உங்கள் வீட்டில் பண மழை பொழிய தவறாமல் செய்ய வேண்டிய 3 விஷயங்கள் என்ன?

lakshmi-cash

எல்லோருடைய வீட்டிலும் பணமழை பொழிய வேண்டும் என்பது ஆசை தான். ஆனால் அதற்கு என்ன செய்வது? அவரவர்களின் கிரக நிலையின் படி தான் வாழ்க்கையும் அமைகிறது. நாம் செய்யும் செயல்களை பொறுத்து தான் நமக்கு நல்லவைகளும், தீயவைகளும் நடைபெறுகின்றன. அதனடிப்படையில் இந்த மூன்று செயல்களை தவறாமல் வீட்டில் கடைபிடிப்பவர்களுக்கு பணத்திற்கு பஞ்சமே இருக்காது என்கிறது பண ஈர்ப்பு விதி! அது என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

mahalakshmi3

ஒருவருடைய வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் இருக்க வேண்டுமென்றால் அந்த வீடு முதலில் சுத்தமாகவும், வாசனை நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். சுத்தமுள்ள இடத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக இருக்கின்றாள். மகாலட்சுமியின் அருள் பெற வீட்டை முதலில் லட்சணமாக வைத்துக் கொள்ளுங்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கல் உப்பு சேர்த்த தண்ணீரை கொண்டு வீடு முழுவதும் துடையுங்கள். வெண்கடுகு போட்டு சாம்பிராணி தூபம் காட்டுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கும். இதனை தவறாமல் செய்து வர வேண்டும்.

இரண்டாவதாக ஒருவருடைய வீட்டில் செல்வத்திற்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்றால் அந்த வீட்டில் வாஸ்து முறைப்படி கடிகாரம், கண்ணாடி, சுவாமி படங்கள், பீரோ போன்றவை இடம் பெற்றிருக்க வேண்டும். தெற்கு நோக்கிய திசையில் சாமி படங்களை வைத்தால் அங்கு துரதிஷ்டம் வரும். வடக்கு பார்த்தபடி பணத்தை வைத்தால் அங்கு அதிர்ஷ்டத்திற்கு பஞ்சமே இருக்காது. வரவேற்பறையின் நடு சுவற்றில் வட்ட வடிவ கடிகாரத்தை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்து பாருங்கள் பணமழை பொழியும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

money-plant1

பணம் செழிக்க மணிபிளான்ட் வளர்ப்பது பெரிதான விஷயமல்ல அதனை முறையாக பராமரித்து வர வேண்டும் மேலும் பர்பில் (purple) வண்ண நிறத்தில் அதனுடைய பாட்டில் அமைந்திருப்பது அதிர்ஷ்டத்தை தருமாம். மேலும் நெல்லிச்செடி, மருதாணி செடி, செம்பருத்தி, மாதுளை, துளசி, கற்றாழை ஆகிய செடிகள் வளர்த்து வந்தால் அந்த வீட்டில் கட்டாயம் பணமழை பொழியும். இவைகளில் மகா லட்சுமி குடியிருக்கிறாள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவைகளில் எது உங்களிடம் இருந்தாலும் அதற்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி பூஜை செய்து பாருங்கள். கேட்ட வரமெல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் பூஜையில் விளக்கு ஏற்றும் பொழுது நல்லெண்ணெய் அல்லது நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் கற்கண்டு போட்டு ஏற்றும் பொழுது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். மேலும் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் பொழுது அதற்கு அடியில் ஐந்து ரூபாய் நாணயத்தையும், அரிசியை சிறிதளவு போட்டு வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது தன தானியத்திற்கு குறைவிருக்காது என்பதும் தாந்த்ரீக பரிகாரங்களில் ஒன்றாகும்.

kamakshi vilakku

இந்த விஷயங்களை எல்லாம் முறையாக கடைபிடித்து வருபவர்களுக்கு தொழில் நஷ்டம், வியாபார நஷ்டம், வருமான நஷ்டம் என்கிற எதுவும் ஏற்படுவதில்லை. கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ வளம் ஆனது மென்மேலும் பெருகும் என்பது சாஸ்திர நம்பிக்கை. மேலும் பூஜை அறையிலும், பணம் வைக்கும் இடங்களிலும் பச்சை கற்பூரத்தை நொறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். தெய்வீக மணம் கமழும் வீட்டில் கட்டாயம் துரதிர்ஷ்டம் நீங்கி அதிர்ஷ்டம் வரும்.