பண வரவு அதிகரிக்க சர்க்கரை பரிகாரம்

sukiran sakkarai
- Advertisement -

ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல ஆடம்பரமான சுகபோக வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதற்கேற்ற சூழ்நிலை வருமானம் இல்லாமல் தவிப்பார்களே அன்றி வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அப்படியான வாழ்க்கையில் வாழத் தான் அனைவரும் விரும்புவார்கள். இப்படி வாழக் கூடிய வாய்ப்பை அருளக்கூடியவர் சுக்கிர பகவான்.

ஆகையால் தான் திடீரென வசதி வாய்ப்புடன் வாழக் கூடியவர்களை பார்த்து நாம் அவர்களுக்கு சுக்கிர திசை அடித்து விட்டது என்று சொல்லுவோம். அப்படியானால் நாம் சுப போக வாழ்க்கை வாழ சுக்கிரனின் அருள் ஆசை நிச்சயம் தேவை.அப்படியான சுக்கிரனின் யோகத்தை அனைவருமே பெற முடியும் என்று சொல்லப்படுகிறது. அது எப்படி என்பதை தான் வறுமை நீங்க ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

கோடீஸ்வர யோகம் தரும் பரிகாரம்

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை காலை 6:00 மணிக்கு முன்பாக செய்ய வேண்டும். ஆகையால் இதற்கான பொருட்களை முதல் நாளே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள் இதற்கு நமக்கு தேவை 600 கிராம் சர்க்கரை இதன் அளவு மிகவும் முக்கியம். அதே போல் இந்த சர்க்கரை வைத்து கட்டுவதற்கு ஒரு வெள்ளை நிற துணி ஐந்து ரூபாய் நாணயம் ஒன்று ஒரு ரூபாய் நாணயம் ஒன்று.

வெள்ளிக்கிழமை காலையில் குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டும். மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றுங்கள். அதன் பிறகு வாங்கி வைத்த சர்க்கரையை இந்த வெள்ளைத் துணியில் வைத்து அதில் ஐந்து ரூபாய் நாணயம் ஒரே ரூபாய் நாணயம் அனைத்தையும் வைத்து முடிச்சாக கட்ட வேண்டும்.

- Advertisement -

இந்த முடிச்சை பூஜை அறையில் வைத்து விட்டு ஓம் சுக்கிராய நமஹ என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள் அல்லது ஓம் மகாலட்சுமி தாயே நமக என்ற மந்திரத்தையும் சொல்லலாம். அதன் பிறகு இந்த முடிச்சு பூஜை அறையில் இருக்க வேண்டும். இதை எறும்பு மொய்க்காத அளவிற்கு பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை செய்த பிறகு 15 நாள் காத்திருக்க வேண்டும். 15 நாள் கழித்து வரும் புதன், சனி, செவ்வாய் இந்த மூன்றில் ஏதாவது ஒரு நாளில் இந்த முடிச்சை நவகிரகத்தில் உள்ள சுக்கிரனுக்கு முன்பாக வைக்க வேண்டும். அதற்கு ஆலயம் சென்று உடன் விநாயகரை முதலில் வழிபாடு செய்யுங்கள் அதன் பிறகு இந்த மூட்டையை கொண்டு சென்று சுக்கிரன் முன்பாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

அந்த நேரத்தில் உங்களுக்கு சுப போக வாழ்க்கை வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பின்னர் மறுபடியும் விநாயகரை ஒரு முறை வணங்கி விட்டு வீட்டுக்குள் வந்து விடுங்கள் அவ்வளவு தான் பரிகாரம். வருடத்திற்கு ஒரு முறை செய்யக் கூடிய இந்த பரிகாரம் வருடம் முழுவதும் நீங்கள் செல்வ செழிப்பாக வாழவதற்கான யோகத்தை தரும்.

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயார் சுக்கிரன் இவர்களுக்கு உகந்த நாள். அதே போல் வெள்ளை நிற சக்கரை நாணயங்கள் இவை அனைத்துமே மகாலட்சுமி தாயார் உகந்தது சுக்கிரனுக்கு உகந்தது இவற்றை கொண்டு செய்யப்படும் இந்த பரிகாரமானது கோடீஸ்வர யோகத்தை நிச்சயம் தரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பாவம் நீங்க தானம்

நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை உடன் செய்தால் நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -