- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவை அதிகரிக்கும் திருவோண பரிகாரம்

பண வரவை அதிகரிக்கும் திருவோண பரிகாரம்

- Advertisement -

நம்முடைய அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமான அளவு பணவரவு என்பது நமக்கு வேண்டும். பணவரவு வராததால் தான் பலரும் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடன் வாங்குகிறார்கள். கடனை வாங்கிவிட்டு அதை கட்ட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். அதனால் நமக்கு தேவையான, போதுமான அளவு பணவரவு வந்துவிட்டாலே கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும். ஏற்கனவே கடன் வாங்கி இருந்தாலும் மேற்கொண்டு கடன் வாங்காத சூழ்நிலையும் உண்டாகும். இந்த பணம் தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மகாலட்சுமி தாயார் உகந்த கடவுளாக கருதப்படுகிறார். மகாலட்சுமி தாயாருக்குரிய வெள்ளிக்கிழமையோடு பெருமாளின் திருவோண விரதமும் சேர்ந்து வருவதால் இன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் நம்முடைய பணவரவை அதிகரிக்கும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பண வரவை அதிகரிக்கும் பரிகாரம்

செல்வ செழிப்பு மிகுந்த தெய்வமாக திகழக்கூடியவர் மகாவிஷ்ணுவும் மகாலட்சுமியும் தான். இவர்கள் இருவரையும் நாம் ஒரு சேர வழிபாடு செய்ய வேண்டும். பலரும் பெருமாளை வழிபாடு செய்யாமல் மகாலட்சுமியை மட்டும் வழிபாடு செய்வார்கள். அப்படி செய்வதால் எந்த பலனும் இல்லை. பெருமாளை மட்டும் வழிபாடு செய்தில் கூட அவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். ஆனால் பெருமாளை தவிர்த்து விட்டு மகாலட்சுமியை மட்டும் வழிபாடு செய்பவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் கிடைக்காது. அந்த அளவிற்கு மகாலட்சுமி பதி பக்தையாக திகழ்கிறார். அப்படிப்பட்ட மகாலட்சுமிக்குரிய வெள்ளிக்கிழமை அன்று மகாவிஷ்ணுவின் திருவோண நட்சத்திரம் வருகிறது. இந்த நாளில் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை நாம் செய்யலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாள் முழுவதும் திருவோண நட்சத்திரம் இருக்கிறது என்பதால் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்குரிய துளசி இலையும், பச்சை கற்பூரத்தையும் நாம் நம்முடைய வீட்டு சமையலறையில் ஒரு இடத்தில் வைக்க வேண்டும். வேறு எதுவுமே செய்ய வேண்டாம். இரண்டையும் சிறு சிறு கிண்ணங்களிலோ அல்லது அகல் விளக்குகளிலோ எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

நம்முடைய வீடு சமையல் அறையில் பலவிதமான பொருட்களை போட்டு வைக்கும் டப்பாவை வைத்திருப்போம். அதில் மிகவும் வாசனை மிகுந்த டப்பாவாக திகழ்வதுதான் கரம் மசாலா போட்டு வைக்கும் டப்பா. பலரும் ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை போன்றவற்றை ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வைத்திருப்பார்கள். அந்த டப்பாவில் இருக்கக்கூடிய பல பொருட்கள் மகாலட்சுமியை ஈர்க்கக்கூடிய, பண வசியத்தை ஈர்க்கக்கூடிய பொருட்களாக திகழ்கின்றன. அந்த பொருட்களை நாமும் பலவிதமான பரிகாரங்களுக்கு பயன்படுத்தி இருப்போம். அந்த டப்பாவிற்கு மேல் துளசி இலையையும் பச்சை கற்பூரத்தையும் வைத்துவிட வேண்டும். வேறு எதுவுமே செய்ய வேண்டாம்.

- Advertisement -

இதை வைக்கும் பொழுது தேவையான அளவு பண வரவு வரவேண்டும் என்று பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் பரிபூரணமாக வேண்டி முழு மனதோடு வைக்க வேண்டும். அன்றைய நாள் முழுவதும் அது அப்படியே இருக்கட்டும். மறுநாள் துளசி இலை வாடிப் போய் இருக்கும். அந்த துளசி இலையை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். பச்சை கற்பூரம் அதுவாக கரையும் வரை அப்படியே இருக்கட்டும். வேறு எதுவுமே செய்ய வேண்டாம். இந்த துளசி இலையை கடையிலிருந்து வாங்கி வராமல் பெருமாள் ஆலயத்தில் இருந்து வாங்கி வந்து வைத்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: வளமான வாழ்க்கை அருளும் வளர்பிறை பிரதோஷம்

எளிதில் செய்யக்கூடிய இந்த பரிகாரத்தை முழுமனதோடு வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் திருவோணம் நட்சத்திர நாளில் செய்பவர்களுக்கு பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருளால் தேவையான பண வரவு உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்