பணத்தை செலவு செய்யும் போதும், அடுத்தவர்களுக்கு கொடுக்கும் போதும், இப்படி கொடுக்கவே கூடாது! உங்கள் ஆயுசுக்கும் பணக்கஷ்டம் வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.

பணம் என்பது, சேமித்து வைப்பதற்காக மட்டும் அல்ல. செலவு செய்வதற்காகவும் தான். அந்த பணத்தை செலவு செய்யாமல், அப்படியே பூட்டி வைத்திருந்தால் அந்த பணத்தின் மூலம் நமக்கு எந்த ஒரு உபயோகமும் இருக்கப்போவது இல்லை. நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். இறைக்கிற கிணறுதான் சுரக்குமே தவிர, இறைக்காத கிணறு என்றைக்குமே சுரக்காது. அந்த விதத்தில் நாம் கையில் இருக்கும் பணத்தை நம்முடைய தேவைக்கு ஏற்றவாறு செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும். செலவே செய்யாமல் கஞ்சத்தனமாக எடுத்து வைக்கக்கூடிய பணம், வீண் விரயத்தை தான் ஏற்படுத்தும். தவிர நல்ல காரியத்திற்கு என்றைக்குமே உங்களால் பயன்படுத்த முடியாமல் போய்விடும். என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

cash

செலவோடு சேர்ந்த சேமிப்பும்  அவசியம் தேவை தான். செலவு செய்ய வேண்டும் என்று சொல்லி உள்ளார்கள் என்பதற்காக, எல்லா பணத்தையும் மிச்சம் வைக்காமல் செலவு செய்து விடாதீர்கள். செலவு செய்யும் போதும், நீங்கள் யாருக்கு பணம் கொடுத்தாலும், எதற்காக பணத்தை கொடுத்தாலும் மனநிறைவோடு கொடுக்க வேண்டும். அந்த பணத்தை பெறுபவர், நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் இருக்க வேண்டும். ‘நம்முடைய பணம் எல்லாம் நம்மை விட்டு செல்கிறதே!’ என்ற விரக்தியோடு பணத்தைக் கொடுத்தால் நாம் கொடுக்கக்கூடிய பணம் வேறுவிதத்தில் நம் கைக்கு வந்து சேரவே சேராது.

(நிறைய பேர் காய்கறி வாங்குவதற்காக பர்ஸ்ஸில் இருந்து பத்து ரூபாயை எடுத்து வெளியில் கொடுக்க ஆயிரம் முறை பேரம் செய்து, ஆயிரம் முறை யோசிப்பார்கள். ஆனால் அந்த நபர் மருந்து கடைக்குச் சென்று பேரம் பேசாமல், யோசிக்காமல் ஆயிரம் ரூபாயை நீட்டி மருந்து வாங்கி சாப்பிடுவார்கள் இதுதான் உண்மை. அதாவது காய்கறி காரர்களிடம் மிச்சப்படுத்தி, மருந்து காரர்களுக்கு கொண்டுபோய்க் கொடுத்து வீண் விரயத்தில் பணத்தை, பல மடங்கு செலவழிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கி விடும்.)

money

இனிமேல், நீங்கள் அடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கும் போது சந்தோஷமாக கொடுத்துப் பாருங்கள். அந்த பணம், கட்டாயமாக உங்களுக்கு வேறு வழியில் வந்து சேரும் என்பதில் சந்தேகமே கிடையாது. இது முதல் டிப்ஸ். இரண்டாவதாக, பணத்தை அடுத்தவர்களுக்கு கொடுக்கும்போது, இந்த சூட்சம முறைப்படி கொடுத்து பாருங்கள்! ரூபாய் நோட்டுகளை அடுத்தவர்களுக்கு கொடுக்கும்போது ரூபாய் நோட்டின், தலை பகுதியின் மேல் உங்களது கட்டைவிரல் இருக்க வேண்டும். உங்களது கட்டை விரலை அந்த சிங்கத்தின் மேல் வைத்துக்கொள்ளலாம்.

- Advertisement -

அதாவது ரூபாய் நோட்டில் சிங்கம் இருக்குமல்லவா? அந்த சிங்கம் மேல்பக்கம் பார்த்தவாறு, இருக்க வேண்டும். அந்த சிங்கத்தின் மேல் உங்களது கட்டைவிரல் இருக்கவேண்டும். இப்படியாக பணத்தை பிடித்துக்கொண்டு நீங்கள் அடுத்தவர்களுக்கு பணத்தை கொடுக்க வேண்டும்.

kadan

கொடுக்கும்போது இந்த முறையை நீங்கள் பின்பற்றி கொள்ளுங்கள். உங்களிடம் யாராவது பணம் கொடுத்தால், அவர்கள் எப்படி வேண்டும் என்றாலும் உங்கள் கையில் பணத்தை கொடுக்கலாம். ஆனால் நீங்கள் பணத்தை வாங்கிய பின்பு, உங்களது கட்டை விரலை அந்த சிங்கத்தின் மேல் வைத்து, மடித்து அதன் பின்பு பர்ஸ்ஸிலோ பீரோவிலோ எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

money

அதாவது எந்த ஒரு பொருளையும் ஆசிர்வாதம் செய்து நம்மிடம் வைத்துக்கொண்டால் அது நம்மிடம் தங்கிவிடும். அடுத்தவர்களுக்கு கொடுக்கக் கூடிய எந்த ஒரு பொருளையும் ஆசிர்வாதம் செய்து கொடுத்தால் அவர்களுக்கும் அந்த பொருள் நிலைத்திருக்கும். இந்த சூட்சம விதி தான் அனைத்திற்கும் பொருந்தும். அடுத்தவர்களுக்கு பணத்தை கொடுக்கும் போது அந்த படத்தின் தலையின்மேல் ஆசிர்வாதம் செய்துவிட்டுக் கொடுக்கப் போகிறீர்கள். அவ்வளவு தான்.

mahalashmi3

இது ஒரு சின்ன ட்ரிக் தாங்க! நீங்க ஃபாலோ பண்ணி பாருங்க. உங்களுக்கு ஒர்க்கவுட் ஆச்சுன்னா நல்ல லாபம் தானே! இதேபோல் எக்காரணத்தைக் கொண்டும் பணத்தை இரண்டாக மட்டும்தான் மடிக்க வேண்டும். தவிர, நான்காக, எட்டாக மடித்து திணித்து பர்ஸ்ஸிலோ சட்டைப் பையிலோ உள்ளங்கையில் வைத்து திணிக்கக் கொள்ளக் கூடாது என்பதையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே
வாயு ஸ்தலமாகிய ‘ஸ்ரீகாளஹஸ்தி’ வரலாற்றைக் கேட்டால் நீங்களே அதிர்ந்து போவீர்கள்! இப்படியெல்லாம் கூட நடக்குமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.