- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவை அதிகரிக்கும் வளர்பிறை சஷ்டி

பண வரவை அதிகரிக்கும் வளர்பிறை சஷ்டி

- Advertisement -

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாக பல நாட்கள் இருந்தாலும் உகந்த திதியாக சஷ்டி திதி திகழ்கிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமி நிறைவடைந்த பிறகு வரக்கூடிய ஆறாவது நாளில் தான் சஷ்டி திதி என்பது வரும். தேய்பிறையில் வரக்கூடிய சஷ்டியில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய சங்கடங்கள் தீரும் என்றும், வளர்பிறையில் வரக்கூடிய சஷ்டியில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது குழந்தை பாக்கியம் கிடைப்பது, பணவரவு அதிகரிப்பது போன்ற பல நல்ல விஷயங்கள் வந்து சேரும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் வளர்பிறை சஷ்டி நாளில் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பண வரவை அதிகரிக்க வழிபாடு

சஷ்டி விரதம் இருக்கக்கூடிய பலரது வேண்டுதலாக இருப்பது குழந்தை பாக்கியமே. இருப்பினும் குழந்தை பாக்கியத்தை தவிர்த்து விட்டு மற்ற பிற நல்ல காரியங்களுக்கும் நாம் சஷ்டி விரதத்தை மேற்கொள்ளலாம். ஏதாவது ஒரு வேண்டுதலை முன்வைத்து முழு மனதோடு சஷ்டி திதி அன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வதன் மூலம் முருகப்பெருமானின் அருளால் நாம் வேண்டிய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வளர்பிறை சஷ்டி வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் பொழுது நமக்கு சுக்கிர யோகமும் உண்டாகும்.

- Advertisement -

பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வளர்பிறை சஷ்டி வருகிறது. இது மாலை 7 மணி வரை இருக்கிறது என்பதால் சஷ்டிக்குரிய வழிபாடு முறைகளை ஏழு மணிக்குள் நிறைவு செய்து கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வருவதால் இதை சுக்கிர சஷ்டி என்று கூட கூறலாம். இந்த சஷ்டி நாளில் சுக்கிர நேரத்தில் நாம் வழிபாடுகளையோ அல்லது பரிகாரங்களையோ மேற்கொள்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் பணவரவு என்பது அதிகரிக்கும்.

அதனால் இந்த பரிகாரத்தை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இருக்கக்கூடிய சுக்கிர ஹோரையில் செய்ய வேண்டும். அதற்கு முன்பாகவே சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு மலர்களை சாற்றி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு அகல் விளக்கை வைத்து சுக்கிர பகவானின் தானியமான வெள்ளை மொச்சையை அதில் வைக்க வேண்டும். பிறகு அதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். அந்த ஒரு ரூபாய் நாணயத்திற்கு மேலாக ஆறு மிளகை வைக்க வேண்டும். இப்படி வைத்த இந்த பொருள் முருகப் பெருமானின் பாதத்தில் இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு உங்களுக்கு தெரிந்த முருகப்பெருமானின் பாடல்களை பாடி முருகப்பெருமானை முழுமனதோடு வழிபாடு செய்து கொள்ளுங்கள். அன்று முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரத்தில் இந்த பொருட்களை எடுத்து அதில் இருக்கக்கூடிய மிளகை மட்டும் தனியாக எடுத்து வீட்டில் இருக்கக் கூடிய அனைவரையும் வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றி கால் படாத இடத்தில் போற்று விட வேண்டும். ஒரு ரூபாய் நாணயத்தை செலவு செய்யாமல் பத்திரமாக பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். வெள்ளை மொச்சையை பறவைகளுக்கு தானமாக சனிக்கிழமை அன்று காலையில் போட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான தோஷங்கள் நீங்குவதோடு பண வரவும் பல மடங்கு அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: வளர்பிறை சஷ்டி விரதம்

வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான இந்த பொருட்களை பயன்படுத்தி முருகப்பெருமானுக்குரிய சஷ்டி திதியில் பரிகாரம் செய்பவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்