- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

வராத பணம் திரும்பி வர, குழந்தைப்பேறு கிடைக்க, தடைகள் நீங்க சனிக்கிழமை தோறும் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டு வாருங்கள்

ஒரு மனிதன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அவனுக்கு பண செல்வம், பொருட்செல்வம் இவை இரண்டும் இருக்க வேண்டும். இதற்கு மேலாக குழந்தைச் செல்வம் கிடைக்க வேண்டும். இவை அனைத்தும் அமைந்திருந்தால் மட்டுமே ஒருவரது வாழ்க்கை முழுமையானதாக இருக்கும். இவற்றில் ஏதேனும் ஒரு குறைபாடு இருந்தாலும் நிறைவான வாழ்க்கை என்பதை வாழ முடியாது. இவ்வாறு பல வருடங்கள் குழந்தை இல்லாத தம்பதிகள் வெளியில் செல்லும் போதெல்லாம் பலருரும் அவர்களை கேட்கும் கேள்வி ஏதேனும் விசேஷம் உண்டா? இந்த கேள்வியை தவிர்ப்பதற்காகவே அவர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்துவிடுகின்றனர். இப்படி மன உளைச்சலுக்கு ஆளாகும் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் இந்த அரச இலை தீபத்தை சனிக்கிழமை தோறும் தொடர்ந்து ஏற்றிவர அனைத்து குறைபாடுகளும் நிவர்த்தியாகி குழந்தைச் செல்வம், பொருட்செல்வம் அனைத்தும் வந்து சேரும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இந்த சமுதாயம் பணம் படைத்தவனை உயர்ந்தவனாகவும், பணம் இல்லாதவனை தாழ்ந்தவனாகவும் பார்க்கிறது. பணக்காரர்களாக இருப்பவர்கள் எதை செய்தாலும் அவர்கள் தவறு செய்தாலும் கூட அவர்களின் தவறை தட்டிக் கேட்க எவரும் வருவதில்லை. ஆனால் பணம் இல்லாதவன் நன்மை செய்தாலும் அவன் பேச்சைக் கேட்க யாரும் இருப்பதில்லை.

- Advertisement -

இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட, தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் நன்மையாக நடைபெற இந்த அரச இலை தீபம் ஒன்று மட்டும் போதும். அரசமரத்தை வேர்ப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் திருமாலும், மேல் பகுதியில் சிவபெருமானும் இருப்பதாக ஐதீகம் உள்ளது. அவ்வாறு இந்த மரம் புனித மரமாக பார்க்கப்படுகிறது.

ஹோமத்தில் சேர்க்கப்படும் குச்சிகளில் அரச மரக் குச்சியும் ஒன்றாகும். இது குரு பகவானின் அருளைப் பெற்றது. அவ்வாறு ஒரு மரத்தின் இலை அல்லது கிளையை உடைக்கும் பொழுது அதிலிருந்து பால் சுரந்தால் அவ்வாறான மரங்கள் சுக்கிரன் மற்றும் சந்திரனின் அருள் பெற்றதாக கருதப்படுகிறது. அது போல பெரிய விருட்ச மரங்கள் அனைத்துமே சனீஸ்வர பகவானின் அருளைப் பெற்றதாகும்.

- Advertisement -

சிவன், திருமால், பிரம்மா, சனீஸ்வரன், குரு பகவான், சந்திரன் மற்றும் சுக்கிரன் இப்படி தேவர்களின் அருள் பெற்ற இந்த அரச மரத்தின் காற்றை சுவாசிப்பதே புனிதமானதாகும். இதன் மூலம் நாம் வேண்டியவை அனைத்தும் கிடைத்துவிடும். அதனால்தான் அனைத்து கோவில்களிலும் அரசமரமும் அதற்கிடையில் பிள்ளையார் மற்றும் நாக தெய்வங்களின் சிலைகளும் இருக்கின்றன. இவற்றைச் சுற்றி வருவதன் மூலம் நாம் எதிர்பாராத பல அதிசயங்கள் நடக்கின்றன.

எனவே சனிக்கிழமை அன்று அரச மரத்தின் இலைகளைப் பறித்துக் கொண்டு, அவற்றிற்கு மஞ்சள், குங்கும பொட்டு வைக்க வேண்டும். பின்னர் இரண்டு அகல் தீபங்களை எடுத்து அதற்கும் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு ஒரு தாம்பூலத்தட்டில் அரச இலை வைத்து, அதன் மீது இரு தீபங்களையும் நிலையின் நுனிப்பகுதியை பார்த்தவாறு வைக்க வேண்டும். பின்னர் இதனை பூஜை அறையில் வைத்து, 15 நிமிடங்கள் தீபத்தின் முன் அமர்ந்து தீப ஒளியை உற்று நோக்கி, உங்கள் வேண்டுதலை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு சனிக்கிழமை தோறும் தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -