- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇன்று 4-10-2025 புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை பரிகாரம்

இன்று 4-10-2025 புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை பரிகாரம்

- Advertisement -

இன்று புரட்டாசி மாதத்தில் வந்திருக்கும் மூன்றாவது சனிக்கிழமை. இது வளர்பிறையில் வந்திருக்கும் மூன்றாவது சனிக்கிழமை, என்பதால் இந்த புரட்டாசி மாத சனிக்கிழமை இரட்டிப்பு சிறப்பு. இந்த நாளில் நீங்கள் செய்யும் வழிபாடு உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு உடனடியாக ஒரு தீர்வை கொடுக்கும்.

செல்வ வளத்தில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள், இன்று திருப்பதி பெருமாளை நினைத்து பூஜை அறையில் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்து விடுங்கள். உங்களிடம் இருக்கும் பணம் அப்படியே இரட்டிப்பு மடங்கு அதிகரிக்கும். திடீர் பணக்கார யோகம் கிடைக்கும். கடன் சுமையிலிருந்து சுலபமாக விடுபடலாம்.

- Advertisement -

பரிகாரம்

எல்லோர் வீட்டிலும் இப்போது பூஜை அறையில் கண்ணாடி வைத்து வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். உங்களுடைய வீட்டில் பூஜை அறையில் கண்ணாடி இருந்தால், சரி. அந்த கண்ணாடியை வைத்து இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். பூஜை அறையில் கண்ணாடி இல்லை என்றாலும், வீட்டில் இருக்கும் கண்ணாடியை சுத்தமாக ஈரத்துணி கொண்டு துடைத்துவிட்டு, அந்த கண்ணாடியை பூஜை அறையில் வைத்தும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

கண்ணாடி முன்பு நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு வழிபாட்டு முறையும், எந்த ஒரு பிரார்த்தனையும் பல மடங்கு உங்களுக்கு பலனை கொடுக்கும். பத்து ரூபாய் நோட்டை கண்ணாடி முன்பு வைத்தால், அதில் பிரதிபலித்து 20 ரூபாய் நம் கண்களுக்கு தெரியும். அது போல தான் இன்று நீங்கள் வைக்கும் வேண்டுதல். இரட்டிப்பு மடங்கு உங்களுக்கு பலனை கொடுக்கப் போகிறது.

- Advertisement -

ஒன்னும் இல்லைங்க. பூஜை அறையில் கண்ணாடி வைத்து, அந்த கண்ணாடியில் பெருமாள் நாமம் வரைந்து கொள்ளுங்கள். சாதாரணமாகத்தான் திரிஷ்னம் நாமகட்டி வைத்து, கண்ணாடியில் நாமம் வரைந்து விட்டு, ஒரு கண்ணாடி பவுலில் சில்ரை காசுகளோ அல்லது புது ரூபாய் நோட்டுகளோ வைத்து, அதன் மேலே ஒரு பச்சை கற்பூரம் வைத்து பெருமாளே, என்னுடைய பண பிரச்சினை தீர வேண்டும், என்னுடைய வருமானம் பல மடங்கு உயர வேண்டும் என்று சொல்லி அந்த பவுலை, அப்படியே கண்ணாடி முன்பு வைக்க வேண்டும்.

நீங்கள் வைத்திருக்கும் பணம் கண்ணாடியில் இரட்டிப்பு மடங்கு பிரதிபலிக்கட்டும். பிறகு பூஜை அறையில் விளக்கு ஏற்றி துளசி இலைகளால் அந்த கிண்ணத்திற்கு அர்ச்சனை செய்து, வழிபாட்டை மேற்கொண்டாலே போதும். உங்கள் பண கஷ்டத்திலிருந்து விடுபடலாம்.

- Advertisement -

அர்ச்சனையில் சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் புரந்தராய நம

பணவரவை அதிகரிக்க இந்த மந்திரம் உங்களுக்கு உதவி செய்யும். இன்று ஒரு நாள் கண்ணாடிலில், அந்த பணம் அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். அடுத்த நாள் நீங்கள் அந்த பணத்தை எடுத்து சுபகாரியத்திற்காக செலவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: சனி மகா பிரதோஷ பரிகாரம்

கண்ணாடியை எடுத்து துடைத்து விட்டு எப்போதும் போல பயன்படுத்திக் கொள்ளலாம். இது ஒரு சுலபமான பரிகாரமாக தெரிந்தாலும், அபரி விதமான பலனை உங்களுக்கு கொடுக்கக்கூடிய ஆன்மீகம் சொல்லும் ,தாந்திரீகம். நம்பிக்கை இருந்தால் இதை நீங்கள் பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்