கையில் காசு நிற்கவில்லையா? வெள்ளிக்கிழமையில் 5 ரூபாய் நாணயத்தை இப்படி செய்யுங்கள்! பணம் சரளமாக புழங்கும்.

lakshmi-5-rupee-coin

ஒருவருடைய கையில் பணம் சரளமாக புழங்கிக் கொண்டே இருக்க மகாலட்சுமியின் அருள் கட்டாயம் வேண்டும். பணம் என்பது நாளுக்கு நாள் நம்மிடம் இருந்து வேறொரு நபர்களின் கையில் மாறிக் கொண்டே இருக்கும் ஒரு விஷயமாகும். ஒரே இடத்தில் பணம் எப்பொழுதும் நிலைப்பது இல்லை. இத்தகைய பணமானது நம்மிடம் சரளமாக சேர சக்தி வாய்ந்த பரிகாரம் உண்டு. இதை செய்வதால் பணம் எப்பொழுதும் நிலைத்து உங்களிடம் இருக்கும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

lakshmi-devi

நம் கையில் பணம் சரளமாகப் புழங்க மகாலட்சுமியை வழிபட வேண்டும். மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்கு நாம் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட விஷயங்கள் உண்டு. மகாலட்சுமியின் சொரூபமாக இருக்கும் கல் உப்பு கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. கடலில் இருந்து எடுக்கப்படும் உப்பானது கடல் நீரில், அதாவது பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணன் மற்றும் மஹாலட்சுமியின் அம்சமாகும்.

இத்தகைய கல் உப்பை வெள்ளிக்கிழமையில் வாங்குவது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி அனைவருடைய வீடுகளிலும் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. மகாலட்சுமியை வரவேற்பதற்கு வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி சொரூபமாக விளங்கும் கல் உப்பை கடைக்கு சென்று புதிதாக வாங்க வேண்டும். மேலும் நாணயங்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. எனவே ஐந்து ரூபாய் நாணயத்தை மறக்காமல் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வீட்டில் கல் உப்பு எப்பொழுதும் குறைவாக இருக்கக்கூடாது. எப்போதும் நிறைந்து காணப்பட வேண்டிய ஒரு பொருளாகும்.

salt1

எனவே கல் உப்பு தீர தீர தொடர்ந்து கடைக்கு சென்று வாங்கி கொண்டு வந்து நிரப்பிக் கொண்டே இருங்கள். அப்படி நிரப்பும் பொழுது செல்வமானது குறையாமல் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் பூஜைகள் செய்யும் பொழுது கடைக்கு சென்று கல் உப்பை வாங்கி வந்து வைத்து விட வேண்டும். பூஜையில் கல்லுப்பு இடம் பெற்றிருப்பது மகாலட்சுமியை நாம் வரவேற்பதற்கு சமமாகும். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீனிவாச பெருமாளுடைய மனைவியாக விளங்கும் ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை பூஜிக்கும் போது கல் உப்பும் சேர்த்து ஒரு முறை சூடம் காண்பிக்க செய்ய வேண்டும்.

அதன் பின் அதனை ஒரு பீங்கான் ஜாடியில் பாதுகாப்பாக சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சமையல் செய்யும் பொழுது கல் உப்பை கைகளால் எடுத்து சமையலுக்கு போட வேண்டும். அப்போது தான் அந்த சமையலில் அன்னபூரணியின் அருள் நமக்குக் கிடைக்கும். உப்பு முழுவதுமாக நிரம்பியதும் அதிலிருந்து கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டு அதில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வையுங்கள். இது மற்றொரு வெள்ளிக்கிழமை வரை அப்படியே வைத்திருக்க வேண்டும்.

uppu jaadi

அடுத்த வெள்ளிக் கிழமையில் அதிலிருக்கும் உப்பை மட்டும் தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் கொட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டில் இருக்கும் திருஷ்டிகள் நீங்கி மகாலட்சுமி உடைய அருள் கிடைத்து செல்வ வளம் மேலும் மேலும் பெருகி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். சுயதொழிலில் மந்த நிலை இருப்பவர்கள் அனைவரும் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். ஐந்து ரூபாய் நாணயத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து கொள்ளுங்கள். இது போல் ஒன்பது வாரங்கள் சேகரித்த ஐந்து ரூபாய் நாணயத்தை அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று சமர்ப்பித்து விட்டு வந்து விடுங்கள்.