உங்கள் வீட்டில் பணத்தட்டுப்பாடு நீங்க இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள் போதும்

tulasi-pariharam

பணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு மிக சிறந்த கலையாகும். அதிலும் சம்பாதித்த பணத்தை செலவுகள் ஏதுமின்றி சேமிப்பது என்பது பெரும் சாதனையாகவே இருக்கிறது. என்ன தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைத்தாலும், நாம் எதிர்பாராத வகையில் ஏதேனும் செலவுகள் ஏற்பட்டு அதிகம் பணம் சேமிக்க முடியாமல் போகிறது. சிலருக்கு தேவையற்ற செலவுகளும் ஏற்படுகிறது. ஏற்கனவே இருக்கின்ற பண சேமிப்பும் கரைகிறது. இவர்கள் அனைவருக்கும் மேற்கூறிய பிரச்சனைகள் தீருவதற்கு முன்னோர்கள் கூறிய ஒரு எளிய பரிகாரத்தை தெரிந்து கொள்ளலாம்.

வீண் விரையங்கள் ஏற்பட்டு தவிப்பவர்கள், எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் சேமிக்க முடியாமல் செலவினங்களை சந்திப்பவர்கள் தினமும் காலையில் உங்கள் வீட்டு துளசி மாடங்களில் இருக்கும் துளசிச் செடியிலிருந்து 20 துளசி இலைகளை பறித்து நீரில் போட்டு லேசாக கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு அந்த துளசி இலைகளை நீங்கள் பருகுகின்ற நீரில் போட்டு, “ஓம் தன பிராப்தி நமஹ” எனும் மந்திரத்தை மனதிற்குள் ஒன்பது முறை துதித்தவாறே நீரை பருக வேண்டும். இந்த பரிகாரத்தை உங்களின் முழு மனதோடு, அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ய வேண்டும்.

Thulasi

மேற்கண்ட முறையில் பரிகாரத்தை செய்பவர்களுக்கு எப்படிப்பட்ட பண கஷ்டங்களும் தீரும். வீண் விரயங்கள் ஏற்படாமல் காக்கும். சம்பாதிக்கின்ற பணத்தை அதிக அளவில் சேமிக்க முடியும். இந்த பரிகாரத்திற்க்கு குறிப்பிட்ட நாட்கள் தான் செய்ய வேண்டும் என்கிற காலவரையறை ஏதும் கிடையாது. உங்களின் பணம் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும் வரை பரிகாரத்தை செய்யலாம். உங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தாலும் மிகுதியான நன்மைகள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் வீட்டில் இந்த வேர் இருந்தால் பணம் தாராளமாக சேரும்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pana virayam theera in Tamil. It is also called as Pana kastam theera in Tamil or Pana prachanai theera in Tamil or Selvam sera pariharam in Tamil or Selvam peruga pariharam in Tamil.