தீராத கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து வைக்கவும், பணரீதியான பிரச்சினைகள் தீரவும் கடன் தொடர்பான அனைத்து விதமான கஷ்டங்கள் நீங்கவும் காலபைரவர் வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவராக திகழக் கூடியவர் தான் கால பைரவர். காலபைரவர் எட்டு அவதாரங்களை எடுத்தார். அதில் ஒரு அவதாரமாக திகழ்வதுதான் சொர்ண ஆகர்ஷண பைரவர். மகாலட்சுமியும், குபேரரும் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு சொர்ண ஆகர்ஷண பைரவர் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சொர்ண ஆகர்சன பைரவரை அஷ்டமி தினத்தில் ஐந்து ரூபாய் வைத்து வழிபாடு செய்ய நமக்கு இருக்கக்கூடிய பணம் மற்றும் கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். அந்த தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணப்பிரச்சினை தீர்க்கும் பரிகாரம்
கால பைரவரின் அம்சமாக திகழக்கூடிய சொர்ண ஆகர்ஷன பைரவருடைய சன்னதி ஒரு சில ஆலயங்களில் மட்டும் தான் இருக்கிறது. அதற்காக அஷ்டமி தினத்தில் தேடி கண்டுபிடித்து சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே மனதார சொர்ண ஆகர்சன பைரவரை நினைத்து இந்த தாந்த்ரீக பரிகாரத்தை செய்தாலே அவருடைய அருளால் நமக்கு பணவரவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த வழிபாட்டை தேய்பிறை அஷ்டமி ஆன இன்று இரவு 12 மணிக்குள் செய்வது என்பது மிகவும் சிறப்பு. இதற்கு நமக்கு ஒரே ஒரு ஐந்து ரூபாய் நாணயம் இருந்தால் போதும். இந்த பரிகாரத்தை செய்பவர்கள் அசைவம் சாப்பிட்டிருக்கக் கூடாது. அதையும் மீறி தெரியாமல் சாப்பிட்டு இருந்தால் தலையில் மூன்று முறை தண்ணீரை தெளித்துவிட்டு குளித்துவிட்டு இந்த தாந்திர பரிகாரத்தை செய்யலாம். வீட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அமர்ந்து செய்யலாம். எந்த திசை பார்த்தவாரு வேண்டுமானாலும் அமரலாம். தரையில் அமர்பவர்கள் ஒரு விரிப்பை விரித்து அதற்கு மேல் அமர்ந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பெண்கள் மாதவிடாய் சமயத்தில் மட்டும் இதை செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
வலது கையில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதை இடது கையை வைத்து மூடி மடியில் வைத்துக்கொள்ளுங்கள். பிறகு இந்த மந்திரத்தை குறைந்தது 15 நிமிடமாவது முழுமனதோடு நிறுத்தி நிதானமாக காலபைரவரை நினைத்து கூற வேண்டும். நேரம் இருப்பவர்கள் அரை மணி நேரம் கூட செய்யலாம். அவசர அவசரமாக இந்த மந்திரத்தை கூறினால் இதில் எந்த பலனும் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்படி நாம் மந்திரத்தை கூறி முடித்த பிறகு இந்த ஐந்து ரூபாய் நாணயத்தை ஒரு பேப்பரிலோ அல்லது கவரிலோ அல்லது மஞ்சள் நிற துணியிலோ வைத்து மடித்து அதை நாம் பணம் வைத்திருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். வேறு எதுவும் செய்யக்கூடாது. இந்த முறையில் நாம் காலபைரவரை அஷ்டமி தினத்தில் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும்பொழுது காலபைரவரின் அருளால் அனைத்து விதமான செல்வ செழிப்பும் ஏற்படுவதோடு கடன் மற்றும் பண ரீதியான பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.
மந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஸ்வர்ணாகர்ஷ்ண பைரவாய நமஹ
இதையும் படிக்கலாமே:வாழைத்தண்டு திரி தீபம் ஏற்றும் பலன்கள்
அஷ்டமி சமயத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவரை நினைத்து வீட்டிலேயே இந்த முறையில் தாந்திரீக பரிகாரம் செய்பவர்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான பணம் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.