- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் முடக்கத்தை நீக்கும் பரிகாரம்

பணம் முடக்கத்தை நீக்கும் பரிகாரம்

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமான அளவு பணவரவு வேண்டும் என்றும் நம்முடைய எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு தேவையான பண வரவு வேண்டும் என்றுதான் பலவிதமான முயற்சிகளை செய்கிறோம். ஒரு சிலருக்கு சிறிதளவு மட்டும் முயற்சி செய்தாலேயே பெருமளவு லாபம் ஏற்பட்டு அவர்கள் நினைத்த வாழ்க்கையை வாழ்ந்து விடுவார்கள். இன்னும் சிலரோ எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் அவற்றில் ஒரு சிறு துளி கூட லாபம் என்பது ஏற்படாமல் அதற்கு எதிர்மறையாகவே சென்று பெரிய பணம் முடக்கத்தில் சிக்கிக் கொண்டு தவிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய வெற்றிலை பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பணம் முடக்கத்தை நீக்க பரிகாரம்

பணம் தொடர்பான எந்த ஒரு வேண்டுதலாக இருந்தாலும் வழிபாடாக இருந்தாலும் பரிகாரமாக இருந்தாலும் அதற்கு முதலில் நாம் வணங்கக்கூடிய தெய்வமாக திகழ்பவர் மகாலட்சுமி தாயார் தான். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரை நினைத்துக் கொண்டு மகாலட்சுமி தாயாருக்குரிய சில பொருட்களை பயன்படுத்தி நாம் செய்யக்கூடிய பரிகாரமானது. நம்முடைய வாழ்க்கையில் பணமுடக்கத்தை நீக்கி தாராள பணவரவை ஏற்படுத்தும். எப்பொழுதுமே நமக்கு பணவரவு என்பது இருந்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா? அதனால் இப்படிப்பட்ட பரிகாரங்களை நாம் ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக செய்யும் பொழுது அந்த மாதம் முழுவதுமே நமக்கு பணவரவு உண்டாகும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை அமாவாசை முடிந்து வரக்கூடிய புதன், வியாழன், வெள்ளி இந்த மூன்று நாட்களிலும் தொடர்ச்சியாக நாம் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு இரண்டு வெற்றிலை, ஒரு கொட்டை பாக்கு, ஒரு ஏலக்காய் மற்றும் 15 ரூபாய் வேண்டும். மூன்று நாட்களுக்கும் இதே பொருட்கள்தான் தேவைப்படும். புதன்கிழமை அன்று இரண்டு வெற்றிலைக்கு மேல் கொட்டைப்பாக்கு, ஏலக்காய், 15 ரூபாயை வைத்து அதை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கு அனைத்து தெய்வங்களையும் தரிசனம் செய்து வழிபாட்டை நிறைவு செய்த பிறகு கடைசியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய வேண்டும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்த பிறகு அந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய தல விருச்சத்தின் அடியில் இந்த வெற்றிலை பாக்கு, ஏலக்காய், 15 ரூபாயை வைத்துவிட வேண்டும். பிறகு நேராக வீட்டிற்கு வரவேண்டும். அடுத்த நாளும் இதே போல் வெற்றிலை பாக்கு, ஏலக்காய், 15 ரூபாயை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு வங்கிக்கு சென்று அங்கு ஏதாவது ஒரு ஓரத்தில் இதை வைத்து விட்டு வர வேண்டும்.

- Advertisement -

மூன்றாவது நாளும் இதே போல் வெற்றிலை பாக்கு, ஏலக்காய், 15 ரூபாயை எடுத்துக் கொண்டு ஜன நடமாட்டம் அதிக அளவு இருக்கக்கூடிய பொது இடத்திற்கு சென்று இதை வைத்துவிட்டு வரவேண்டும். அதிலும் குறிப்பிடத்தக்க வகையில் படம் பார்க்க செல்லும் தியேட்டரில் இதை வைப்பது மிகவும் சிறப்பு. இப்படி நாம் செய்வதன் மூலம் தெய்வ வசியம், தனவசியம், ஜன வசியம் போன்ற மூன்று வசியமும் உண்டாகி நம்முடைய வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமான அளவு பண வரவை மகாலட்சுமி தாயார் அருள்வார். ஒவ்வொரு மாதமும் இதே முறையில் மூன்று நாட்கள் நாம் இப்படி செய்வதன் மூலம் அந்த மாதத்திற்குரிய போதுமான அளவு பண வரவு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வ தோஷத்தை நீக்கும் தீப வழிபாடு

மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய இந்த பொருட்களை முழுமனதோடு நாம் தானம் செய்வது போல் செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருளால் பல மடங்கு பணவரவு உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்