

இப்படி செய்து விட்டு அருகில் இருக்கக்கூடிய அம்மன் ஆலயத்திற்கோ அல்லது மகாலட்சுமியின் ஆலயத்திற்கு இந்த வேரை எடுத்துச் சென்று அம்மனின் பாதங்களில் வைத்து மனதார வழிபாடு செய்து விட்டு பிறகு அந்த வேரை வீட்டிற்கு எடுத்து வாருங்கள். பலரது இல்லங்களிலும் வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி எந்திரம், குபேர எந்திரம் என்ற பல எந்திரங்கள் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த எந்திரத்தின் முன்பாக இந்த வேரை வைக்க வேண்டும். எந்திரம் இல்லை என்பவர்கள் மகாலட்சுமி தாயாரின் படம் அல்லது அம்பாள் படத்திற்கு முன்பாக இந்த வேரை வைத்து விடவும்.

- Advertisement -

பிறகு ஒரு தலை வாழ இலையைப் போட்டு அதில் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், அவல், பொரி கடலை, தேங்காய் என்று ஒரு சிறிய படையல் ஆக போட்டுக் கொள்ளுங்கள். பிறகு ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்

காடு வெட்டி போட்டு கடிய நிலம் திருத்தி வீடு கட்டிக் கொண்டிருக்கும் வேல் வணிகர் வீடு கட்டு இன்றைக்கு வந்த அம்மா இலட்சுமியே என்றைக்கும் நீங்காதிரு.

- Advertisement -

இப்படி தொடர்ந்து 48 நாட்கள் நாம் இந்த பாடலை 11 முறை தீபம் ஏற்றி வைத்து கூறுவதன் மூலம் பணவசியம் என்பது ஏற்படும். வீட்டில் மகாலட்சுமியின் அனுகிரக பார்வை ஏற்பட்டு செல்வ செழிப்பு மேலோங்கும்.

இதையும் படிக்கலாமே: செல்வ வளத்துடன் வாழ வாராஹி வழிபாடு

இந்த பரிகாரத்தில் வேரை வாங்குவது மட்டும்தான் சிறிது சிரமம். மற்றவை அனைத்தும் எளிமையாகவே செய்து விட முடியும் என்பதால் சிறிது சிரமப்பட்டு உண்மையான வேராக வாங்கி இந்த பரிகாரத்தை செய்து கோடீஸ்வர யோகத்தை பெற வேண்டும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -