ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டும் என்றால் அவருடைய வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான அளவு பணவரவு என்பது உண்டாக வேண்டும். பணவரவு எந்த அளவிற்கு சிறப்பாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கைத் தரமும் சிறப்பாக இருக்கும். அப்படிப்பட்ட பணவரவை தரக்கூடிய ஒரு அற்புதமான கடவுளாக திகழக்கூடியவர்தான் பெருமாளும் மகாலட்சுமி தாயாரும். மகாலட்சுமி தாயாரின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு முன்பாக பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். பெருமாளை மட்டும் வழிபாடு செய்தால் கூட மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது கிடைக்கும். அதனால் பெருமாளுக்கு உரிய ஏகாதசி திதஇ அன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு பெருமாளின் அருளோடு மகாலட்சுமி தாயாரின் அருளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஏகாதசி திதி என்று வீட்டில் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஏகாதசி தீப வழிபாடு
கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி திதி என்பது டிசம்பர் மாதம் 11-ம் தேதி புதன்கிழமை அன்று காலை 6 மணி அளவில் தொடங்குகிறது. அன்றைய தினம் மூன்று திதிகளும் ஒன்றாக சேர்ந்து வருகிறது என்பது இன்னும் கூடுதல் சிறப்பை தரக்கூடியதாகவே திகழ்கிறது. மேலும் புதன்கிழமை பெருமாளுக்குரிய கிழமை என்பதாலும் அந்த கிழமையில் பெருமாளுக்கு உகந்த திதியான ஏகாதசி திதி வருகிறது என்பதும் கூடுதல் சிறப்புக்குரியதாகவே திகழ்கிறது. அன்றைய தினத்தில் நாம் வீட்டிலேயே இந்த ஒரு எளிமையான தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது நம்மளுடைய பணத் தேவை என்பது பூர்த்தியடையும். பணவரவும் அதிகரிக்கும்.
புதன்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அல்லது மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் அல்லது இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் புதன் ஹோரை என்பது வரும். இந்த மூன்று நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து அந்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாள தட்டை எடுத்து வைத்து அதற்கு மேல் துளசி இலைகளை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.
துளசி கிடைக்காத பட்சத்தில் வாசனை நிறைந்த மலர்களை வைத்தும் தீபம் ஏற்றலாம். இந்த தீபம் முழுமையாக ஒரு மணி நேரம் எரிய வேண்டும். இந்த தீபச்சுடரொளியை பார்த்தவாறு ஓம் நமோ நாராயணாய நமோ நமஹ என்னும் மந்திரத்தை தங்களால் இயன்ற அளவு கூற வேண்டும். இயன்றவர்கள் அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை வழிபாடு செய்வது இன்னும் கூடுதல் பலனை தரும். அதிலும் குறிப்பாக மீதம் இருக்கக்கூடிய இரண்டு புதன் கோரையில் ஏதாவது ஒரு புதன் ஹோரையில் சென்று வழிபாடு செய்யலாம் அல்லது வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்ட பிறகு கூட கோவிலுக்கு சென்று பெருமாளை வழிபாடு செய்யலாம்.
இதையும் படிக்கலாமே:குபேர சம்பத்து பெற கைசிக ஏகாதசி வழிபாடு
பெருமாளுக்கு உகந்த திதியான இந்த வளர்பிறை ஏகாதசி திதி அன்று பெருமாளை வழிபாடு செய்பவர்கள் இந்த ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய அவர்களுக்கு பணவரவு என்பது அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.